Krishna Jayanthi Speech in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கிருஷ்ண ஜெயந்தி பேச்சு போட்டி (Krishna Jayanthi Speech in Tamil) பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு 2024 கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில், கிருஷ்ண பகவான் பற்றி நாம் அனைவருமே அறிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் கிருஷ்ண ஜெயந்தி பற்றி மற்றவர்களுக்கு விவரிக்கும் வகையிலும் இப்பதிவில் கிருஷ்ண ஜெயந்தி பற்றிய பேச்சு போட்டி கொடுத்துள்ளோம்.
கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, பள்ளியில் பயிலும் மாணவர்கள் Krishna Jayanthi Speech in Tamil பெற விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி பூஜை வீட்டில் செய்வது எப்படி.?
கிருஷ்ண ஜெயந்தி பேச்சு போட்டி:
- கிருஷ்ண பகவான் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று பல பெயர்களில் கொண்டாடி வருகிறோம். பகவான் மகா விஷ்ணு எடுத்த எட்டாவது அவதாரம் கிருஷ்ண அவதாரம்.
- வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக ஆவணி மாதம் அஷ்டமி நாளில் பகவான் அவதாரம் எடுத்தார். அதனால் தான் ஆவணி மாதத்தில் வரக்கூடிய அஷ்டமியை ஜென்மாஷ்டமி என்று வழிப்படுகிறோம். கிருஷ்ணருக்கு கேசவன், கோபாலன், கோவிந்தன் போன்ற பெயர்களும் உள்ளது.
- மதுரா நகரில் வசுதேவர் – தேவகிக்கு எட்டாவது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். கிருஷ்ணர் சிறைச்சாலையில் பிறந்தார். சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ப்புத்தாய் யசோதையால் வளர்க்கப்பட்டார்.
- கொடியவனான, கம்சனை வதம் செய்து துவாரகையில் அரசாட்சி செய்தார். எனவே, கிருஷ்ணர் அவதரித்த நாளை தான் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி பண்டிகையாக கொண்டாடுகிறோம்.
- கிருஷ்ண ஜெயந்தி, நாடு முழுவதும் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. அன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- கிருஷ்ண ஜெயந்தி அன்று, குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டிற்குள் வருவது போல் வரைந்து கிருஷ்ணரை வீட்டிற்குள் அழைப்பார்கள். இப்படி செய்தார் கிருஷ்ணரே வீட்டிற்கு வந்து அருள் புரிவார் என்பது ஐதீகம்.
- கிருஷ்ண ஜெயந்தி அன்று, சிறுவர் சிறுமிகளை கண்ணன் ராதை போல அலங்கரித்து மகிழ்வார்கள். மேலும், அன்றைய தினம் கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், சீடை, லட்டு அப்பம், தட்டை மற்றும் பால்திரட்டு போன்றவைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். கிருஷ்ண ஜெயந்தி நாளில், உறியடி நிகழ்ச்சி தான் மிகவும் பிரபலமாக நடைபெறும்.
- எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.! என்ற பகவான் கிருஷ்ணரின் உபதேசத்தை கூறி வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.. நன்றி வணக்கம்.
குழந்தை இல்லாதவர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |