சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தி பற்றிய 10 வரிகள்.!

Advertisement

Gandhi Speech in Tamil 10 Lines

நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி அவர்கள். இந்திய விடுதலை போராட்டத்தை தலைமையேற்று நடத்தி இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்ததால் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். அகிம்சைவழி போராட்டங்கள் மூலம் நம் நாட்டை ஆங்கிலேயரிடம் இருந்து மீட்டு தந்த தியாகி மகாத்மா காந்தி அவர்களின் பெருமையை சொல்ல புத்தகத்தின் பக்கங்கள் பத்தாது. எனவே பள்ளி மாணவர்களுக்கான மகாத்மா காந்தி பற்றிய 10 வரிகளை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

Mahatma Gandhi Speech 10 Lines in Tamil:

 mahatma gandhi speech 10 lines in tamil

  1. மகாத்மா காந்தி அவர்கள் 1869 ஆம் ஆண்டு அக்டோபர்  2 ஆம் தேதி அன்று குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கரம்சந்த் காந்தி மற்றும் அவரது தாயார் புத்லி பாய் ஆவார். இவரது தாய்மொழி குஜராத்தி ஆகும்.
  2. மகாத்மா காந்தி அவர்கள் 13 ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாய் என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மொத்தம் 4 ஆண் பிள்ளைகள்.மகாத்மா காந்தி அவர்கள் தனது 16 ஆம் வயதில் தந்தையை இழந்தார். பிறகு 18 வயதில் தனது பள்ளி படிப்பை முடித்த காந்தி அவர்கள் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார்,
  3. பிறகு, காந்தி ஜி அவர்கள் லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.மகாத்மா காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவில் சிவில் உரிமைகளுக்காக கடுமையாக போராடினர்.
  4. அரசியல் வாழ்க்கையில் நுழைந்த காந்தி அவர்கள் கோபால் கிருஷ்ணா கோகலேவை தனது அரசியல் வழிகாட்டியாக கருதினார்.
  5. ரவீந்திரநாத் தாகூர் என்பவர் காந்தி அவர்களுக்கு “மகாத்மா” என்ற பெயரினை வழங்கினார்.
  6. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு, ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போராட்டங்களில் மிகவும் முக்கியமானது காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் தான்.
  7. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே ஆங்கிலேயர்கள் சொல்லப்படும் எந்தவொரு கூற்றுக்கும் இந்தியர்கள் யாரும் செவிசாய்க்க கூடாது என்பதே ஆகும்.
  8. காந்திஜி டூ அல்லது டை, பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறு போன்ற  கோஷங்களை எழுப்பி போராடினார். இவரது பல போராட்டங்களுக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றது. 
  9. இந்தியாவின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் 1948 ஆம் ஆண்டு ஜனவரி30 ஆம் தேதி நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார்.
  10. இவர் மறைந்த நாளான ஜனவரி 30 ஆம் நாளை தியாகிகள் தினமாக கொண்டப்படுகிறது.

எத்தனை தலைவர்கள் இந்நாட்டில் வாழ்ந்து மறைந்தாலும் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அதிகம் பேசப்படுவது “தேசத்தின் தந்தை” என போற்றப்படும் மகாத்மா காந்தி அவர்களை பற்றித்தான்.

மகாத்மா காந்தியின் சில பொன்மொழிகள்..!

இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க Tamil Katturai

 

Advertisement