மத நல்லிணக்கம் கட்டுரை | Matha Nallinakkam Katturai in tamil

Matha Nallinakkam Speech in Tamil

சமய நல்லிணக்கம் கட்டுரை | Samaya Nallinakkam Katturai in Tamil

ஒரு நாட்டின் வளர்ச்சி அங்கு வாழும் நாட்டு மக்களிடத்தில் உள்ளது. நாட்டு மக்கள் பின்பற்றும் சமயங்களுக்கு இடையே சகிப்பு தன்மையும், நல்லிணக்கமும் இருக்க வேண்டும். இப்போது உள்ள சூழலில் மக்களுக்கு இடையில் இனப்பற்றும், சமயப்பற்றும் குறைந்து வருகிறது. அதனால் சில நாடுகள் அழிவுப்பாதையை நோக்கி செல்கின்றன. இத்தகைய சூழலில் மக்களுக்கு மத நல்லிணக்கத்தை பற்றி தெரிய வேண்டும். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் மத நல்லிணக்கத்தை பற்றி கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
மதம் உருவானதற்கான காரணம்
மதங்களின் போதனை
நல்லிணக்கத்தை பாதிக்கும் காரணிகள்
முடிவுரை

முன்னுரை:

Matha Nallinakkam Katturai in tamil: ஒற்றுமை நாடு இந்தியா என்று சொல்லும் அதே நாட்டில் தான் பல விதமான பிரிவினைகள். பழங்காலத்தில் இருந்த மக்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடின்றி வாழ்ந்து வந்தனர். மனிதனின் நாகரிகம் மாற மாற பூமியில் பிரிவினைகளும் உருவாக ஆரம்பித்து விட்டன.

மதம் உருவானதற்கான காரணம்:

  • Matha Nallinakkam Speech in Tamil: மனிதனை நல்வழிப்படுத்தி சரியான பாதையில் வாழச் செய்வதற்கு உருவாக்கப்பட்ட மதங்கள், இன்று மனிதனை அடிமையாக்கி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மக்கள் பல்வேறு சமயங்களை தமது முன்னோர்களின் வழியாக பின்பற்றுகின்றனர்.
  • மதங்கள் உருவாவதற்கு முக்கிய காரணமே ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் அரசிடம் இருந்து வரும் சலுகைகள் பெற வேண்டும் என்ற நோக்கில் தான்.
  • நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமே மத சுதந்திரம் உள்ளது. இந்து மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம், யூத மதம் மற்றும் பௌத்த மதம் போன்றவை உள்ளது.

மதங்களின் போதனை:

  • மத நல்லிணக்கம் கட்டுரை: எந்த மதமும், கடவுளும் யாரையும் துன்புறுத்த சொல்லவில்லை. இந்து சமயத்தில் அன்பே சிவம் என்று பகவத் கீதை சொல்கிறது. அனைத்து உயிர்களிடத்தும் அன்பாகவும், இல்லாதவர்களுக்கு தேவையானவையை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது.
  • உன்னை எப்படி நேசிக்கிறாயோ அதே போல் மற்றவரையும் நேசிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார். அன்பையும், அமைதியையும் போற்றி வாழ வேண்டும் என்று பௌத்த மதம் கூறுகிறது. மனிதத்தை காத்து வாழ வேண்டும் என்று இஸ்லாமிய மதம் கூறுகிறது.

நல்லிணக்கத்தை பாதிக்கும் காரணிகள்:

  • Matha Nallinakkam Katturai in tamil: சமய சுதந்திரம் இருப்பதால் தான் சில மத பிரச்சாரகர்கள் தங்களது மதம் பரவ வேண்டும் என்பதற்காக மத கூட்டங்களில் பிற சமய கொள்கைகள், கோயில்கள், கோயில் நகரங்களை ஏளனம் செய்கின்றனர். இதனால் மக்களிடையே ஒற்றுமை வளராது மாறாக வெறுப்பும், கசப்பு உருவாகும்.
  • மதங்கள் உருவானது மனிதர்களை பிரிப்பதற்கு அல்ல ஒன்றாக வாழ்வதற்கே என்பதை அனைவரும் புரிந்து கொண்டு வாழ வேண்டும்.

முடிவுரை:

  • Matha Nallinakkam Speech in Tamil: இந்த உலகத்தில் உள்ள அனைத்து மதங்களும் மக்களுக்கு நல்லவையே போதிக்கிறது. அந்த நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்து கொண்டு வாழ வேண்டும்.
  • ஐந்தறிவு ஜீவன்கள் தங்களது கூட்டங்களோடு ஒற்றுமையாக வாழும் போது ஆறறிவு உள்ள மனிதர்களாலும் ஒற்றுமையாக வாழ முடியும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்தால் போதும், நம் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்..!

தேசிய ஒருமைப்பாடு கட்டுரை

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil  Katturai