Moondravathu Kan Kalvi Katturai in Tamil | மூன்றாவது கண் கல்வி கட்டுரை
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மூன்றாது கண் கல்வி கட்டுரை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஒரு மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதனால் தான் கல்வியை மூன்றாவது கண் என்று கூறுகிறார்கள். ஒரு மனிதனுக்கு அவனது, இரண்டு கண்கள் எப்படி முக்கியமோ அந்த அளவிற்கு, கல்வியும் முக்கியம். இவ்வுலகில் செல்வதால் பணத்தால் உயர்ந்தவர்களை விட கல்வியால் உயர்ந்தவர்கள் தான் அதிகம்.
ஒருவனுக்கு செல்வம், பணம் அதிகமாக இருந்தாலும், அவனுக்கு கல்வி அறிவு இல்லையென்றால் அவனால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. அவனுக்கென்று படித்த நபர் அருகில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். வியாபாரத்தில் வரும் வரவு செலவு கணக்குகளை கூட மற்றவர்களின் உதவி மூலம் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். எனவே, கல்வி என்பது மனிதக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
மூன்றாவது கண் கல்வி கட்டுரை:
குறிப்பு சட்டகம் |
|
முன்னுரை:
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
கண் இல்லையயன்றாலும், அவர் கற்றவராக இருந்தால் அவர், கண்ணுடையவராகவே கருதப்படுவார். ஆனால், கல்வி கற்காதவர்களுக்கு கண் இருந்தாலும், அது புண் என்றே கருதப்படும்.
இந்த திருக்குறளின் மூலமாக கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். கல்வியின் முக்கியத்துவதை உணர்ந்த திருவள்ளுவர் அவர்கள், பல்வேறு திருக்குறளில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்துள்ளார். இந்த உலகத்தை மாற்றக்கூடிய ஒரு ஆய்தல் உண்டெனில் அது கல்வி மட்டுமே. கல்வியினால் கிடைக்கும் நன்மைகளை வார்த்தைகளால் அளவிட முடியாது. எனவே, இக்கட்டுரையில் மூன்றாவது கண் கல்வி பற்றி பார்க்கலாம்.
கல்வியின் சிறப்பு:
கல்வி இல்லாமல், ஒரு மனிதன் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. கல்வி கற்றவர்கள் மட்டுமே தம்முடைய சமூகத்தினால் மட்டுமின்றி பிற சமூகத்தினராலும் மதிக்கப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல், கல்வி ஒருவனுக்கு மிகப்பெரிய மற்றும் அழிவில்லாத சொத்து.
கேட்டில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்ற யவை.
திருக்குறளில், அழிவே இல்லாத செல்வம் கல்வி ஒன்றே என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஒருவன் என்னதான் நகை, பணம், நிலம் உள்ளிட்ட பல சொத்துக்களை வைத்திருந்தாலும், அதெல்லாம் ஒரு நாள் அழிந்து விடும். ஆனால், என்றும் அழிவில்லாதது அவன் கற்ற கல்வி மட்டுமே.
கல்வியின் தேவை:
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்று. கல்வி கற்றல் மட்டுமே இவ்வுலகில் சிறந்து விளங்க முடியும். சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவுகளை எடுப்பதற்கும், வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு முன்னேறவும் கல்வி அறிவு மிகவும் முக்கியம். ஏனைய செல்வங்களை மேலாண்மை செய்யக் கூடிய அறிவை கல்வியானது வழங்குகின்றது.
ஒரு நாட்டின் வளர்ச்சி ஆனது, அந்நாட்டின் கல்வி அறிவு வீதத்திலேயே தங்கியிருக்கிறது. எனவே, வீட்டின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி, நாட்டின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி அதற்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம்.
கல்வி தரும் செல்வம்:
கல்வி கற்றவர்கள் சமூகத்தினால் உயர்ந்த இடத்தில் மதிக்கப்படுகிறார்கள். இந்த உலகத்தின் எந்த இடத்திற்கு சென்றாலும், கற்றவர்களுக்கு மதிப்புண்டு. கற்றவர்கள் மறைந்து அவர்களின் காலம் ஓடினாலும், கற்றவர்களின் புகழ் மறைவதில்லை.
ஒளவையார் அவர்கள், நூல் ஒன்றில் கொன்றை வேந்தனில் “மன்னனிற்கு தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோனிற்கு சென்றவிட மெல்லாம் சிறப்பு” என்று கூறியிருக்கிறார். இதில், ஒரு நாட்டின் அரசனையும் நன்றாக கல்வியறிவு பெற்ற ஒரு பண்டிதரையும் ஒப்பீடு செய்கிறார்.
திருவள்ளுவர், ஒளவையார் அவர்கள் மறைந்தாலும், அவர்களின் புகழ் இன்றளவும் நிலைத்திருக்க அவர்கள் கற்று நமக்கு விட்டு சென்ற அறிவுசார்ந்த நூல்களே காரணம். எனவே, ஒருவருக்கு கல்வி என்னும் செல்வம் நிலைத்து இருந்தால் பணம், நகை, புகழ் போன்ற ஏனைய சொத்துக்கள் தேடி வரும்.
கல்வியின் மகிமை:
இந்த உலகில் கல்வியால் உயர்ந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களின் ஒருவர் தான் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள். இந்தியாவின் 11 -வது குடியரசு தலைவராக இருந்தவர். ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர் தனது கல்வி அறிவால் வறுமையை வென்றவர். இவர், இளமைக்காலத்தில் வறுமை நிலையில் இருந்தபோது, அவரது கல்வியறிவு மற்றும் விடாமுயற்சியினால் இன்றளவும் அனைவரது மனதிலும், நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார்.
கல்பனா சௌலா” என்ற பெண் தனது கல்வி அறிவால் விண்வெளியில் பறந்த முதல் இந்திய பெண்மணி என்ற பெயரினை பெற்றார். இதுபோன்று பலரை கல்வியால் உயர்ந்தவர்கள் என்று குறிப்பிட முடியும். எனவே, இவ்வுலகில் பணத்தால் உயர்ந்தவர்களை விட கல்வியால் உயர்ந்து பெயர் பெற்றவர்கள் தான் அதிகம்.
மூன்றாவது கண் கல்வி:
ஒரு மனிதனுக்கு இரண்டு கண்கள் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்க்கு கல்வியும் முக்கியம். மனிதனுக்கு மூன்றாவது கண் ஒன்று உண்டெனில் அது கல்வி மட்டுமே.
முடிவுரை:
வாழ்க்கையில் நாம் சம்பாதிக்கும் மிகப்பெரிய அழிவில்லாத சொத்து கல்வி ஒன்று மட்டுமே. ஆணோ பெண்ணோ உரிய காலத்தில் முறையான கல்வியை பெற்றுகொல்வது மிகவும் அவசியம். அதுவே நமக்கு நம் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.
கேடில் விழுச்செல்வம் கல்வி பற்றிய கட்டுரை
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |