முயற்சி திருவினையாக்கும் கட்டுரை | Muyarchi Thiruvinaiyakkum in Tamil

Muyarchi Thiruvinaiyakkum in Tamil

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை | Muyarchi Thiruvinaiyakkum Katturai in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று இந்த பதிவில் அனைத்து பள்ளிகளிலும் கேட்கப்படும் கட்டுரையை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுநலம்.காம் தினம் தோறும் ஒவ்வொரு கட்டுரைகளை பதிவிட்டு வருகிறது. அதனை படித்து பயன்பெறவும். பொதுவாக கட்டுரை என்றால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு பெரிய பயத்தில் எழுதுவார்கள். அந்த அளவிற்கு ஆசிரியர்கள் அதனை நன்கு எழுத சொல்வார்கள்.

வினாத்தாளில் மொத்தமாக பத்து மதிப்பெண் கிடைப்பது இது போன்ற கட்டுரைக்கு தான். அதனால் தான் ஆசிரியர்கள் கட்டுரையை படிக்கும் போது தெளிவாகும் புரியும்படி படித்து எழுதவேண்டும் என்பார்கள். கட்டுரை என்பது படித்தது போல் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை. படித்ததை புரிந்து எழுதும் முறையில் உங்களுக்கேற்று தோன்றும் தோரணையில் எழுதினால் நிச்சயம் அதில் மதிப்பெண்களை பெற முடியும். அந்த வகையில் அனைத்து வித தலைப்புகளிலும் பொதுநலம்.காம் கட்டுரைகளை பதிவிட்டு வருகிறது. அவ்வாறு இன்று முயற்சி திருவினையாக்கும் என்ற தலைப்பில் கட்டுரை எப்படி எழுதுவது என்பதை பற்றி பார்ப்போம் வாங்க.

முயற்சி திருவினையாக்கும்:

*முன்னுரை* 

*முயற்சியின் மேன்மை* 

*முயற்சியின் இழிவு* 

*உழைப்பின்றி ஊதியம் இல்லை* 

*முடிவுரை* 

 

முன்னுரை:

 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் 

இது திருவள்ளுவரின் பொன்மொழி  “முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்” முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பது இம்மண்ணின் மணிமொழிகள் வையகத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, செயற்கரியன செய்து வெற்றி கொடி நாட்டிட விடா முயற்சி மட்டுமே தேவை..!

தமிழர் பண்பாடு கலாச்சாரம் கட்டுரை

முயற்சியின் மேன்மை:

தன் உழைப்பை மட்டுமே நம்பி பிழைப்பை தேடிக்கொண்டு வாழ்ந்து வந்தவர். நபிகள் நாயகம் அவர் எப்போது முயற்சிக்கு பெரும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். காரணம் அவரின் தன்னம்பிக்கைதான் அதற்கு காரணம் அவர் யாரையும் நம்பவும் இல்லை..! யார் கையையும் நம்பி இருந்ததும் இல்லை. என் உழைப்பு இருக்கும் வரை யாரிடமும் கை நீட்ட தேவை இல்லை என்றார். சோம்பேறியாக 100 ஆண்டுகள் வாழ்வதை விட உழைப்பாளியாக ஒரு நாள் வாழ்வது மேல் என்றார் புத்தர் பெருமாள்.

முயற்சியின் இழிவு:

முயற்சிக்காமல் எந்த விஷயத்தை செய்தாலும் அது அந்த முயற்சிக்கு இழிவு என்பார்கள். முயற்சிக்காமல் இருந்தால் அது கூடிய விரையில் குடும்ப வறுமையை தரும். குடும்பத்திற்கு உள்ள மரியாதையும் பெருமையையும் அளிக்கும். வாழ்வில் தோல்வியையும் முயற்ச்சியையும் அடைந்தவன் மட்டுமே வாழ்வில் முன்னேறமுடியும். முயற்சிக்காமல் இருப்பவன் முட்டாள்களுக்கு சமம் என்பார்கள்.

உழைப்பின்றி ஊதியம் இல்லை:

என்னால் முடியும் என்று நினைத்ததால் மட்டுமே ஆயிரக்கணக்கான கருவிகளை அவர் கண்டுபிடிக்க முடிந்தது. “ஆகாது முடியாது என்ற சொல்லை உங்கள் அகராதியில் எழுதிவிட்டால் முயற்சிக்கு எப்போதும் வெற்றி தான். உழைக்காமல் கிடைக்கும் ஏதுவும் நிலைக்காது. அது போல் வாழ்வில் எந்த செயலாக இருந்தாலும் முயற்சித்து பார்த்துவிட்டால் அதில் கிடைக்கும் பாடங்கள் வாழ்வில் பெரிய விஷயத்தை கற்று தரும். உழைப்பிற்கு வெற்றி நிச்சயம் என்றால் முயற்ச்சிக்கு முடியாதது எதுவும் இல்லை.

முடிவுரை:

“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்”

என்றார் வள்ளுவர்.”இளம் கன்று பயம் அறியாது. அது போல் புதிய முயற்சிகளை போல் வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். வாழ்வில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு அனுபவத்தை தரும் அது நம் வாழ்வை மேம்படுத்த உதவும்.  “முயன்றால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதை நினைவில் வைத்து கொண்டு வீரநடை போடுவோம்” 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai