நான் ஒரு மிதிவண்டி கட்டுரை
நம்முடைய முன்னோர்களின் காலத்தில் மட்டு வண்டி, மிதிவண்டி தான் புழக்கத்தில் இருந்தது. ஊருக்கு ஒரு வீட்டில் தான் பைக் இருக்கும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மிதிவண்டி என்பதையே காகிதத்தில் மட்டும் தான் காண முடிகின்றது. மிதிவண்டியை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதில்லை.
மிதிவண்டி ஓட்டுவதால் நம்முடைய உடலிற்கு அவ்வளவு நன்மைகள் இருக்கிறது. அதை பற்றியும் தெரிந்தும் கூட நாம் பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்றால் கூட வண்டியை எடுத்து தான் செல்கிறார்கள். நம்முடைய பதிவில் நான் ஒரு மிதிவண்டி கட்டுரை வடிவில் கொடுத்துள்ளோம். அதனை கொள்வோம் வாங்க..
குறிப்பு சட்டகம் |
முன்னுரை மிதிவண்டியின் வரலாறு மிதிவண்டியின் நன்மைகள் உலக மிதிவண்டி தினம் மிதிவண்டியின் தீமைகள் முடிவுரை |
முன்னுரை:
ஆரம்ப கால கட்டத்தில் மனிதன் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நடந்து சென்றான். அதன் பிறகு நாளடைவில் குதிரை, கழுதை, மாடு போன்ற மிருகங்கள் பயன்படுத்தப்பட்டன அதற்கு பின்னர் மிதிவண்டி உருவாக்கப்பட்டதோடு பயணங்களுக்காக மிதிவண்டி பயன்பாடு அதிகமாக காணப்பட்டது.
மிதிவண்டியானது சுமார் 17-ம் நூற்றாண்டில் தான் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு போக்குவரத்து சாதனமாகவே இந்த மிதிவண்டி காணப்படுகின்றது.
மிதிவண்டியின் வரலாறு:
மிதிவண்டியானது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “கிர்க்பாட்ரிக் மேக்மில்லன்” என்பவாரால் பொழுது போக்கிற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாக இந்த மிதிவண்டி காணப்படுகின்றது. சுமார் 17-ம் நூற்றாண்டில் தான் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு போக்குவரத்து சாதனமாகவே இந்த மிதிவண்டி காணப்படுகின்றது.
இப்படி கண்டுபிடிக்கப்பட்ட மிதிவண்டியானது மக்களிடையே பிரபலம் அடைந்து இன்று வரையிலும் பயன்பாட்டில் இருக்கிறது.
மிதிவண்டியின் நன்மைகள்:
மிதிவண்டி ஓட்டுவதால் மனிதனின் உடலுக்கு பல் நன்மைகள் இருக்கிறது. அதில் முதலிடத்தில் இருப்பது, கலோரிகளை குறைப்பது, நம்முடைய உடலில் தேவையில்லாத கொழுப்பை குறைத்து, உடலை கட்டுப்பாட்டில் வைத்து கொள்கிறது.
மிதிவண்டி ஓட்டுதல் உடற்பயிற்சியில் ஒன்றாக இருக்கிறது. இதயத்தை பலமாக வைத்து கொள்கிறது. ஸ்ட்ரோக் பிரச்சனை வராமல் தடுக்கிறது. மேலும் நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்து கொள்கிறது.
உலக மிதிவண்டி தினம்:
மிதிவண்டியின் நன்மையை பற்றி யாருக்கும் விழிப்புணர்வு இல்லாததால் Role of bicycle in development என்னும் திட்டத்தை மேற்கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த “லெசுச்செக் சிபிலிசுக்கி” என்ற பேராசிரியர் நம்பினார்.
இதனால் 2018 ஆம் ஆண்டு, ஐநா பொதுச் சபையின் 193 உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு வருடமும் ஜூன் 3 உலக மிதிவண்டி தினமாக பிரகடனம் செய்தனர்
மிதிவண்டியின் தீமைகள்:
மிதிவண்டி ஓட்டுவதன் என்ன தான் நன்மைகள் இருந்தாலும் இதனை அளவுக்கு அதிகமாக ஓட்டுவதன் மூலம் தீமைகளும் இருக்கிறது. மிதிவண்டி ஓட்டுவதால் கால்,மூட்டு, எலும்புகள் தேய்மானம், உடல் உஷ்ணம் அதிகரித்தல், உடலில் நீர் சத்து குறைவடைதல் மற்றும் வறட்சி நிலை ஏற்படுதல், தசைகள் வேகமாகவும் வெகுவாகவும் தளர்ச்சி அடைதல்,முதுகெலும்பு பலவீனம் அடைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
முடிவுரை:
ஏழை எளியோர்களுக்கு சாதகமான வண்டியாகவும், நிலையான சாதகமாகவும் காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்காத சாதனமாகவும் இருக்கிறது. உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்வதற்கும் உதவியாக இருக்கிறது.
இவ்வளவு நன்மைகள் இருக்கிறது. ஆதலால் ஒவ்வொருவரும் மிதிவண்டியின் அருமை புரிந்து அதனை பயன்படுத்துமாறு கூறுகிறேன்.
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |