நண்பனுக்கு கடிதம் எழுதுக | Nanbanukku Kaditham in Tamil

Nanbanukku Kaditham in Tamil

நண்பனுக்கு கடிதம் கட்டுரை | Nanbanukku Kaditham in Tamil Katturai

Kaditham Eluthum Murai: பள்ளி படிப்பில் தமிழ் பாடத்தில் கண்டிப்பாக சில கடிதங்களை எழுத சொல்வார்கள். தோழிக்கு கடிதம், நண்பனுக்கு பிறந்தநாள் அழைப்பு கடிதம், திருவிழா அழைப்பு கடிதம், நண்பனுக்கு கடிதம் என்று பல கடிதங்களை எழுதுவோம். அப்படி எழுதும் கடிதங்களில் ஒன்றான Nanbanukku Kaditham எழுதும் முறையை இந்த தொகுப்பில் படித்தறியலாம் வாங்க. இந்த பதிவு 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க நண்பனுக்கு கடிதம் எழுதும் முறையை கட்டுரை வடிவில் பார்க்கலாம் வாங்க.

நண்பனுக்கு கடிதம் எழுதும் முறை:

நீங்கள் யாருக்கு கடிதம் எழுதுவதாக இருந்தாலும் முதலில் அனுப்புனர் என்ற இடத்தில் உங்களது முகவரியை எழுதி கொள்ள வேண்டும். பின் எதை பற்றி உங்களது கடிதம் இருக்கிறதோ அதை பற்றி ஓரிருவரிகள் எழுதி கொள்ளவும். பின்னர் பெறுநர் பகுதியில் யாருக்கு கடிதம் அனுப்புகிறீர்களோ அவர்களது முகவரியை எழுதி கொள்ளவும். உதாரணத்திற்கு

நண்பனுக்கு பாராட்டு கடிதம் | Nanbanukku Parattu Kaditham in Tamil

அனுப்புநர்:

33 மூன்றாம் தெரு,
காமராஜர் நகர்,
1-ம் வீதி,
புதுக்கோட்டை.

என் அருமை நண்பா,

நான் நலம், உன் நலம் அறிய ஆவலாக இருக்கிறேன். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் வந்ததை நினைத்து மிகவும் பெருமை அடைந்தேன். உனக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். படிப்பில் உன்னுடைய வெற்றிக்கு கடின முயற்சியும், உழைப்புமே காரணம். இதே போல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாநிலத்தில் முதலிடம் வரவேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன். உன்னுடைய வெற்றியை நினைத்து உன் குடும்பம் மகிழ்ச்சி அடைவதை போல, என் குடும்பமும் மகிழ்ச்சி அடைகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். நீ இன்னும் பல சாதனைகள் செய்ய நான் விரும்புகிறேன்.

நன்றி

இப்படிக்கு
உன் அன்பு நண்பன்
(பெயர்)

உறைமேல் எழுத வேண்டிய முகவரி: 

பெறுநர்:

பெயர்,
ஊர்,
வட்டம்,
மாவட்டம்.

ஊர் திருவிழா அழைப்பிதழ் கடிதம்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil