விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கட்டுரை..!

Advertisement

Nethaji Subash Chandra Bose Katturai

நமது நாடாகிய இந்தியா சுதந்திரம் அடைவதற்கு எவ்வளவோ கஷ்டங்கள் பட்டு, போராட்டங்கள் செய்து அதன் பிறகு 1947- ஆம் ஆண்டடு இந்தியா சுதந்திரம் அடைந்தது. அத்தகைய சுதந்திர போராட்டத்தில் மஹாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் மகாகவி பாரதியார் என நிறைய தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த போராட்டத்தின் போது அளவுக்கு அதிகமான கஷ்டங்கள் அனுபவித்து இறுதியில் சுதந்திரம் பெற்றனர். ஆகாயல் அத்தகைய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் பற்றிய கட்டுரையை இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கட்டுரை

குறிப்பு  சட்டகம்:

  • முன்னுரை
  • போஸின் ஆரம்ப கால வாழ்க்கை
  • சுதந்திர போராட்டத்தின் ஈடுபாடு
  • சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகள்
  • முடிவுரை

முன்னுரை:

இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்று நோக்கத்தோடு கலந்து கொண்ட வீரர்களில் சுபாஷ் சந்திர போஸும் ஒருவர் ஆவர். முதல் முதலில் வீரர்களில் ஜெயஹிந்த் என்ற வார்த்தையை பள்ளிக்கூடம் முதல் போர் நடக்கும் இடம் வரை அனைத்து இடங்களிலும் உச்சரித்து கொண்டே இருந்த ஒரு வீரர் ஆவர்.

சுபாஷ் சந்திர போஸ் அனைவராலும் நேதாஜி என்றும் அழைக்கப்பட்டார். அதன் பிறகு சுபாஷ் சந்திர போஸ்ஸான இவருடைய பெயரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்றும் அழைத்தனர்.

போஸின் ஆரம்ப கால வாழ்க்கை:

1897- ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள ஒரிசா என்ற மாநிலத்தில் உள்ள கட்டாக் என்னும் ஊரில் ஜனவரி மாதம் 23- ஆம் நாள் ஜானகி நாத்போஸ் மற்றும் பிரபாவதி தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருடைய குடும்பத்தில் மட்டும் போஸை சேர்த்து மொத்தம் 15 பிள்ளைகள் இருந்தன. அதாவது 9 ஆண் குழந்தைகள் மற்றும் 6 பெண் குழந்தைகள்.

இவர் பாப்டிஸ்ட் மிஷன் என்ற பள்ளியில் சேர்த்து தனது ஆரம்ப கால பள்ளிப்படிப்பை தொடங்கினார். அதன் பிறகு மேற்படிப்பை கொல்கத்தாவில் உள்ள ரேவன்ஷா என்ற கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து 1918-ல் பி. ஏ தத்துவயில் பட்டமும் பெற்றார்.

தேசிய ஒருமைப்பாடு கட்டுரை

சுதந்திர போராட்டத்தின் ஈடுபாடு:

 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கட்டுரை

போஸ் 1938- ஆம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைவராக அனைவராலும் தேர்ந்தெடுக்க பட்டார். அதன் பிறகு இரண்டாவது முறை காந்திக்கு எதிராக மீண்டும் போட்டியிட்டு அதிலும் வெற்றி அடைந்தார்.

அதன் பிறகு இந்தியா எப்படியாவது சுதந்திரம் அடைய வேண்டும் என்று சிறைச்சாலையில் இருந்த போது உண்ணாவிரதம் எடுத்தார். அதை எடுத்து இரண்டாம் உலகப்போரில் போர் கைதிகளாக இருந்த ராணுவ வீரர்களை அழைத்து ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போர் புரிந்து அரும்பாடு பட்டார்.

சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகள்:

“இரத்தத்தை தாருங்கள் உங்களுக்கு விடுதலை பெற்று தருகிறேன்” என்ற வீர வார்த்தையை கூறி மக்கள் அனைவருக்குமாக பிரிட்டிஷ்காரர்களை எப்படியாவது போர் புரிந்து வெற்றி பெற வேண்டும் நோக்கத்தோடு ஆயுதம் ஏந்தி போர் புரிய முடிவு செய்தார்.

இதன் மூலம் இந்தியா முழு சுதந்திரம் பெற்று வாழ வேண்டும் என்று நம்பிக்கையை தன்னுள் வளர்த்து கொண்டார்.

முடிவுரை:

இந்தியாவின் சுதந்திரத்திற்கு அவருடைய இறுதி வரை விடாமல் முயற்சி செய்த சுபாஷ் சந்திர போஸ் 1945- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதி பயணம் மேற்கொண்டார்.

அப்போது தீடிரென விமானம் பர்மோசா தீவிற்கு அருகில் விபத்து நடந்து அங்கு போஸ் இறந்து விட்டதாக தெரியவந்தது. போஸின் இறப்பிற்கு பிறகு 1992- ஆம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பாரதியார் கட்டுரை

இது போன்று பயனுள்ள பலவகையான கட்டுரைகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> Tamil Katturai 
Advertisement