ஆங்கில புத்தாண்டு கட்டுரை 2024 | Angila Puthandu Katturai in Tamil

Advertisement

பிறந்தது ஆங்கில புத்தாண்டு 2024 | New Year Katturai in Tamil | ஆங்கில புத்தாண்டு வரலாறு

new year history in tamil: வருடந்தோறும் நாம் கொண்டாடும் ஆங்கில புத்தாண்டு எப்படி வந்தது தெரியுமா நண்பர்களே.. தெரியாதவர்களுக்கு இந்த பதிவில் ஆங்கில புத்தாண்டு பற்றிய ஒரு சில சுவாரஸ்யமான தகவலை உங்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துகிறோம். எந்த ஒரு விஷயத்தையும் அதில் உள்ள முழுமையான கருத்துக்களை நாம் தெரிந்து வைத்திருந்தால் தான் தெரியாத மற்றவர்களுக்கு நாம் விளக்கி கூறமுடியும்.  இந்த சிறப்பு நாளினை சாதி, மதம் இனம் வேறுபாடின்றி மக்கள் அனைவரும் சந்தோசமாக கொண்டாடும் நாளாகும். வாங்க ஆங்கில புத்தாண்டு பற்றிய கட்டுரையை படித்து பயன் பெறுவோம்..!

பொருளடக்கம்:

ஆங்கில புத்தாண்டு வரலாறு
ஆங்கில புத்தாண்டு பிறந்த கதை
மெசபடோனியர்களின் புத்தாண்டு
ரோமானியர்களின் புத்தாண்டு
ஜீலியன் காலண்டர்
கிரிகோரியன் காலண்டர்
புத்தாண்டு பிறந்தது

ஆங்கில புத்தாண்டு வரலாறு:

new year history in tamil: உலகம் முழுவதும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் நாள் இந்த ஆங்கில புத்தாண்டு. வருடந்தோறும் ஜனவரி மாதத்தின் முதல் தினம் ஆங்கிலப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புத்தாண்டு எப்படி வந்தது என்று கேட்டால் நம்மில் பலருக்கும் தெரியாது இதுதான் உண்மை. வருடத்தின் புதிய தினத்தை வரவேற்கும் நாம், அந்த தினம் எப்படி தோன்றியது என்பதன் வரலாற்றை பற்றியும் தெரிந்து கொள்வோம் வாங்க.

ஆங்கில புத்தாண்டு பிறந்த கதை:

உலகத்திலேயே நியூசிலாந்து நாட்டின் சமோவா பகுதியில் தான் முதன்முதலில் ஆங்கிலப் புத்தாண்டானது பிறக்கிறது. இந்திய நேரப்படி, டிசம்பர். 31-ம் தேதி மாலை 4.30 மணிக்கே அந்த நாட்டில் புத்தாண்டு பிறந்துவிடுகிறது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் மாலை 6.30 மணியளவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

மெசபடோனியர்களின் புத்தாண்டு:

ஜனவரி மாதம் முதல் தேதியை தான் புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங்களாகத்தான். 2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதி வந்தார்கள். அவர்கள் வாழ்ந்து வந்த காலத்தில், ஒரு ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டும் தான் இருந்தது. மார்ச் மாதம் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25-ந் தேதி ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தது. இயேசுவின் தாய் மேரி கர்ப்பமுற்ற தேதி என்பதால் இந்த நாளை புத்தாண்டு தினமாக அனுசரித்தனர்.

ரோமானியர்களின் புத்தாண்டு:

ரோமானியர்களின் காலண்டரில் சூரியனின் நகர்வு தன்மையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் மாதம் 1 ம் தேதியே புத்தாண்டு தினமாக கொண்டாடத் தொடங்கினார்கள். ரோமானிய மன்னர்களில் ஒருவரான, நுமா போம்பிலியஸ் என்பவர், 10 மாதமாக இருந்த ஆண்டில், கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றாக்கினார். முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர்கள் வைத்தனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அந்த முறைதான் இப்போதும் பின்பற்றப்படுகிறது.

ஜீலியன் காலண்டர்:

ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர் என்பவர் தான், ஜனவரி 1-ம்  தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதை இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கி.மு. 46 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை, ஜுலியன் காலண்டர் முறை என அழைக்கப்பட்டது.

கிரிகோரியன் காலண்டர்:

கி.பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்து விட்டார். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். இதனையடுத்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது.

புத்தாண்டு பிறந்தது:

கிரிகோரியன் அறிவித்த முறைப்படி வருடத்தின் முதல் நாள் ஜனவரி 1 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 500 ஆண்டுகளாக ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு தினமாக அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்தும் வான வேடிக்கைகளை நிகழ்த்தியும் அனைவருக்கும் இனிப்புகளை பரிமாறி கொண்டும் புத்தாண்டை வரவேற்கின்றனர்.

 அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement