நிலத்தடி நீர் பாதுகாப்பு கட்டுரை | Neer Semippu Katturai in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நிலத்தடி நீர் பாதுகாப்பு கட்டுரை பற்றி விவரித்துள்ளோம். நீரின்றின் அமையாது உலகெனின் யார்யாருக்கும் வான் இன்றி அமையாது என்பது வள்ளுவர் வாக்கு. நாம் நீரை எழுதும் வீணாக்காமல் இருக்க வேண்டும். பஞ்சபூதங்களில் ஒன்று நீராகும். விஷயத்திற்கு பெரிதளவு உதவுவது நீர் தான். நாம் இப்பொழுது சேகரிக்கும் நீர் நம் வருங்கால தலைமுறைக்கு கொடுக்கும் பெரிய சொத்தாகும். ஆக பொதுநலம் கருதி இந்த பதிவில் நிலத்தடி நீர் சேமிப்பு பற்றிய கட்டுரையை பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது முழுமையாக படிக்க ஆரம்பிப்போம் வாங்க.
நிலத்தடி நீர் பற்றி கட்டுரை | Nilathadi Neer Semippu Katturai in Tamil:
முன்னுரை:
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு இந்த ஐந்து பஞ்ச பூதங்களின் கூட்டு சேர்க்கையால் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. வானில் ஒரு பங்கு நீராகவும், நிலத்தில் ஒரு பங்கு நீராகவும் இருக்கும் இயற்கை வளமாக கருதப்படுவது நீர். சரி இந்த கட்டுரையில் நிலத்தடி நீர் சேமிப்பு பற்றி காண்போம் வாங்க.
நிலத்தடி நீர் பாதுகாப்பு:
நிலத்தடி நீரை பாதுகாக்க தவறினால் எதிர்காலத்தில் நாம் நீருக்காகவும், உணவிற்காகவும் பல போராட்டங்களை சந்திக்க நேரிடும். நிலத்தடி நீர் என்பது ஒரு வற்றாத சுரங்கமல்ல. அது ஒரு வங்கி சேமிப்பு கணக்கு போன்றது.
அந்தக்கணக்கில் எவ்வளவு பணம் போடுகிறோமோ அவ்வளவு பணம் தான்பெற முடியும். அதில் இருந்த முந்தைய சேமிப்பு முழுவதையும் பயன்படுத்திய பிறகு புதிதாக எவ்வளவு போடுகிறோமோ அவ்வளவைத்தானே பெற முடியும். ஆகவே இப்பொழுது இருந்தே நிலத்தடி நீரை சேமிக்க ஆரம்பிப்போம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் → நீர் பற்றிய கட்டுரை |
நிலத்தடி நீர் சேமிப்பு கட்டுரை:
நிலத்தடி நீர் சேகரிப்பு என்பது ழை நீர் மற்றும் உபயோகிக்கப்பட்ட நீரை நிலத்தடியில் சேமித்து வைப்பதாகும்.
கிராமப்புறங்களில் உள்ளவர்கள் நிலங்களை உழுது பண்படுத்தி வைத்திருந்தால் மழை பெய்யும்போது நிலம் மழைநீரை உறிஞ்சிக்கொள்ளும். இவ்வாறு உறிஞ்சப்படும் நீரானது கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தின் அடி மட்டத்திற்கு சென்று நிலத்தடி நீராய்ச்சேரும். இது ஒரு முக்கியமான செயல்முறை.
ஆகவே தரிசு நிலங்களை எப்பொழுதும் உழுது வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அந்த நிலத்தில் பெய்யும் மழைநீரானது தரை மட்டத்தில் வழிந்து ஓடாமல் நிலத்திற்குள் ஊடுருவிச்சென்று நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும்.
சாய்வாக இருக்கும் நிலங்களில் விழும் மழைநீரானது பூமியில் நிற்காமல் ஓடி வடிநீர் ஓடைகளில் சேர்ந்து விடும். அப்படி ஓடும் நீரால் நிலத்திற்குள் ஊடுருவிச்செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு. அந்த நீரை வேகமாக ஓடாமல் கட்டுப்படுத்தினால் அந்த நீரானது பூமிக்குள் ஊடுருவிச் செல்ல கிடைக்கும் நேரம் அதிகமாகும். அப்போது நிலத்தடிநீர் அதிகரிக்கும்.
இதற்காக நிலங்களில் சமச்சீர் வரப்புகள் அமைத்தால் வேகமாக ஓடும் மழைநீரை நிறுத்தி வைக்கும். அப்போது அதிக அளவில் நீர் பூமியில் ஊடுருவிச்செல்ல வாய்ப்புகள் அதிகமாகும். வரப்புகளின் ஓரங்களில் வாய்க்கால்கள் வெட்டுதல் இந்த சமச்சீர் வரப்புகள் அமைக்கும்போதேஇ நீர் தேங்கும் பக்கத்தில் இந்த வரப்புகளை ஒட்டி அரை அடி அகலம் இரண்டடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை வெட்டி வைத்தால்இ மழை நீர் முழுவதும் அந்த வாய்க்கால்களில் தேங்கி முழுவதுமாக பூமிக்குள் ஊடுருவிச் சென்றுவிடும். அப்போது இன்னும் அதிக நீர் நிலத்தடியில் சேரும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் → மரம் வளர்ப்போம் கட்டுரை |
மழைநீர் சேகரிப்பு தொட்டி:
இனியாவது அனைவரது வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டியை கட்டாயம் காட்டுங்கள். இவ்வாறு செய்வதினால் மழைநீராது வீணாக்காமல் நிலத்தடியில் பொய் சேரும். இதனால் நிலத்தடியில் நீர் மட்டம் அதிகரிக்க ஆரம்பம்.
சொட்டு நீர் பாசனம் முறை:
விவசாய்கள் சொட்டு நீர் பாசம் முறையை மேற்கொள்வதன் மூலம் நிலத்தடி நீர் அதிக அளவு வீணாக்காமல் இருக்கும். சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆகவே விவசாயிகள் அந்த மானியம் தொகையை பெற்று சொட்டு நீர் பாசனம் முறையை பெற்றுக்கொள்ளலாம்.
முடிவுரை – தண்ணீர் சிக்கனம்:
இன்றைய கால கட்டத்தில் தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்குமே தேவை. ஒரு நாட்டின் வரவு, செலவு சமமாக இருந்தால் தான் அந்நாட்டின் பொருளாதாரம் ஏற்றத்தாழ்வு இன்றி சீராக இருக்கும். அதே போல் தான் தண்ணீரை செலவு செய்வதிலும் சிக்கனம் தேவை. கிடைக்கும் நீரை விட அதை செலவு செய்வதுதான் அதிகமாக இருக்கிறது, இதன் காரணமாக நீர்மட்டம் குறைந்து உலகளவில் நாளுக்கு நாள் தண்ணீர் பஞ்சம் உருவாகி வருகிறது. இயற்கை அளிக்கும் மழைநீரையும் சேமிப்பதில்லை. வீடுகளில் நீரை பயன்படுத்தும் போது கூட சிக்கனத்தை நாம் கடைப்பிடிப்பதில்லை. மழைகாலங்களில் நீர்நிலைகளில் நீரைச் சேமிப்பதிலும் நாம் அக்கறை காட்டாமல் இருப்பதால் அவை வீணாகக் கடலில் கலக்கின்றன.
அக்காவே உங்கள் எதிர்கால தமைமுறையினரை நினைவில் வைத்து. இன்றிலுருந்து நிலத்தடி நீரை சேமிக்க ஆரம்பியுங்கள். தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொது மக்களிடமும் நீர் முக்கியத்துவத்தை பற்றி அனைவரிடமும் தெரியபடுத்துங்கள் நன்றி வணக்கம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் → மழைநீர் சேகரிப்பு கட்டுரை |
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |