நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை.!

Advertisement

Noyatra Valve Kuraivatra Selvam Katturai in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.  இக்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏதேனும் ஒரு நோயினால் அவதிப்பட்டு வருகிரார்கள். இன்னும் சிலர்  என்ன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே தெரியாத அளவிற்கு நோய்களின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இவை அனைத்திற்கும் ஒழுங்கற்ற வாழ்வுமுறையே காரணம்.

எனவே, ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதை நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை:

குறிப்பு சட்டகம்:
  • முன்னுரை 
  • நோய் வர காரணங்கள் 
  • வருமுன் காத்தல் 
  • உணவும் மருந்தும் 
  • நோயின்றி வாழ எளிய வழிமுறைகள் 
  • நோய் தீர்க்கும் வழிமுறைகள் 
  • உடற்பயிற்சியின் தேவை 
  • முடிவுரை 

முன்னுரை :

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. உடல் ஆரோக்கியம் தான் மற்ற எல்லா செல்வங்களை விடவும் சிறந்தது பெரியது. மற்ற செல்வங்களை பெறவும் பெற்ற செல்வதை அனுபவிக்கவும் உடல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு விதமான நோயினால் அவதிப்பட்டு வருகிறார்கள். உடல்நலம் போனால், உயிர்பறவை போய்விடும். அதனால் தான் “உடம்பார் அளியின் உயிரார் அழிவர்.” என்பர் திருமூலர். இவ்வுலகில் நீண்ட காலம் உயிர் வாழ உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

நோய் வர காரணங்கள்:

நோய் வருவதற்கு முக்கிய காரணம், மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்தது தான். ஒழுங்கற்ற உணவு பழக்கவழக்கம், மாசு நிறைந்த சுற்றுசூழல், மன அழுத்தம் இவை மூன்றும் நோய் வர முக்கிய காரணங்களாக இருக்கிறது. இன்றைய வாழ்க்கை முறை, ஓய்வின்மை, தூக்கமின்மை, காலம் தவறிய உணவு, உணவு பழக்க வழக்கம்   மாற்றம், உடற்பயிற்சியின்மை ஆகியவை பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு காரணமாக அமைகின்றன.

வருமுன் காத்தல்:

நோய் வந்தபிறகு, அதனை குணப்படுத்த மருத்துவமனைக்கு செல்வதை விட நோய்  வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும். சரியான உணவு, சரியான தூக்கம், சரியான உடற்பயிற்சி நம்மை நலமாக வாழ வைக்கும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் சிறுதானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

உணவும் மருந்தும்:

நாம் உட்கொள்ளும் உணவில், புரதசத்து, மாவு சத்து, கொழுப்பு சத்து, நுண்ணூட்ட சத்துக்கள் சமச்சீர் உணவு. எனவே, உணவினை அளவறிந்து உட்கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப உணவினை அளவோடு உட்கொள்ள வேண்டும். அதுவே நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. சோறும் காய்கறியும் அரைவயிறு; பால், மோர், நீர் கால் வயிறு; மீதமுள்ள கால் வயிறு வெற்றிடமாக இருக்க வேண்டும். உணவினை நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும். அப்போது தான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும். உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும், அது செரிக்காது. குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்து விடும். காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்துஉண்ண வேண்டும். இவ்வாறு உண்டால் உணவே மருந்தாகும்.

நோயின்றி வாழ எளிய வழிமுறைகள்:

  • நாம் வசிக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
  • சூரிய வெளிச்சமும், சுத்தமான காற்றும் நாள் வசிக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.
  • நிற்கும்போதும், நடக்கும்போது, உட்காறும்போதும் நமது உடல் ஆனது நிமிர்ந்து இருக்க வேண்டும்.
  • பச்சைக்காய்கறிகள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
  • கொழுப்பு, காரம், புளிப்பு சேர்ந்த உணவுப் பொருட்களை அளவோடு சாப்பிட வேண்டும்.
  • தினமும் 10 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • கோபம், உணர்ச்சிவசப்படுதல், கவலை போன்ற உணர்வுகளை குறைத்து கொள்ள வேண்டும்.
  • உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிட வேண்டும்.

சுத்தம் சுகாதாரம் பற்றிய வாசகங்கள்..!

நோய் தீர்க்கும் வழிமுறைகள்:

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்”

இக்குறளில் திருவள்ளுவர் நோய் பற்றி தெளிவாக கூறி இருக்கிறார். அதாவது, நோய் என்னவென்று ஆராய்ந்து நோயின் காரணங்களையும் ஆராய்ந்து அதை தணிக்கும் வழிகளையும் ஆராய்ந்து உடலுக்கும் பொருந்தும் படியாக செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

நோய் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து வைத்தியரை அணுகி, அவர்களின் ஆலோசனையை பெற்று அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நோயுற்றவர்கள் நோய் குணமாகும் வரை ஓய்வு எடுக்க வேண்டும். உணவினை சரியான நேரத்திற்கு உட்கொள்ளுதல், சரியான தூக்கம், முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோயிலிருந்து விரைவில் குணமடையலாம்.

உடற்பயிற்சியின் தேவை:

ஓடி விளையாடு, மாலை முழுவதும் விளையாட்டு என்ற பாடல் ஆனது,  உடலினை உறுதி செய்ய பாரதி கூறும் வழிமுறைகள் ஆகும். விளையாடுவதால் மூலம் உடலில் உள்ள கழிவுப்பொருட்கள் வெளியேறும். உடலில் துணிவும், தெம்பும், சுறுசுறுப்பும் உண்டாகும்.

முடிவுரை:

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது.” என்பதற்கேற்ப மனித பிறவி என்பது ஒரு அரிதான விஷயம் ஆகும். இறைவன் வழங்கிய அருட்கொடையே நமது உடலாகும். அதனை நோயின்றி காப்பதே நம் முதல் கடமை ஆகும். சுவரை வைத்து சித்திரம் வரைய வேண்டும் நமது உடலை வைத்துத்தான் உயிரை பேண முடியும். உடலை பேணுவோம் உயிரை காப்போம்.

மனித நேயம் கட்டுரை

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement