ஒரு மரத்தின் பார்வையில் கட்டுரை

Advertisement

Oru Marathin Paarvaiyil Katturai in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மரத்தின் ஒரு பார்வையில் கட்டுரை பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். மரத்தின் தேவை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். மண்ணிற்கும் மனிதனுக்கும் மரம் ஒரு வரம். ஆனால், அதனின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிந்தும் நாம் அதனை அளித்து வருகிறோம். எனவே, மரத்தின் பார்வையில் இருந்து அதனை பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு மரத்தின் பார்வையில் கட்டுரை கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

மரம் பற்றிய வாசகங்கள்

ஒரு மரத்தின் பார்வையில் கட்டுரை:

முன்னுரை:

நாங்கள் மரம் தான். ஆனால், நாங்கள் உயிர் இல்லா ஜடம் இல்லை. எங்களுக்கும் உயிர் இருக்கிறது, உணர்வு இருக்கிறது. இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை செய்வதே எங்கள் நீதி. நாங்கள் யாரிடத்திலும் யாசித்து வாழ்வதில்லை. எங்களுக்கென்று ஒரு கோரிக்கையும் இல்லை. நாங்கள் என்றும் கொடுத்தே பழகியவர்கள். இந்த பூமியும் பூமியில் வாழும் அணைத்து உயிரினங்களும் எங்களுடைய இரு கண்கள். எனவே, அவர்களுக்கு சேவை செய்வதே எங்கள் கடமை.

மரத்தின் பார்வையில்:

நான் ஒரு மரமாக நிமிர்ந்து நிற்கிறேன். என் வேர்கள் பூமியில் ஆழமாக ஓடுகின்றன. என் கிளைகள் வானத்தை நோக்கி சூரியனின் சூடான அரவணைப்பை அடைகின்றன. என் பார்வையில் இருந்து சொல்கிறேன், நான் அசைக்க முடியாத பொறுமையுடன் இந்த உலகத்தை அவதானித்தேன், வாழ்க்கையின் சுழற்சியை என் முன் விரிவடையச் செய்தேன்.

மரம் இல்லாத ஊர் பாலைவனம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், அந்த பாலைவனத்தையே பசுமையாக மாற்றுவது மரங்களாகிய நாங்கள் தான்.  எங்களுக்காக தான் மேகங்கள் மழையை பொழிகிறது. பூமியை குளிர்விப்பவர்களே நாங்கள் தான்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அந்த நிழலை தருபவர்கள் மரங்களாகிய நாங்கள் தான். சாலையின் இருபுறத்திலும் நின்று கொண்டு வெப்ப தாக்குதல் உங்களின் மேல் படாதவாறு இதமான தென்றலை அளிக்கிறோம்.

எங்கள் கழிவுகளும் சருகுகளும் தாவரங்களுக்கு உரமாகவும் மண்களின் வளத்தையும் அதிகரிக்க செய்கிறது. இயற்கையின் மாறுபாடுகளால் காற்றின் வேகம், தன் அளவை கடக்கும் பட்சத்தில் அரணாக நின்று சேதம் மிகாமல் தடுக்கும் ஆற்றலார்களாக நாங்கள் செயல்படுகிறோம்.

அதிக மழை காரணமாக மண் சரிவுகள் ஏற்படாமல் தடுப்பதும் நாங்களே. வண்டி, வாகனம் போன்ற ஊர்திகளால் உண்டாகும் இரைச்சல்கள், காற்று மாசுபாடு போன்ற சாதாரணமான சூழல்களில் இருந்து மக்களை காப்பது மரங்கள் தான்.

நாங்கள், மனிதன் பயன்படுத்தும் மரச்சாமான்கள் முதல் மனிதனின் இறுதி ஊர்வலம் வரை பயன்படுகிறோம். மனிதன் வாழ்வதற்க்கு இன்றியமையாத பிராண வாயுவை மனித குலத்திற்கு தருவதே மரங்களின் மிகப்பெரிய பங்களிப்பு. மனித செயல்பாட்டால் வெளியேறும் கரியமில வாயுவை உட்கொண்டு அவனுக்கு தேவையான பிராண வாயுவை நாங்கள் அளிக்கிறோம்.

ஐம்பது ஆண்டுகள் பழமையான எங்களை பலக்கோடி கணக்கில் விற்று பணமாக்குகிறார்கள். அந்த அளவிற்கு மனிதனின் உயிர் முதல் அவர்களின் தேவை வரை அனைத்தையும் நாங்கள் பூர்த்தி செய்கிறோம்.

இத்தனை பயன்களை செய்தும் அதனால் என்ன பயன்.? எங்களின் பாதுகாப்பிற்கு யாரும் உத்திரவாதம் இல்லை. மிருகங்களுக்கு கூட குரல் கொடுக்க சட்டம் இருக்கிறதாம். ஆனால், எங்களுக்கோ ஒரு நாதியும் இல்லை.

நான்கு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை  மற்றும் தேசிய நெடுஞ்சாலை என சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது ஈவு இரக்கம் இல்லாமல் காவு கொடுக்கப்படுவதுமரங்களாகிய எங்களைத்தான்.

மரங்களாகிய எண்களின் கவலையும் விரும்பமும் ஒன்றே ஓன்று தான். எங்களுக்கு பின் எங்கள் பணியை யார் அங்கே தொடரப் போகிறார்கள். இதுவே எண்களின் மிகப்பெரிய கவலை.

இயற்கை வளம் கட்டுரை

முடிவுரை:

இயற்கை உலகின் அழகு. அழகு மட்டுமின்றி மனிதனின் வாழ்க்கையை சுகாதாரமாக பேணி காப்பது நாங்கள் மட்டுமே. எனவே, எங்களை அளிக்கும் முன் நன்கு யோசித்து செயல்படுங்கள்.  வேறு வழியில்லாமல் எங்களை அளிக்க வேண்டும் என்ற சூழ்நிலை நேர்ந்தால் வேறொரு இடத்தில் ஒரு மரக்கன்றை நட்டு வையுங்கள்.

உயிருள்ளவைக்கு உற்ற நண்பன் மரங்கள் -அவைதரும்
உயிர்வாயு நமக்கும் விலையில்லா வரங்கள்
விறகும் சருகும் அவைகளின்
பிள்ளைகள்
விதை விழுந்து எழுந்துவரும் சோலைகள்

சுவாசிக்கும் காற்று கூட சுத்தமாகாது
சுத்திகரிக்க இவை இல்லையென்றால்
சுதாரித்துக் கொண்டு வாழ்வோம்
சுற்றுச்சூழலை மரம் ஊன்றி காப்போம்…

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement