ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு கட்டுரை | Oru Vakalar Enathu Pangalippu Katturai in Tamil

Enathu Vakku Enathu Urimai 

எனது வாக்கு எனது உரிமை கட்டுரை | Enathu Vakku Enathu Urimai 

தேர்தல் என்பது ஒரு ஜனநாயக நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் முறையாகும். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும், அதே போல் மக்களும் விழிப்புணர்வுடன் தங்களின் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் இன்றைய கட்டுரை பதிவில் மக்களாகிய உங்களின் வாக்கின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் விதமாக ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு என்ற தலைப்பில் ஓட்டின் சிறப்பை கட்டுரை வடிவில் படித்தறியலாம் வாங்க.

ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு கட்டுரை எழுதுதல்

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
வாக்களிப்பதன் அவசியம்
ஓட்டுரிமை
நாட்டின் வளர்ச்சி
முடிவுரை

முன்னுரை:

Enathu Vakku Enathu Urimai : நாட்டில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அவர்களை வழிநடத்தவும் ஒரு தலைவர் வேண்டும் என்பதற்காக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக வழங்கப்படும் ஆட்சி ஆகும். உலகின் மிக பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பதன் அவசியம்:

 • நாடு முன்னேற வேண்டும் எனில் அந்த நாட்டில் உள்ள தலைவர்கள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். நல்ல தலைவர்கள் உருவாகுவதற்கு ஒவ்வொரு நபரின் வாக்குகளும் மிகவும் முக்கியமானது.
 • சிலர் வாக்களிப்பதன் அவசியம் தெரியாமல் வாக்காளர் அட்டை கூட விண்ணப்பிக்காமல் இருக்கின்றனர். இன்னும் சிலர் வாக்காளர் அட்டையை வாங்குவதோடு சரி அதை எந்த தேர்தலிலும் உபோயகப்படுத்துவதில்லை.
 • ஒரு நபர் வாக்களிக்காமல் இருப்பதனால் நல்ல தலைவர் வெற்றி பெறாமல் போகலாம், அதே சமயம் தவறான வாக்குகளால் மோசமான தலைவர் உருவாகலாம், அதனால் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

ஓட்டுரிமை:

 • பழங்காலத்தில் ஆண் மட்டுமே வாக்களித்து வந்தார்கள், அந்த முறையை தகர்த்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இருபாலரும் வாக்களிக்க வேண்டும் என்று சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் நடைமுறைக்கு கொண்டு வந்தார். இந்த புதிய சட்டத்தின் படி வாக்குரிமை அடிப்படை உரிமையாக்கப்பட்டது.

நாட்டின் வளர்ச்சி:

 • Enathu Vakku Enathu Urimai: எந்த நாட்டில் நல்ல ஆட்சி அமைகிறதோ அந்த நாட்டில் கண்டிப்பாக நல்ல வளர்ச்சியும் காணப்படும். மற்ற நாடுகளில் அவர்களின் வளர்ச்சியை யாரும் எட்டி பிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சியை அடைந்துள்ளது, ஆனால் நம் நாடோ வளர்ச்சியில் இன்னும் பின் தங்கி இருக்கின்றன. சிறந்த தலைவர்கள் நாட்டிற்கு நன்மைகளே செய்வார்கள்.
 • ஆட்சி புரியும் தலைவர்கள் மக்களின் தேவையை அறிந்து செயல்பட வேண்டும் அப்போது தான் மக்களின் ஆதரவை பெற முடியும்.
 • குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
  அடிதழீஇ நிற்கும் உலகு
 • என்ற குறலில் குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர் என்று தம் குறள் மூலம் குறிப்பிடுகிறார்.

முடிவுரை:

 • மக்கள் நல்ல ஆட்சியை விரும்பினால் மட்டும் போதாது, நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டு தேர்தலில் தவறாமல் வாக்களிக்கவும் வேண்டும்.
 • நமக்கு கிடைத்திருக்கின்ற வாக்குரிமை மிகப்பெரிய ஜனநாயக உரிமையாகும். இதனை நாம் சரியாக பயன்படுத்தி கட்டாயம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil  Katturai