பெண் குழந்தை பாதுகாப்பு கட்டுரை | Pen Kulanthai Pathukappu Katturai in Tamil

Advertisement

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை | Pengal Pathukappu Katturai

இந்த நவீன உலகம் எத்தனையோ புதுமைகளை கொண்டிருந்தாலும், பெண்களின் பாதுகாப்பு மட்டும் இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்கள் என்னதான் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றாலும் இன்னும் பல பெண்கள் பல இடத்தில் ஒரு விதமான துன்பங்களையும், சிக்கல்களையும் சந்தித்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் இந்த தொகுப்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி கட்டுரை வடிவில் பார்க்கலாம் வாங்க.

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
பெண்களின் முன்னேற்றம்
பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள்
பெண் குழந்தை பாதுகாப்பு
முடிவுரை

முன்னுரை – பெண் குழந்தை பாதுகாப்பு கட்டுரை:

“பருவம் அடைந்த பெண்ணை வீட்டில் வைத்திருப்பது வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு இருப்பதற்கு சமம்” என்ற வசனத்தை பெண் பிள்ளைகளை பெற்ற அனைத்து தாய்மார்களும் கூறுவார்கள். அப்படி பயந்து கொண்டிருக்கும் தாய்மார்கள் கூட பெண்களை சாதனையாளர்களாக பார்க்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.

பெண்களின் முன்னேற்றம்:

  • Pengal Pathukappu Katturai: பெற்றோர்களின் இந்த மனநிலை தான் வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்களை ஆசிரியராகவும், மருத்துவராகவும், விண்வெளி வீராங்கணையாகவும், காவல் அதிகாரியாகவும் மாற்றியுள்ளது.
  • பெண் குழந்தைகள் சமூகத்தில் அன்பையும், மகிழ்ச்சியையும் பரப்பும் ஒரு தேவதைகளாக உள்ளனர். “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்று பெண்மையை போற்றுகிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள்:

  • Pen Pathukappu Katturai in Tamil: பழங்காலத்தில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும், சுதந்திரமாக சுற்றி திரிவதற்கும், குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை என்று பலவற்றாலும் துன்பப்பட்டு கொண்டிருந்தனர், இந்த நிலையெல்லாம் இப்போது மாறி வந்தாலும் ஆதி காலத்தில் இருந்து பெண் குழந்தைகளின் பாலியல் வன்கொடுமை மட்டும் இன்றளவும் மாறாமல் உள்ளது.
  • பருவ வயது பெண்களை பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற நிலை மாறி இப்பொழுது பிஞ்சு குழந்தைகளை கூட பாதுகாக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.

பெண் குழந்தை பாதுகாப்பு:

  • குழந்தைகள் பாதுகாப்பு கட்டுரை: பெண் குழந்தைகள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் போது தான் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும். பெண்களை பற்றிய தவறான எண்ணம் ஆண்களிடமிருந்து எப்பொழுது விலகுமோ அப்பொழுது தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.
  • பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு பல திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளது. மேலும் Protection Of Children From Sexual Offences, Protection Of Women From Domestic Violence போன்ற சட்டங்களையும் பெண்களின் பாதுகாப்பிற்காக செயல்படுத்தி கொண்டிருக்கிறது.

முடிவுரை – பெண் குழந்தை பாதுகாப்பு கட்டுரை:

  • கடவுள் பெண்களை விட ஆண்களை வலிமையாக படைத்ததற்கு காரணம் அவளை பாதுகாக்க தானே தவிர அவளை அழிப்பதற்காக இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
  • நம் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகள் மட்டுமல்ல அனைத்து பெண் குழந்தைகளையும் சகோதரியாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை பெற்றோர்கள் சிறு வயதில் இருந்தே ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
  • பெண் பிள்ளைகளை தைரியமாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு Good Touch, Bad Touch எது என்று சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.

பெண் குழந்தைகளை போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை! தூற்றாமல் இருந்தாலே போதும்!

பெண் கல்வி கட்டுரை

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement