பொங்கல் விழா வரவேற்புரை.! | Pongal Function Welcome Speech in Tamil

Advertisement

பொங்கல் வரவேற்புரை | Pongal Varaverpurai in Tamil 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள் இப்படி வேலை செய்யும் அனைத்தும் இடங்கலும் பொங்கல் பண்டிகை முன்கூட்டியே நடைபெறும். பொங்கல் பண்டிகையில் கலந்து கொண்டுருப்பவர்களை வரவேற்கும் விதமாக வரவேற்புரை நிகழ்ச்சி நடத்தப்படும்.

பொங்கல் வரவேற்பு நிகழ்ச்சிகளில், நாம் வந்தவர்களை வரவேற்கும் முறை அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலும், விழாவிற்கான பொருளை எடுத்துரைக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

தை மாதம் என்றாலே பொங்கல் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். ஏனென்றால் பொங்கல் ஆனது தமிழர்கள் பண்பாட்டை குறிக்கும் விதமாக இருக்கும். இந்த பொங்கல் பண்டிகைக்கைக்கு பள்ளி, கல்லூரிகள், வேலை பார்க்கும் இடம் போன்ற இடங்களில் தைப்பொங்கல் முதல் நாளே பொங்கல் விழாவை வைப்பார்கள். ஆக இந்த நாட்களில்பொங்கலின் சிறப்புகளை பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகளில் பேசுவார்கள். அதற்கு முதன்மையாக இருப்பது வரவேற்புரை தான். அதனால் இந்த பதிவில் பொங்கல் வரவேற்புரை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

தை பிறந்தால் வழி பிறக்கும் கவிதை.!

Pongal Celebration Welcome Speech in Tamil:

pongal function welcome speech in tamil

இந்த பொங்கல் அன்று அனைவரும் நோய் இல்லா வாழ்க்கையும், நிறைந்த செல்வமும், உங்களுடைய வாழ்வில் நீங்கள் நினைத்த அனைத்தையும் அடையவும் இறைவனை வேண்டி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி எனது உரையை தொடங்குகிறேன்.

பொங்கல் விழா என்பது உழவர்களுக்கு மட்டுமில்லை, உழவர்களின் உழைப்பை வீணாக்காமல், அதற்கு உறுதுணையாக இருந்த அனைவருமே கொண்டாடும் பெரும் விழாவாக இருக்கிறது.

நம்முடைய பயனிற்காக உதவி புரிந்த கால்நடைகள் மற்றும் இயற்கைக்கு நன்றி சொல்லும் நன்னாளே தைப்பொங்கல். உழவர்கள் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உழைத்த உழவர்கள், கால்நடைகள், இயற்கை போன்றவற்றிற்கு நன்றி சொல்லி இந்த நாளை மகிழ்ச்சியாக ஆரம்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

புதிய எண்ணங்கள்….

புதிய முயற்சிகள்…

புதிய நண்பர்கள்…

புதிய நம்பிக்கைகள்..

புதிய திட்டங்களைச் சேர்த்திடுவோம்!

சோர்வினை செயல்கள் எனும் தீயைமூட்டி கொளுத்திடுவோம்.

Pongal Varaverpurai in Tamil:

இன்றைய நாள் நாம் அனைவருமே பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக கூடியுள்ளோம். இங்கு கூடியுள்ள அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி எனது உரையை தொடங்குகிறேன்.

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் பண்பாடு மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு நன்றியை வெளிக்காட்டவே இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சூரியனை வணங்கி, பசுமை நிறைந்த விவசாயத்திற்கு நன்றி சொல்லவும், குடும்பத்தினர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நாளாக இருக்கிறது.

இந்த நாளில் சிறப்பை நாமும் அனுபவித்து, தமிழரின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பேணிக்காத்து மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடுவோம்.

இந்த பொங்கலுக்கு அனைவரின் மனதிலும் அமைதி, சந்தோசம், மகிழ்ச்சி போன்றவை பொங்கட்டும்.

எனக்கு பேசுவதற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்…

 

இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → Tamil Katturai
Advertisement