புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ் பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் எப்போதும் புதினத்திற்கு என்ற தனி இடம் உண்டு. தமிழ் இலக்கியங்கள் கவிதை உரைநடை என்று பல இருந்தாலும் புதினத்திற்கு எப்போதும் வரவேற்பு அதிகம் தான். அந்த வகையில் தமிழ் மட்டும் அல்லாமல் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அந்த மொழிகளில் வெளிவந்த புதினத்திற்கு எப்போதும் வரவேற்பு அதிகம்தான். மக்கள் அதிகம் விரும்புவதும் படிப்பதும் புதினங்களாக தான். இருக்கும். அத்தகைய சிறப்பு மிக்க புதினம் எவ்வாறு உருவாக்கியது. அது அடைந்த வளர்ச்சி என்ன என்பதனை பற்றி இந்த கட்டியுரையில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்.
புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை | puthinathin thotramum valarchiyum in tamil
குறிப்பு சட்டகம்
முன்னுரை
புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
புதின இலக்கிய முன்னோடிகள்
நாவல்களுக்கும் சிறுகதைக்குமான வேறுபாடுகள்
தமிழ்ப் புதின வளர்ச்சி
நாவல்களுக்கும் சிறுகதைக்குமான வேறுபாடுகள்
முடிவுரை
முன்னுரை:
உரைநடையில் எழுதப்பட்ட நெடுங்கதையை ஆங்கிலேயர் நாவல் என்று அழைத்தனர். நாவல் பெரும்பாலும் காதல் நிகழ்ச்சிகளையே சித்தரிப்பதாய் இருந்தது. எனவே ‘நாவல்’ எனும் சொல் ஆதியில் Romance என்னும் பொருளிலேயே வழங்கப்பட்டது. பின்னரே, மனித வாழ்க்கையைச் சுவைபடக் கூறும் வடிவமாயிற்று எனலாம்.தமிழரும் முதலில் நெடுங்கதைகளை நாவல் என்றே அழைத்தனர். பின்னர் நாவல், புதினம் என்று தமிழில் மாற்றி அழைக்கப்பட்டது. தமிழ் இலக்கித்தில் எப்போதும் புதினத்துக்கு என்று ஒரு தனித்துவமான இடம் உண்டு அதை விரும்பிப் படிக்கும் வாசகர்களும் இன்றளவும் உண்டு. தமிழ்ப்புதினத்தின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் இந்த கட்டுரை மூலம் காண்போம்.
புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்:
புதினம் முதன் முதலில் இத்தாலி நாட்டில் தோன்றியது. சாமுவேல் ரிச்சட்சன் என்பவர் 1741-ஆம் ஆண்டு ‘பமிலா’ என்ற புதினத்தை எழுதினார். இதுவே உலகின் முதல் புதினமாகக் கருதப்படுகிறது.
எனினும் 10ஆம் நூற்றாண்டிலேயே சீனாவில் நாவல்கள் இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனையே சீனப்பெருநாவல் மரபு என்பர்.
இந்திய மொழிகளில் முதலில் வங்க மொழியும் அதனை அடுத்து தமிழிலும் புதினங்கள் தோற்ற ஆரம்பித்தது.
புதின இலக்கிய முன்னோடிகள்:
முதலில் மாயவரம் வேதநாயகம் பிள்ளையே தமிழில் புதின வரலாற்றைத் தொடங்கி வைத்தார். இவரே தமிழ் புதினத்தின் தந்தை எனப்படுகின்றார். இவர் 1879 இல் பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார்.
1893-இல் குருசாமி சர்மா என்பவர் பிரேம கலாவதீயம் என்னும் புதினத்தை வெளியிட்டார். அடுத்து 1896-இல் ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் வெளிவந்தது. இதுவே தமிழில் வெளிவந்த முதல் தொடர் புதினமாகும்.
அதன் பின் தமிழில் ஏராளமான புதினங்கள் தோன்றத் தொடங்கின.
நாவல்களுக்கும் சிறுகதைக்குமான வேறுபாடுகள்:
சிறுகதைகளை நாவலின் முதல் வளர்ச்சி நிலை என்றும் அதிலிருந்து புதினங்கள் வளர்ச்சி பெற்றிருக்கலாம் என்றும் ஹட்சன் குறிப்பிடுகின்றார். சிறுகதை ஒரு வட்டத்துக்குள் சுழல்வதாகும்.
ஆனால் நாவல் அவ்வாறு இல்லை. நாவல்கள் மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டு இயங்குபவையாகும். சிறுகதையை விட அதிகளவான கதாபாத்திரங்கள்⸴ கற்பனைகள் மற்றும்⸴ வர்ணனைகளைக் கொண்டதாகும்.
தமிழ்ப் புதின வளர்ச்சி:
தமிழ் புதின உலகத்தில் கல்கி, (ரா.கிருஷ்ணமூர்த்தியின்) வருகை இளஞாயிற்றின் உதயம் போன்றது. புதினத்தைப் பொதுமக்கள் எல்லார்க்கும் உரியதாக ஆக்கிய பெருமை இவர் ஒருவர்க்கே உண்டு. அடுத்த நிலையில், அகிலனின் வருகை தமிழ் மக்களின் கவனத்தையும் கவனிப்பையும் ஒருங்கே பெற்றது.
முடிவுரை:
இன்றைய நவீன உலகில் நமது பொழுதுபோக்கினை மேற்கொள்ள பல வழிகளும் பல கருவிகள் வந்துவிட்டன. ஆனாலும் முன்னைய காலத்தில் புதினம் வாசித்தல் என்பது சிறந்த பொழுதுபோக்காக இருந்தது. எனினும் இவ்வழக்கம் இன்றுவரை பலராலும் தொடரப்பட்டு வருகின்றமை புதினத்தின் ஆதிக்கத்தை எடுத்தியம்புகின்றது எனலாம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது பொருள் |
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |