ஸ்மார்ட் இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு தமிழ்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஸ்மார்ட் இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு கட்டுரை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்தியாவை ஸ்மார்ட் இந்தியாவாக உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு பற்றி நாம் ஒவ்வொருவருமே அறிந்து கொள்ள வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் ஸ்மார்ட் இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு கட்டுரை பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம்.
ஸ்மார்ட் இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு கட்டுரை:
முன்னுரை:
ஸ்மார்ட் இந்தியாவை உருவாக்க இந்தியாவில் உள்ள இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். இளைஞர்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம்.நம் நாட்டின் எதிர்காலத்தில் இளைஞயர்கள் சமூக மாற்றம் ,கல்வி பொருளாதாரத்தில் ஆகியவற்றில் துணையாக இருக்க வேண்டும். நம் அப்துல் காலம் ஐயா அவர்கள், “நம் நாட்டின் வளர்ச்சி இளைஞர் கையில் தான் உள்ளது” என்று அவர் சொன்ன வார்த்தைக்கு இணங்க நாம் செயல் பட வேண்டும்.
தொழில்நுட்பம் மற்றும் புதுமை தழுவுதல் :
இளைஞர்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அதிக அளவில் முன்னேற்றம் அடைந்து உள்ளார்கள். இந்த டிஜிட்டல் மூலம் உலகத்தில் உள்ள இளைஞர்கள் தங்களின் திறன்களை நல்ல முறையில் பயன்படுத்தி நகர்ப்புற மற்றும் கிராமத்தில் உள்ள பள்ளிகளில் டிஜிட்டல் கல்வியை எடுத்து வைக்கிறார்கள். இளைஞர்கள் புதுவித ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களில் ஈடுபட்டு டிஜிட்டல் தளத்தில் நல்ல முன்னேற்றம் கொண்டு வந்துள்ளார்கள்.
எனது பார்வையில் சுதந்திர இந்தியா கட்டுரை
ஸ்டார்ட்அப் தொழில்முனைவு :
இந்தியாவில் டிஜிட்டல் கம்பெனிகள் அதிகமாக இருந்தாலும் இப்போது ஸ்டார்ட் பண்ணும் ஸ்டார்ட்அப் கம்பெனிகள் அதிக அளவில் இளைஞர்களால் நடத்தப்பட்டு வருகிறது. நவீன தொழில் நுட்பத்துடன் தொடர்பு உடைய இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் பங்கு அதிகமாக உள்ளது. புதுமையை ஊக்குவிப்பதன் மூலமும் ,தொழில் முனையோரைத் தழுவுவதன் மூலமும் சுகாதாரம் முதல் விவசாயம் வரை தனித்துவமான சவால்களுக்கு தீர்வுகாண முடியும். அதன் மூலம் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை உயர்த்தவும் முடியும்.
கல்வி மற்றும் திறன் மேம்படுத்துதல் :
கல்வியை மேம்படுத்தவும், ஆதரிக்கவும், செயல்படுத்தவும் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும். கொள்கை விவரங்களை ஆதரிப்பதன் மூலமும், புதுமையான கல்வி விவரங்களை ஆதரிப்பதன் மூலமும், பயன்னுள்ள கல்வி முறையை உருவாக்க முடியும்.
சமூகமாற்றம் மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவித்தல்:
சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதன் மூலமும், அனைவரும் உள்ளடக்கிய சமுதாயத்தை நோக்கி செயல்படுவதன் மூலமும், இளைஞர்கள் சாதி மதம், பொருளாதார நிலை ஆகியவற்றில் உள்ள ஏற்ற தாழ்வை அகற்றி ஒற்றுமை மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்க உதவலாம் .
அரசியல் ஈடுபாடு :
அரசியலில் இளைஞர்கள் ஈடுபாடு ஒரு ஆற்றல்மிக்கது. தேர்தலில் ஈடுபடுவதன் மூலமும், கொள்கை விவாதங்களில் ஈடுபடுவதன் மூலமும், தலைவர்களை பொறுப்பு கூற வைப்பதன் மூலமும், இளைய தலைமுறையினருக்கு மிகவும் முக்கியமான பிரச்சனைகளை அரசர்கள் நிவர்த்தி செய்வதை உறுதி செய்ய முடியும்.
தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை
முடிவுரை:
ஸ்மார்ட் இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு பன்முகத்தன்மை கொண்டது மற்றும் முக்கியமானது. தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, நிலைத்தன்மைக்காக வாதிடுவது, கல்வியை மேம்படுத்துவது சமூக மாற்றத்தை மேம்படுத்துவது, நிர்வாகத்தில் பங்கேற்பது மற்றும் ஊடகங்களை மேம்படுத்துவதன் மூலம் இளைஞர்கள் தேசத்தை பிரகாசமான, சிறந்த எதிர்காலத்தை நோக்கி அழைத்து செல்ல முடியும். இந்தியாவின் எதிர்காலம் உண்மையில் இளைஞர்களின் கையில் உள்ளது.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |