சாலை பாதுகாப்பு கட்டுரை | Salai Pathukappu Katturai in Tamil

Salai Pathukappu Katturai in Tamil

சாலை பாதுகாப்பு பேச்சு போட்டி தமிழ் | Salai Pathukappu Essay in Tamil

சாலை விபத்துக்கள் நம்முடைய தேசத்திற்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உள்ளது. சாலை விபத்துக்கள் பற்றிய செய்திகளை தொலைக்காட்சிகள் மூலமாகவும், செய்தித்தாள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் அதிகமாக கேள்விப்பட்டு வருகிறோம். அதுவும் இன்றைய சூழலில் அதிகமான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. நாம் இந்த தொகுப்பில் சாலை பாதுகாப்பின் அவசியத்தை கட்டுரை வடிவில் பார்க்கலாம் வாங்க.

குறிப்பு சட்டகம் – சாலை விதிகளை மதிப்போம் கட்டுரை – Road Safety Speech in Tamil:

முன்னுரை
சாலை பாதுகாப்பு முக்கியத்துவம்
சாலை விதிகளை மதிப்போம் கட்டுரை
விதி மீறல்
முடிவுரை

முன்னுரை – சாலை பாதுகாப்பு கட்டுரை:

  • மனிதன் தன்னுடைய தேவைகளை விரைவாக பூர்த்தி செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் வாகனங்கள். மக்களின் தேவைக்காக கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள் அதற்கு பதிலாக பூமியில் வாழக்கூடிய விலங்குகள் முதல் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து தரக்கூடியதாக உள்ளது. சாலையில் ஏற்படும் பெரும்பாலான விபத்துக்களுக்கு முக்கியமான காரணம் சாலை விதிகளை மீறுவது தான்.

சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் – Salai Pathukappu Katturai:

  • மனிதர்களின் அலட்சியம் மற்றும் அவசரத்தால் பல உயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் வண்டியை ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள பலருக்கு வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என்று தெரிவதில்லை. இது போன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்கு சாலை பாதுகாப்பு மிகவும் முக்கியமாகும்.

சாலை விதிகளை மதிப்போம் கட்டுரை:

  • சாலையில் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு சில அடிப்படையான சாலை விதிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நடைமேடையைப் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடப்பது, வாகனங்களை சரியான இடத்தில் நிறுத்துதல் போன்ற அடிப்படை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
  • சாலையில் இருக்கும் போக்குவரத்து சைகை (Traffic Light) நிறங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிவப்பு நிற விளக்கு எரிந்தால் வண்டியை நிறுத்த (நில்) வேண்டும். மஞ்சள் வண்ண விளக்கு எரிந்தால் தயாராக (கவனி) இருக்க வேண்டும். பச்சை வண்ண விளக்கு எரிந்தால் புறப்பட (செல்) வேண்டும்.
  • வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்து கொள்வது, இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணம் செய்யாமல் இருப்பது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாமல் இருப்பதன் மூலம் அதிகமான சாலை விபத்துக்களை தடுக்க முடியும்.

விதி மீறல் – Salai Pathukappu Vilipunarvu Katturai in Tamil:

  • சாலை விபத்துக்களை மீறுவதால் மிகுதியான விபத்துக்கள் ஏற்படுகின்றன. பள்ளிகள் இருக்கும் இடத்தில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் வண்டியை மெதுவாக ஓட்டுவதற்கு பதிலாக வேகமாக ஓட்டுவதாலும், சாலை விதிகளை மீறுபவர்களை காவல் துறை தண்டிக்காமல் இருப்பதாலும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதாலும் சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன.
  • மக்களும், காவல் துறையினரும் சாலை விதிகளை சரியாக கடைப்பிடித்தால் சாலையில் நடக்கும் உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..!

முடிவுரை – சாலை பாதுகாப்பு கட்டுரை:

  • ஒவ்வொரு மனிதரின் உயிரும் விலை மதிப்பு வாய்ந்தது, மனிதர்களின் உயிர் மட்டும் அல்ல பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிர்களும் விலை மதிப்பு பெற்றவை. எனவே சாலையில் வாகனங்களை கவனத்துடன் ஓட்டி விலை மதிப்பான உயிரை காப்போம்.

சாலை விதிகளை மதிப்போம்! விலை மதிப்பில்லா உயிரைக் காப்போம்!

டெங்கு விழிப்புணர்வு பற்றிய கட்டுரை
எரிபொருள் சிக்கனம் கட்டுரை

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil