சமத்துவமே மகத்துவம் கட்டுரை..! | Samathuvam Magathuvam Katturai in Tamil

Advertisement

Samathuvam Magathuvam Katturai in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய கட்டுரை பகுதியில் சமத்துவமே மகத்துவம் கட்டுரை பதிவை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. இவ்வுலகில் பெரும்பாலான இடங்களில் சமத்துவமின்மை தான் இருக்கிறது. அதாவது, இறப்பு, செல்வ வளம் அறிவு, மதம் போன்றவைகளில் சமத்துவமின்மை உள்ளது. எனவே இப்பதிவில் சமத்துவமே மகத்துவம் கட்டுரை பற்றி பார்க்கலாம்.

நாம் புரிந்துகொள்ள வேண்டிய பலவற்றை கட்டுரை வடிவில் தொகுத்து வைத்துள்ளார்கள். உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்லப்போனால் “ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை” ஆகும்.

சமத்துவமே மகத்துவம் கட்டுரை:

முன்னுரை:

சமத்துவத்தை உலக அளவில் சட்டங்களிலும், அரசியல் அமைப்புகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இருந்தாலும், சமத்துவமின்மை என்பது உலக சமுதாயத்தில் தற்போதும் இருந்துகொண்டு தான் வருகிறது. முக்கியமாக  இயற்கை அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டு சமூக ரீதியான பிறப்பு, செல்வ வளம் அறிவு, மதம் ஆகியவற்றில் சமத்துவமின்மை இருக்கிறது. எனவே சமத்துவமின்மை நீங்கும் வகையில் அதாவது, சமத்துவமே மகத்துவம் என்பதை உணரவைக்கூடிய கட்டுரையை பின்வருமாறு பார்க்கலாம்.

சமத்துவம் என்றால் என்ன.?

சமூகத்தில் அனைத்து மக்களும் சமமான உரிமையுடன் நடத்தப்படுவதே சமத்துவமாகும். அதாவது, சமூகத்தில் அனைவருக்கும் உரிமைகள், சலுகைகள் நிலைகள், வாய்ப்புகள் மற்றும், நடத்தப்படும் முறைகள் போன்றவை ஒரே அளவில் இருக்க வேண்டும் என்பதே சமத்துவம் ஆகும்.

சமத்துவம் என்ற சொல் “இக்குவாலிஸ்” (Aequalis) என்ற வார்த்தையில் இருந்து வந்தது. சமத்துவம் எனபதற்கு “நியாயமான” என்பது அர்த்தம் ஆகும்.

சமத்துவம் என்பது “சமமாக நடத்துவது மட்டுமல்ல வெகுமதி அளிப்பதிலும் சமத்துவத்தின் பங்கு” என்பது பேராசிரியர் லஸ்கியின் கூற்று ஆகும்.

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை

திருக்குறளில் சமத்துவம்:

“பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்”

இக்குறளின் விளக்கம் எண்னென்றால், எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒன்றுதான் இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று இல்லை என்பதே ஆகும்.

திருவள்ளுவர் அவர்கள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவத்தின் பெருமை பற்றி அறிந்து அன்றே சமத்துவமே மகத்துவம் என்பதனை திருக்குறள் மூலம் இவ்வுலகிற்கு எடுத்துரைத்துள்ளார்.

சமத்துவத்தின் முக்கியத்துவம்:

சமூக அமைப்புகளையும், அரசுகளையும் எதிர்த்து போராட சமத்துவ முழக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த நவீன காலகட்டத்தில் பணி, செல்வ நிலை மற்றும், சலுகை அடிப்படையில்  பிரிவினைகள் உள்ளன. இவை அனைத்தையுமே சமத்துவ மூலம் மட்டுமே ஒழுங்குப்படுத்த முடியும்.

இவ்வுலகில் சமத்துவம் இல்லையென்றால் நம் நாடு சுதந்திரம் பெற்றதுக்கு எந்தவொரு மதிப்பும் பயனும் இல்லை.

சமத்துவத்திற்கான தடைகள்:

சமத்துவம் என்பது நம் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையாக இருந்தாலும் அதை அடைவதற்கு பல தடைகள் உள்ளது.

அமைப்பு ரீதியாக சார்புகள் ஆழமாக வேரூன்றிய எண்ணங்கள் மற்றும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சமத்துவமின்மையை நிலைநிறுத்துகின்றன.

சமத்துவம் குறித்து ஒழுங்கான விழிப்புணர்வு இல்லாததாலே சமத்துவத்தின் பெருமையை யாரும் அறிவதில்லை.

காலம் பொன் போன்றது கட்டுரை.

முடிவுரை:

“சமத்துவமே மகத்துவம்” என்ற உயர்ந்த தத்துவத்தை மனிதர்கள் கடைப்பிடித்து வாழ வேண்டும். அவ்வாறு கடைப்பிடித்து வாழும் போது சமுதாயம் முன்னேறும், வேற்றுமை மறையும். முக்கியமாக மக்களிடையே ஒற்றுமை உயரும். இவை வீட்டையும், நாட்டையும் உயர்த்தும்.

சமத்துவத்தின் மகத்துவத்தை அறிந்து அனைவரும் செயல்படுங்கள்…!

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement