சேவை துறையின் வளர்ச்சி பேச்சுப்போட்டி கட்டுரை

Advertisement

சேவை துறையின் வளர்ச்சி கட்டுரை தமிழ் – Sevai Thurai Valarchi Katturai in Tamil

அனைத்து நல்ல உள்ளங்களுக்கு அன்பான வணக்கங்கள்.. இன்றைய பதில் பொருளத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் சேவை துறையின் வளர்ச்சியை பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்ப்போம்.

முன்னுரை:

இந்தியாவின் சேவை துறைகளாக வங்கி, அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி, காப்பீடு, போக்குவரத்து, விடுதிகள், சுற்றுலா என்று பலவகையான சேவை துறைகள் முதுகெலும்பாக இருந்து வருகிறது. இந்த துறைகள் அனைத்தும் இந்தியாவிற்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களித்து வருகிறது. இதன் காரணமாக இந்திய அரசு இதனை மேலும் அதிகரிக்க பல நடவடிகளைகளை செயல்படுத்தி வருகிறது. சரி இக்கட்டுரையில் இந்தியாவின் சேவை துரையின் வளர்ச்சியை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

இந்தியாவின் சேவைத்துறை வளர்ச்சி:

உலகளவில் இந்தியா சேவை துறையில் மிகவும் விரைவான வளர்ச்சி கொண்ட இரண்டாவது நாடாக விளங்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறை பிரிவில் இந்திய கடந்த 2012-ஆம் ஆண்டு பிரிவில் முதல் 15 நாடுகளின் பட்டியலில் இந்தியா 12-வது இடத்தை பெற்றிருந்தது.

அந்த சமையத்தில் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்கு 65.9 சதவீதமாக இருந்தது. அதேபோல் வேலைவாய்ப்பு 44 சதவீதமாக இருந்தது. ஆனால் நமது இந்திய நாட்டிலோ இதே ஆண்டில் சேவைத்துறையின் பங்களிப்பு 56.9 சதவிதமாகவும், வேலை வாய்ப்பு 26.1 சதவிதமாக இருந்தன. இது மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயம் அல்லவா.

சேவைதுறைகள் என்பன:

இந்தியாவை பொறுத்தவரையில் கணிசமான தொகை மக்கள் சேவைத்துறையில் வேலைசெய்கின்றனர். இதற்கு போதுமான வருமானம் மற்றும் இதர சலுகைகள் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதனால் மக்கள் இத்துறைகளில் அதிக நாட்டம் காட்டுவதனை அவதானிக்க முடிகிறது.

உதாரணமாக மருத்துவம், கல்வி, போக்குவரத்து, நீதி நிர்வாகம் போன்ற துறைகள் பிரதானமாக இத்துறையினுள் அடங்குகின்றன. இத்துறைகள் சிறப்பாகவும் இயங்கி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.

இந்திய நாட்டின் சுற்றுலா துறை:

நமது இந்திய நாட்டில் சுற்றுலா துறை மிகவும் முக்கியமான மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் துறையாக திகழ்கிறது. சுற்றுலாத்துறை என்பது இந்தியாவின் பெரிய சேவைத் துறையாகும். இது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் 6.23 சதவீதம் பங்களிக்கிறது மேலும் இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 8.78% சதவீதத்தைக் கொண்டுள்ளது.

இந்தியா ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் மேலான அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் 562 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் கொண்டுள்ளது.

சேவைத் துறையின் பயன்கள்:

இந்த சேவைத்துறையானது வளர்ச்சியடைவதன் வாயிலாக உள்நாட்டு மக்களுடைய நலவாழ்வானது அதிகரிக்கின்றது. அசௌகரியங்கள், இலஞ்சம், ஊழல் போன்றன ஒழிக்கப்பட்டு உயர்வான சேவையானது நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

சேவைத்துறை, நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தில், 60% பங்களிப்பை வழங்குகின்றன. அதிகளவிலான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தர உதவுகின்றது.

அவ்வாறே சுற்றுலாதுறை சிறப்பாக இயங்குவதன் மூலமாக ஏராளமான வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு வருகை தரும் சந்தர்ப்பம் உருவாகும் இவ்வாறு பலவகையான பயன்கள் சேவைத்துறையின் வளர்ச்சி மூலமாக கிடைக்கின்றது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை

சவால்கள்:

இந்த சேவைத்துறையில் பலவகையான சவால்கள் காணப்படுகின்றன. பேரிடர் மற்றும் தடை காலங்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இடர்காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் போது அனைத்துவிதமான சேவை சார்ந்த தொழில்களையும் நேரடியாக பாதிக்கிறது.

சேவை சார் தொழில் கடன் கிடைப்பது சிரமம். வரி விதிமுறைகளில் குளறுபடிகள் உள்ளது. சேவைத் துறை சார்ந்த நிறுவனங்களில் ஆடம்பர வரி, இறக்குமதி வரி, சேவை வரி என மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு வரி கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

முடிவுரை:

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை மிக பெரிய பிரச்சனையாகவுள்ளது. சேவைத்துறையானது இத்தகைய பிரச்சனையை ஓரளவேணும் குறைக்கின்றது என்பதே உண்மையாகும். நாட்டின் பொருளாதாரம் உயரும் போது ஏழைகளின் எண்ணிக்கை குறைவடையும். ஆகவே சேவைத் துறை தன்னலம் கருதாது செயற்படும் போது வறுமையற்ற இந்தியாவை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்பதில் அச்சமில்லை.

இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க Tamil Katturai
Advertisement