சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை | சும்மாவா கிடைத்தது சுதந்திரம் பேச்சு போட்டி
Summa Kidaikkavillai Suthanthiram Katturai in Tamil: நாம் அனைவரும் நம் இந்திய நாட்டில் சுதந்திரமாக இருக்கிறோம் என்றால் அதற்கு பல தியாகிகள் தான் காரணம். நம் நாட்டிற்கு சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை. பலபேரின் உயிரை பறித்து கிடைத்தது. எனவே, நாம் அனைவருமே சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல தலைவர்கள் அயராது பாடுபட்டு இரத்தம் சிந்தி இறுதியில் உயிரி தியாகம் செய்துள்ளார்கள். எனவே, இந்தியாவிற்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது என்பதை இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை வாயிலக தெரிந்துகொள்ளுங்கள்.
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை:
குறிப்பு சட்டகம்:
- முன்னுரை
- தியாகத்தின் சாட்சியே சுதந்திரம்
- மகாத்மா காந்தியும் சுதந்திர போராட்டமும்
- கொடி காத்த குமரன்
- இந்திய சுதந்திரத்தில் நேதாஜி
- முடிவுரை
முன்னுரை:
இன்று நம் இந்திய நாட்டில் நாம் அனைவரும் மகிழ்ச்சியாகவும், எந்தவொரு அடிமைத்தனமும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், அதற்கு முக்கிய காரணம் நாட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் தான். நம் ஒவ்வொருவருடைய மகிழ்ச்சிக்கும் பின்னால் பல தியாகிகளின் உயிர் தியாகங்களும் அர்பணிப்புகளும் மறைந்துள்ளன என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை அறிந்துகொள்வதன் மூலமாக மட்டுமே இந்திய சுதந்திர வரலாற்றை பற்றி புரிந்துகொள்ள முடியும்.
சும்மாவா கிடைத்தது சுதந்திரம் கவிதை
தியாகத்தின் சாட்சியே சுதந்திரம்:
ஒரு நாடும் அந்நாட்டில் உள்ள மக்களும் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றால் அது சாதாரணமான விஷயம் இல்லை. அதற்கு பல்வேறுபட்டவர்களின் வீரமும், தியாகமுமே காரணமாகும். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரர்களின் துணிச்சலான செயல் தான் காரணம். மகாத்மா காந்தி, கொடிகாத்த குமரன், பகத் சிங், வ.உ.சி, சுபாஷ் சந்திரபோஸ் என பல தியாகிகள் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக உள்ளனர்.
தனது மண்ணிற்காக தன் உயிரையும் கொடுக்க வேண்டும் என்று, மகாத்மா காந்தி, கொடிகாத்த குமரன், பகத் சிங், வ.உ.சி, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பல தியாகிகள் நினைத்து, போராடியதன் விளைவாகவே சுதந்திரமானது கிடைக்கப் பெற்றதே தவிர நம்மில் பலர் நினைத்தது போல் சுதந்திரமானது சும்மா கிடைக்கவில்லை.
மகாத்மா காந்தியும் சுதந்திர போராட்டமும்:
இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட முக்கியமான தலைவர் மகாத்மா காந்தி அவர்கள். இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்றி நடத்தினார். அதுமட்டுமில்லாமல், சத்தியாக்கிரக போராட்டத்தின் மூலமாக நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவராவார். பல்வேறு இன்னல்களை அனுபவித்து தனது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீர தியாகி காந்தி ஆவார்.
கொடி காத்த குமரன்:
கொடிகாத்த குமரன் என அழைக்கப்படுபவர் திருப்பூர் குமரன் ஆவர். இவர், 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற்ற அணிவகுப்பில் தலைமையேற்றார். தலைமையேற்றியது மட்டுமில்லாமல், அங்கு ஆங்கிலேயரால் நடத்தப்பட்ட போராட்டத்தில் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்து மண்ணில் விழுந்தார். மண்ணில் விழுந்தபோதிலும், தன் இந்திய நாட்டு தேசிய கொடியை தரையில் விழாமல் பற்றிய வண்ணமே கீழே விழுந்தார். தனது உயிரே போனாலும், தன் நாட்டு கொடியை தரையில் விழாமல், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மாமனிதரே திருப்பூர் குமரன்.
இந்திய சுதந்திரத்தில் நேதாஜி:
“ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல” என்று கூறி நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மற்றொரு தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள். இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடிய வீரத் திருமகனாக இன்றும் போற்றப்பட்டு வருகின்றார்.
முடிவுரை:
மகாத்மா காந்தி உட்பட பல வீரர்களின் உயிர் தியாகங்கள் மற்றும் அர்பணிப்பின் விளைவாகவே சுதந்திரம் கிடைத்ததே தவிர சுதந்திரமானது சும்மா கிடைக்கவில்லை. நாடு சுதந்திரம் பெற காரணமாக இருந்த நம் இந்திய தேசத்தின் வீரர்களை போற்றுவதோடும், நம் நாட்டின் பெருமையினை உணர்ந்து செயல்படுவதும் நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |