சுற்றுலா வளர்ச்சி கட்டுரை | Sutrula Valarchi Katturai in Tamil

Advertisement

சுற்றுலா கட்டுரைகள் | Sutrula Patri Katturai in Tamil

பயணங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டர்கள், அதிலும் குழந்தைகளுக்கு வெளியில் செல்வதற்கு மிகவும் பிடிக்கும். மனிதனின் வாழ்க்கை கவலை நிறைந்ததாக உள்ளது, அதிலிருந்து விடுபட்டு ஒரு சில சந்தோசங்களை அனுபவிப்பதற்கு கருவியாக செயல்படுவது சுற்றுலா தான். சுற்றுலா பயணிகள் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகமாகின்றது. நாட்டின் எல்லா துறைகளிலும் சுற்றுலாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஒவ்வொரு நாடுகளுமே சுற்றுலா தளங்களை விரிவுபடுத்த நினைக்கின்றன. அந்த வகையில் நாம் இந்த பதிவில் சுற்றுலா வளர்ச்சி கட்டுரையை படித்தறியலாம் வாங்க.

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
சுற்றுலாவின் முக்கிய நோக்கம்
பயன்கள்
சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்
சுற்றுலா வளர்ச்சி
முடிவுரை

முன்னுரை:

மனிதனின் வாழ்க்கையில் பாதி நேரம் பணம் சம்பாதிப்பதிலும் அதை செலவழிப்பதிலுமே போகிறது, அதிலிருந்து மாறுபட்டு நம்முடைய வாழ்க்கையில் கிடைக்கும் ஒரு சந்தோசமான தருணம் சுற்றுலா தான். இந்த உலகத்தில் உள்ள புதுமைகளையும், அதிசயங்களையும் பார்த்து ரசிப்பதற்கு உதவுவது சுற்றுலா.

சுற்றுலாவின் முக்கிய நோக்கம்:

 • சுற்றுலா என்பது மனிதன் தன்னுடைய வேலை நாட்களில் இருந்து வெளிவந்து, ஓய்வு நேரங்களில் தன்னுடைய சொந்த இடத்தில் இருந்து வெளி இடங்களுக்கு அல்லது வெளி நாடுகளுக்கு சென்று அங்குள்ள புதிய விஷயங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும், புதிதான அனுபவங்களை கற்று கொள்வதற்கும் ஒரு ஆயுதமாக செயல்படுவது.
 • இதனால் தான் பெரும்பாலான மக்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்வதை அதிகம் விரும்புகின்றனர்.

சுற்றுலா பயன்கள்:

 • வாழ்க்கையில் பணம், புகழ், அந்தஸ்து இவற்றை தாண்டி கிடைக்கும் புதுமையான அனுபவங்கள் தான் மிகப்பெரிய மதிப்புகளையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
 • மனிதர்கள் வேலை நெருக்கடி, ஏமாற்றம், மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விலகி சுதந்திரமாக வாழ்வதற்கு சுற்றுலா மிகவும் அவசியம்.
 • மேலும் சுற்றுலா செல்வதால் ஜாதி, மத, வேறுபாடு இல்லாமல் இருப்பதற்கும், நாகரிகம், பண்பாடு வளர்வதற்கும் பயனுள்ளதாக உள்ளது. இன்று அதிக அளவில் உள்ள மக்கள் சுற்றுலா துறையினை நம்பி தொழில்கள் புரிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்:

 • சுற்றுலா என்பது வெளிநாடுகளுக்கு சென்று மட்டும் பார்வையிடுவது அல்ல, நம் நாட்டிலேயே உள்ள அருவிகள், நீர் வீழ்ச்சிகள், மலைத்தொடர்கள், பார்ப்பவரை சிலிர்க்க வைக்கும் கடற்கரைகள் போன்றவற்றை ரசிப்பதும் தான்.
 • பூங்கா, வழிபாட்டு தளங்கள் அங்குள்ள சிற்பங்கள், அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்கள், அழகான நகரங்கள் போன்று சென்று பார்த்து விட வேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றன.

சுற்றுலா வளர்ச்சி:

 • இன்றைய காலகட்டத்தில் வாழும் மானிடர்கள் ஒரு புதிதான விஷயத்தை தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளனர். சமுக வலைத்தளங்கள் சுற்றுலா துறையை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி வருகின்றனர்.
 • வெளி நாட்டு பயணங்கள் மேற்கொள்வதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதிகள் வளர்ச்சி கண்டுள்ளது.
 • இதில் பல நாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது, அதனால் பெரும்பாலான நாடுகள் சுற்றுலா துறையினை விரிவாக்க முயற்சி மேற்கொள்கின்றனர்.
 • இந்தியாவில் உள்ள கடற்கரைகள், சிற்பங்கள், மலைத்தொடர்கள் போன்றவற்றை பார்ப்பதற்கு வெளிநாட்டில் உள்ள பல பேர் வருகை தருகின்றனர்.

முடிவுரை:

 • இப்போது உள்ள மக்களிடம் தேடல் அதிகமாக உள்ளது அதனால் சுற்றுலா துறையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. நம்முடைய வாழ்க்கை நிலையானது அல்ல, எனவே வாழும்போதே வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும்.
 • முடிந்த வரை சுதந்திரமாக இந்த அழகிய உலகை சுற்றி வந்து இரசிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம், அதை உணர்ந்து மக்கள் அனைவரும் ஆனந்தமாக வாழுங்கள்.
கோடைகாலம் கட்டுரை

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement