சுவாமி விவேகானந்தர் கட்டுரை | Swami Vivekananda Katturai in Tamil

Advertisement

சுவாமி விவேகானந்தர் தமிழ் கட்டுரை | Swami Vivekananda Essay in Tamil

தலை சிறந்த சமய தலைவர்களுள் ஒருவர் சுவாமி விவேகானந்தர். ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், ஒடுக்கப்பட்டவர் மற்றும் உதவியற்றோர்களின் நலனுக்காக பாடுபட்ட தலைவர்களுள் மிகவும் முக்கியமானவர். மக்களுக்கு மனதில் தன்னம்பிக்கை உணர்வை வளர்ப்பதற்காக இவர் எழுதிய ஒவ்வொரு பொன்மொழிகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளது. நாம் இந்த தொகுப்பில் சுவாமி விவேகானந்தர் பற்றிய தகவலை கட்டுரை வடிவில் படித்தறியலாம் வாங்க.

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
கல்வி
சீடராக விவேகானந்தர்
மக்களின் முன்னேற்றத்திற்கு உதவினார்
சொற்பொழிவு
முடிவுரை

முன்னுரை:

  • விவேகானந்தர் பற்றிய கட்டுரை: இவர் ஜனவரி 12-ம் தேதி 1863-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் விசுவநாத் தத்தா, தாயாரின் பெயர் புவனேஸ்வரி தேவி ஆகும். ஆன்மிகத்தின் மீது இருந்த பற்றால் தனது பெயரை விவேகானந்தர் என மாற்றி கொண்டார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா என்பதாகும்.

கல்வி:

  • இளம் வயதிலேயே கல்வியின் மீது மிகுந்த ஆர்வமும், நினைவாற்றலையும் கொண்டவர். சிறந்த விளையாட்டு வீரராகவும், இசையும், இசை வாத்தியங்களும் பயின்றவராகவும் இருந்தவர் சுவாமி விவேகானந்தர். இளம் வயதிலேயே தியானம் மேற்கொண்டு பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
  • தனது பள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்பிற்கு பிறகு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் படித்து முடித்தார். மேல்நாட்டு தத்துவங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு போன்றவற்றை முழுமையாக படித்து தெரிந்து கொண்டார். இந்த சமயத்தில் அவருக்கு ஆன்மிகத்தின் மீது சில சந்தேகங்கள் எழ தொடங்கியது.

சீடராக விவேகானந்தர்:

  • சுவாமி விவேகானந்தர் தமிழ் கட்டுரை: தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதற்காக ராமகிருஷ்ண பரமஹம்சரை பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார். பகுத்தறிவு உள்ள விவேகானந்தர் ராமகிருஷ்ணரை உடனே நம்பவில்லை, ஒரு சோதனை நிகழ்த்தி அதன் பின்னர் ராமகிருஷ்ணரையும், ஆன்மிகத்தையும் நம்ப ஆரம்பித்தார்.
  • ராமகிருஷ்ணரின் வழிபாடுகள் யாவும் உருவ வழிபாடாகவும், அருவ வழிபாடாகவும் இல்லாமல் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. இவரின் இறைவழிபாட்டை பார்த்து ராமகிருஷ்ண பரமஹம்சரை சுவாமி விவேகானந்தர் தனது ஆசிரியராக ஏற்றுக்கொண்டார். இராமகிருஷ்ணனின் மறைவிற்கு பிறகு சில சீடர்கள் மற்றும் விவேகானந்தர் துறவியாக மாறினார்.

மக்களின் முன்னேற்றத்திற்கு உதவினார்:

  • Vivekananda Katturai in Tamil: துறவியர்கள் தங்களது அறிவை வளர்ப்பதற்காக மக்களின் நிலையை புரிந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டனர். அப்பொழுது விவேகானந்தர் மக்களின் அறியாமையும், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்ததையும் கண்டு மனம் வருந்தினார். மக்களின் அறியாமையை போக்குவதற்காக சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அந்த சொற்பொழிவு மக்களின் முன்னேற்றத்திற்கு ஊன்று கோலாக இருந்தது.
  • கன்னியாகுமரி கடலின் நடுவே இருக்கும் பாறையின் மீது அமர்ந்து தியானம் மேற்கொண்டார். அந்த இடத்தில் அவரது நினைவை போற்றும் விதமாக விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.

சொற்பொழிவு:

  • தியானத்திற்கு பிறகு 1893-ம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். இவரது சொற்பொழிவை கேட்ட மக்கள் சிலர் இவரது சீடரானார். பின்னர் நான்கு வருடம் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அப்போது விவேகானந்தா மடம் மற்றும் மிஷன் நிறுவி தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
  • இந்தியா திரும்பியவுடன் தனது மடங்களில் சொற்பொழிவை நிகழ்த்தினார். இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் யாவும் அறியாமையில் இருந்த மக்களை விழிப்புற செய்வதாகவும், இளைஞர்களுக்கு தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படியாகவும் இருந்தது.

முடிவுரை:

  • விவேகானந்தர் கட்டுரை: உலகிற்கு பல சொற்பொழிவுகளையும், பொன்மொழிகளையும் தந்த சுவாமி விவேகானந்தர் அவர்கள் ஜூலை 4-ம் தேதி 1902-ம் ஆண்டு பேலூரில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
  • அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது, இவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் இவருடைய பொன்மொழிகள் இன்று உள்ள மக்களின் வாழ்க்கைக்கு பயன்பட்டுதான் வருகின்றன.
விவேகானந்தர் பொன்மொழிகள்

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement