திருக்குறள் கட்டுரை | Thirukkural Katturai in Tamil

Advertisement

நான் விரும்பும் நூல் திருக்குறள் கட்டுரை

உலக பொதுமறை என்று அனைவராலும் அழைக்கப்பெற்ற ஒரே நூல் திருக்குறள். திருவள்ளுவர் மொத்தமாக 1330 குறட்பாக்களை இயற்றியுள்ளார். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்வழிகளையும் அந்த ஒரே நூலில் குறள் வழியாக நமக்கு எடுத்துரைத்துள்ளார். திருக்குறளானது மொழி, இனம், மதம், சாதி, சமயம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தக்கூடியது. திருக்குறளானது இரண்டு அடிகளை கொண்டது.

திருக்குறள் குறள் வெண்பா என்னும் பாவகையைச் சார்ந்தது. இதனால் தான் இது திருக்குறள் என்று வழங்கப்படுகிறது. திருக்குறளை மூன்று பிரிவுகளாக திருவள்ளுவர் பிரித்து காட்டியுள்ளார். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று பிரித்திருக்கிறார். இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்குறள் நூலின் சிறப்புமிக்க கட்டுரையை இந்த பதிவில் பார்க்கலாம்.

திருக்குறள் சிறப்புகள்

திருக்குறள் கட்டுரை:

பொருளடக்கம்:

1. திருக்குறள் கட்டுரை முன்னுரை
2. திருக்குறளின் பெருமை 
3. உலக பொதுமறை நூலாக விளங்கும் திருக்குறள் 
4. திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் 
5. திருக்குறள் கட்டுரை முடிவுரை

திருக்குறள் கட்டுரை முன்னுரை:

திருக்குறள் நூலை இயற்றியவர் திருவள்ளுவர். நாடு முழுவதும் உலக மக்களால் போற்றக்கூடிய நூல் திருக்குறள். இவர் எழுதிய 1330 குறட்பாக்களிலும் ஒவ்வொரு குறளிலும் தனித்துவமான அர்த்தங்கள் இடம் பெற்றுள்ளது. திருக்குறளை திருவள்ளுவர் 14000 சொற்களில் பாடி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறளின் பெருமை:

திருக்குறளானது மொத்தம் 3 பிரிவுகளை கொண்டுள்ளது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று தனித்தனியாக பிரிந்துள்ளது. 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் 1330 குறள் வெண்பாக்களையும் உடையது. திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக விளங்குகிறது. பேரறிஞர் ஆல்பர்ட் சுவைட்சரும் “நான் படித்தறிந்த அறநெறி நூல்களுள் தலைசிறந்த நூல் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்” என்று கூறியுள்ளார்.

உலக பொதுமறை நூலாக விளங்கும் திருக்குறள்:

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் நூலில் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அடக்கம், வாய்மை, பொறுமை, ஈகை முதலிய பண்புகள் உலக மக்களுக்கு பயன்படும் வகையில் இருந்தது. இல்லறம், துறவறம், அரசியல், அமைச்சியல், நட்பியல், களவியல், கற்பியல் எனப் பகுத்துக்கொண்டு அவர் கூறுவன யாவையும் அவனியோர் அனைவருக்கும் பொதுவானவையே. எந்த சமயத்திற்கும், எந்த மொழியினருக்கும் பொதுவான இறை வழிபாட்டையே திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் அவர் கூறியுள்ளார்.

திருக்குறள் அதன் அர்த்தம்

திருக்குறளின் மொழிபெயர்ப்புகள்:

இவ்வளவு சிறப்புமிக்க திருக்குறள் நூலானது பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் குஜராத்தி, ஹிந்தி, வங்காள மொழி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, மணிப்புரியம், ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமஸ்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 14 மொழிகளிலும், ஆசிய மொழிகளில் அரபி, பர்மிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும், ஐரோப்பிய மொழிகளில் செக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சு மொழி, செருமன், ஹங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, லத்தின், நார்வே மொழி, போலிய மொழி, ரஷ்ய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறள் கட்டுரை முடிவுரை:

பகவத் கீதையானது இறைவன் மனிதனுக்கு வாழ்க்கை நெறியை பற்றி கூறியது. திருவாசகமானது இறைவனுக்கு மனிதன் சொன்னது. ஆனால் மனிதனுக்கு மனிதன் கூறிய ஒரே நூல் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள். திருக்குறள் பெரும்பாலான இந்திய மொழிகளிலும் 170-க்கும் மேற்பட்ட உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் நூலுக்கு பல சிறப்பு பெயர்கள் உண்டு. திருக்குறள் நூலானது உலக மக்களுக்காக இயற்றப்பட்டது. அதனால் திருவள்ளுவர் இயற்றிய 1330 குறட்பாக்களையும் படித்து அதனுடைய கருத்தை தெரிந்துக்கொண்டு வாழ்வை சிறப்பாக பயணியுங்கள்..நன்றி வணக்கம்..!

திருக்குறள் பற்றிய வினா விடை

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement