Tholilnutpa Valarchi Katturai In Tamil
வணக்கம் வாசிப்பாளர்களே! இன்றைய பதிவில் தொழில்நுட்பம் வளர்ச்சி பற்றித்தான் பார்க்கப்போகிறோம். தொழில்நுட்பம் நாளடைவில் வளர்ந்து கொண்டே வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் நாடும் மக்களும் மாறிக்கொண்டே வருகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் நாடு முன்னேற்றம் அடையும். தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு, மனித வளத்தையும் மேம்படுத்துகிறது. எனவே, தொழில்நுட்ப வளர்ச்சி கட்டுரை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
AI தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் யார்..?
தொழில்நுட்ப வளர்ச்சி கட்டுரை:
குறிப்புச்சட்டகம்:
- முன்னுரை
- தொழில்நுட்பம்
- தொழில்நுட்ப வளர்ச்சி என்றால் என்ன
- தொழில்நுட்பத்தின் பிரிவுகள்
- தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள்
- தொழில்நுட்ப வளர்ச்சியின் சவால்கள்
- முடிவுரை
முன்னுரை:
உணவு, உடை, இருப்பிடம் இவற்றுடன் தொழில்நுட்பமும் அடிப்படை தேவையாகிவிட்டது. தற்போது தொழில்நுட்பம் பன்மடங்கு வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. தேவைகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. இது வாழ்க்கையை மிகவும் எளிதாகியுள்ளது.
“மனிதனின் நுண்ணறிவின் வெளிப்பாடே தொழில்நுட்ப வளர்ச்சி”
தொழில்நுட்பம்:
ஒரு மனிதன் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை உள்ள அனைத்து செயல்பாடுகளிலும் தொழில்நுட்பம் காணப்படுகின்றது. தொழில்நுட்பம் என்பது பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவைகளை செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பே ஆகும்.
தொழில்நுட்ப வளர்ச்சி என்றால் என்ன:
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, தொழில்நுட்பம் தொடர்பான புதிய அறிவைப் பயன்படுத்தி, நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். இதன் மூலம், புதிய பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். அறிவியல், பொறியியல், அன்றாட வாழ்வில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி மூலம், பொருட்களை திறம்பட உற்பத்தி செய்ய முடியும். தொழில்நுட்ப வளர்ச்சி மூலம், கற்றலை எளிதாக்க முடியும்.
தொழில்நுட்பத்தின் பிரிவுகள்:
தகவல் தொழில்நுட்பம், உயிர் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், கல்வி, வேளாண்மை தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் எனப் பல் பிரிவுகளை கொண்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள்:
தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் ஏராளம்.
தகவலை அணுகல்: எந்த தகவலையும் இணையத்தில் நொடிப்பொழுதில் பெற்றுவிட முடியும்.
தொடர்பு: தொலைபேசி, இணையம், சமூக வலைத்தளங்கள் போன்ற தொழில்நுட்பங்கள் உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும் உடனடியாக தொடர்புகொள்ள உதவுகின்றன.
சுகாதாரம்: மருத்துவத் துறையில் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறு நோய்களைக் கூட துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிகிறது. செயற்கை உறுப்புகள், மரபணு சிகிச்சை போன்றவை மனித ஆயுளை நீடித்துள்ளன.
கல்வி: இணையதள கல்வி மூலம் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் கற்கலாம்.
வேலை வாய்ப்புகள்: தொழில்நுட்பம் பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு: மனிதர்களின் பல சிக்கலான பணிகளை தானாகவே செய்யும் திறன் கொண்டது.
வணிகம்: இணைய வணிகம் மின் கட்டணம் செலுத்துதல் போன்றவை வாழ்க்கையை எளிமைப்படுத்தியுள்ளன.
வாழ்க்கைத் தரம்: வீட்டு உபயோகப் பொருட்கள், போக்குவரத்து, பொழுதுபோக்கு என அனைத்து துறைகளையும் எளிதாகியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் சவால்கள்:
வேலை இழப்பு: தொழில்நுட்பம் பல தொழில்களை செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படுத்துவதால் பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம்.
தனியுரிமை: சமூக வலைத்தளங்கள் நம் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து பயன்படுத்துகின்றன. இது தனியுரிமைக்கு பெரும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகிறது.
சமூக பிரச்சனைகள்: தொழில்நுட்பம் அதிகப்பயன்பாடு, சமூக விலகல், போதை, இணையதள குற்றங்கள் போன்ற பல பிரச்சனைகளை உருவாகியுள்ளது.
சுற்றுசூழல்: தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
முடிவுரை:
தொழில்நுட்பம் என்பது நாம் வாழும் உலகத்தை மாற்றி அமைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவி. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இரண்டு பக்கங்களைக் கொண்ட நாணயம் போன்றது. இது ஏராளமான நன்மைகளை வழங்கினாலும், அதே நேரத்தில் பல சவால்களையும் எதிர்கொள்ள வைக்கிறது.
5G தொழில்நுட்பம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
| இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |














