துரித உணவு துரித முடிவு கட்டுரை..!

Advertisement

Thuritha Unavu Thuritha Mudivu Katturai In Tamil

பெருநகரங்களில் வாழும் உணவு பழக்கவழக்கம் பெரிதும் மாறிவிட்டது. உணவு முறையில் வாரம் மூன்று அல்லது நான்கு நாட்களில் துரித உணவை (Fast Food – பீட்சா, பர்கர், நூடுல்ஸ்) தான் பெரிதும் எடுத்துக்கொள்கிறார்கள். வீட்டில் சமைத்து சாப்பிடும் உணவு கூட துரித உணவாகத்தான் இருக்கிறது. இப்படி தினமும் துரித உணவை சாப்பிட்டு வருவதனால் ஆரோக்கியம் பெரிதும் பாதிப்பு அடைகிறது.

வளர்ந்து வரும் குழந்தைகள் கூட துரித உணவை சாப்பிட்டு வருவதனால் அவர்கள் உடல் மிகவும் மோசமாகி  விடுகிறது. அன்றாட வாழ்வில் துரித உணவு முறை பெரிய இடத்தை பிடித்துள்ளது. எனவே இந்த பதிவில் துரித உணவு துரித முடிவு கட்டுரை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உடல் எடை அதிகரிக்க உதவும் பானம்..! Weight Gain Foods in Tamil..!

துரித உணவு துரித முடிவு கட்டுரை:

குறிப்புச்சட்டகம்:

  • முன்னுரை 
  • துரித உணவுகள் 
  • துரித உணவுகள் பிரபலமாக காரணங்கள் 
  • துரித உணவால் ஏற்படும் தீமைகள் 
  • கிராமங்களும் துரித உணவும் 
  • முடிவுரை 

முன்னுரை:

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நமது உணவு முறைகளும் பெரிதும் மாறிக்கொண்டே போகின்றன. இன்றைய அறிவியல் வளர்ச்சியில் துரித உணவுகளும் பல விதமாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் துரித உணவுக்கு அடிமையாகிவருகின்றனர். இவற்றை நாம் அதிகம் உண்பதனால் அவைகளால் துரித முடிவே ஏற்படும்.

துரித உணவுகள்:

துரித உணவு என்பது எளிதில் கெடாமலும் விரைவில் தயாரிக்க கூடிய வகையாகவும் உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்களாகும். ஜங்க் ஃபுட்ஸ், நொறுக்குத்தீனி போன்ற உணவு வகைகள் துரித உணவுகள் ஆகும். இன்றைய வேகமான தொழில்நுட்ப யுகத்தில் துரித உணவு சமைக்க அதிக நேரம் எடுப்பதில்லை. இதனால் மக்கள் அதனை விரைவாக சமைத்து சாப்பிடுகிறார்கள்.

துரித உணவுகள் பிரபலமாக காரணங்கள்:

 

  • சமையலுக்கு அதிக நேரம் தேவையில்லை.
  • துரித உணவு விரைவாக கெட்டுப்போவதில்லை.
  • பயணங்களில் எளிதாக கொண்டு செல்ல முடியும்.
  • நாகரீகத்தின் வளர்ச்சி.
  • பெரும்பாலானோர் வீட்டில் ஆண், பெண் இருவரும் பணிக்குச் செல்லுதல்.

துரித உணவால் ஏற்படும் தீமைகள்:

துரித உணவுகள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பல ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன. மேலும் துரித உணவில் மக்களை கவர்வதற்காக பல நிறக் கலவைகளும் சேர்க்கப்படுகின்றன. இதனால் வயிற்று வலி, குடல் புற்றுநோய், உடல் பருமன், அல்சர், நீரழிவு உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. துரித உணவுகள் ஊட்டச்சத்து குறைந்த உணவுகள் ஆகும். இதனைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் உடல் வளர்ச்சி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

கிராமங்களும் துரித உணவும்:

கிராமத்தில் உள்ள மக்களுக்கு துரித உணவுகள் பற்றி அவ்வளவாக தெரியாவிடினும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக துரிது உணவுகள் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. சாட் வகை (Chat Items) உணவுகள் கிராமங்களில் பெரிதும் அறிமுகமாகிவிட்டன. இதனால் ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளும், உணவுப் பழக்க வழக்கங்களும் வெகுவாகப் பாதிப்படைந்து வருகின்றன.

முடிவுரை:

புதிது புதிதாக தேடுவது மனித மனத்தின் இயல்பு என்பதனால் உணவிலும் அந்த தாக்கம் ஏற்படாமல் இல்லை. துரித உணவுகள் ஆரோக்கியமாக இருந்தால் இந்தத் தேடல் நல்லது ஆனால் இது முற்றிலுமாக தீங்கு விளைவிப்பதனால் அதிலிருந்து விலகுவது சிறந்தது.

இந்த உணவை அதிகமாக சாப்பிட்டால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுமாம்..!

இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → Tamil Katturai
Advertisement