ஊட்டச்சத்து பற்றிய கட்டுரை | Uttachathu Katturai in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஊட்டச்சத்து பற்றிய கட்டுரை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.ஊட்டச்சத்து என்பது மனித வாழ்க்கையில் எவ்வளவு இன்றையமையாதது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஊட்டச்சத்துகள் என்பது ஆற்றல் மற்றும் உடல் கூறுகளை அளிக்கும் பொருட்கள் ஆகும். அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் இயற்கையாக விளையக்கூடிய உணவுப்பொருட்களை சாப்பிட்டு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல், நீண்ட ஆயுளுடன் வாழந்தார்கள்.
ஆனால், இக்காலம் ஆனது, அக்காலத்திற்கு அப்படியே தலைகீழாக உள்ளது. வளர்ந்து வரும் காலத்திற்கு ஏற்ப நாம் உன்னையும் உணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்படமும் அதிகரித்து வருகிறது. இதனால், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பல்வேறு நோய்கள் உடலில் ஏற்படுகிறது.
ஊட்டச்சத்து பற்றிய கட்டுரை:
முன்னுரை:
மனித உடலிற்கு தேவையான ஆற்றலையும் சக்திகளையும் அத்தியாவசியான அளிக்கும் உணவுகள் ஊட்டச்சத்துக்கள் என்று அழைக்கப்படுகிறது. மனித உடலை நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் உயிரியல் செயல்பாடுகளை இயக்கவும் உதவுகிறது. இது மனிதனின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலிற்கு தேவையான அளவு ஊட்டசத்துக்கள் கிடைக்காதபோது உடலில் பல்வேறு நோய்களும் உடல் னால குறைபாடுகளும் ஏற்படுகிறது.
ஊட்டச்சத்தின் வகைகள்:
வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் (CHO), புரதங்கள், நீர் மற்றும் நார்ச்சத்துக்கள் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். இந்த ஊட்டசத்துக்கள் அடங்கிய உணவுப்பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்வதன் மூலம், உடலை ஆரோக்கியமாக இயக்கவும், பல்வேறு நோய்களில் இருந்து உடலை பாதுக்காகவும் முடியும்.
புரதம் – புரதச்சத்து ஆனது இறைச்சி, மீன், முட்டை, பால் போன்ற உணவுப்பொருட்களில் அதிகமாக உள்ளது. இது தசை வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.
கொழுப்பு – கொழுப்புச்சத்து ஆனது எண்ணெய், நெய், வெண்ணெய் போன்ற உணவுப்பொருட்களில் அடங்கியுள்ளது. இது உடலிற்கு தேவையான ஆற்றலையும் சக்தியையும் அளிக்கிறது.
கார்போஹைட்ரேட்டுகள்- கிழங்குகள், தானியங்கள் போன்ற உணவு பொருட்களில் அடங்கியுள்ளது.
வைட்டமின்கள் – பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. இது, உடலின் னாய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
ஊட்டசத்துக்களின் முக்கியத்துவம்:
ஊட்டச்சத்துக்கள் உடலின் செயல்பாடுகளை சீராக செயல்பட வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
திசு வளர்ச்சி மற்றும் பராமரிப்பு – உடலின் திசுக்களை வளர்க்கவும் பராமரிக்கவும் தேவையான ஆற்றலை உடலிற்கு அளிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி – உடலில் நோய்களை எதிர்த்து போராடி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
ஆயுட்காலம் – சரியான அளவில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துக்களும் கிடைத்து விட்டால் நீரிழிவு நோய், மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் போன்ற நோய்களில் இருந்து உடலை பாதுகாத்து நீண்ட ஆயுட்காலத்தை அளிக்கிறது.
கல்வி திறன் – உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதன் மூலம் மட்டுமே கல்வி திறன் அதிகரிக்கும்.
ஊட்டச்சத்தின் இன்றைய நிலை:
காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு பொருட்களிலும், உணவு பழக்கங்களிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் அனைத்து வகையான உணவு பொருட்களிலும் கலப்படம் இருப்பதால், உடலிற்கு தேவையான ஊட்டசத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால், ஊட்டசத்து குறைபாடு அதிகரித்துள்ளது. முக்கியமாக குழந்தைகளின் ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அவர்களின் கல்வி வளர்ச்சியையும் பாதிக்கிறது.
முடிவுரை:
ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றி நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும். அறியாதவர்களின் காதிற்கு எடுத்து செல்ல வேண்டும். நாம் வாழும் வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். “நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, முறையான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நீண்ட ஆயுளையும் மகிழ்ச்சியான வாழக்கையையும் பெற முடியும்.
உங்கள் நலனே உங்கள் செல்வம்
நன்றாக வாழ ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுங்கள்
ஊட்டச்சத்தே எமது வாழ்வின் ஆதாரம்
ஊட்டச்சத்து குறைபாடில்லாத உலகை உருவாக்குவோம்! மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வோம்.!
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |