வேலுநாச்சியார் சுதந்திர போராட்ட பங்களிப்பு கட்டுரை | Velu Nachiyar in Tamil Katturai

Advertisement

வேலுநாச்சியார் பற்றி கட்டுரை | Velu Nachiyar Katturai in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வேலுநாச்சியாரை பற்றி கட்டுரை வடிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க. வேலுநாச்சியார் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட வீரமங்கை வேலுநாச்சியார். ஒரு பெண்ணாக இருந்து பல அறிய செயல்களை செய்தவர். எனவே, அவரின் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

இந்திய சுதந்திரம் பெறுவதற்கு தலைவர்கள் மட்டும் காரணம் இல்லை, பல வீரமங்கைகளும் உள்ளனர். அவற்றில் முக்கியமாக குறிப்பிட வேண்டும் என்று சொன்னால் வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்து போரிட்ட முதல் பெண்மணி என்று கூறப்படும் வேலுநாச்சியாரை தான். ஒரு பெண் தைரியசாலியாகவும், துணிவுடனும் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக உள்ளவர். வேலுநாச்சியாரின் புகழை கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வேலுநாச்சியார் வரலாறு கட்டுரை | Velu Nachiyar Speech in Tamil:

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
பிறப்பு
திருமணம்
வேலுநாச்சியாரின் கொள்கை
துணிச்சல்
வெள்ளையனை விரட்டிய வேலுநாச்சியார்
முடிவுரை

 

முன்னுரை:

வேலுநாச்சியார் கட்டுரை தமிழ்

வேலுநாச்சியார் கட்டுரை: சுதந்திர போராட்ட வீரர்கள் என்றவுடன் யாருக்கும் தமிழ்நாட்டில் உள்ள வீரர்கள் பெயர்கள் நினைவுக்கு வரப்போவதில்லை. தமிழ் நாட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் யார் என்று கேட்டால் தான், அனைவரும் சிந்திக்கவே ஆரம்பிக்கிறோம். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் வேலுநாச்சியாரை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

பிறப்பு:

  • Velu Nachiyar Speech in Tamil: இராமநாதபுரத்தில் 1730-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் செல்லமுத்து தேவர், தாயாரின் பெயர் சத்தந்தி முத்தாத்தாள் ஆவார். இவர் சிறு வயதிலேயே கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்கினார்.
  • வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் போன்ற கலையையும் தமிழ், ஆங்கிலம், உருது போன்ற மொழியையும் கற்று தேர்ந்தவர்.

திருமணம்:

  • Velu Nachiyar Speech in Tamil For Students: வேலுநாச்சியாரை ஒரு ஆண் மகன் போல தந்தை வளர்த்து வந்தார். வேலுநாச்சியாருக்கு 16 வயதில் முத்துவடுகநாதருடன் திருமணம் நடந்தது. முத்துவடுகநாதரின் தந்தை சிவகங்கைக்கு ராஜாவாக இருந்தார்.
  • முத்துவடுகநாதர் பல கலைகளையும் கற்று 1750-ம் ஆண்டு சிவகங்கைக்கு ராஜாவாக ஆனார். வேலுநாச்சியாருக்கு ஒரு மகள் பிறந்தாள் மகளின் பெயர் வெள்ளச்சி.

வேலுநாச்சியாரின் கொள்கை:

  • Velu Nachiyar Katturai in Tamil: முத்துவடுகநாதர் உடையத்தேவர் சிவகங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்டாததால், ஆங்கிலேய காலனியர்களோடு நாவாபின் படையும் இணைந்து காளையார் கோயிலில் தங்கியிருந்த முத்துவடுகநாத உடையப்பதேவர் மீது போர் தொடுத்தனர். அந்த போரில் முத்துவடுகநாதர் உயிர் பிரிந்தது.
  • கணவன் இறந்த செய்தியை கேட்ட வேலுநாச்சியார் தனது மகளை அழைத்து கொண்டு பிரதானி தாண்டவராயனும், மருது சகோதரர்களின் உதவியுடன் திண்டுக்கல் அருகில் உள்ள விருப்பாட்சி பாளையத்தில் குடி புகுந்தார்.
  • தன் கணவனையும், நாட்டு மக்களையும் கொன்ற நவாப்பை தண்டிக்க வேண்டும் என்றும், தன் நாட்டை மீட்க வேண்டும் என்று மனதில் ஒரு கொள்கையை புகுத்தி கொண்டார். அதற்கு தக்க சமயம் வரவேண்டும் என்று காத்திருந்தார்.

துணிச்சல்:

  • Velu Nachiyar Essay in Tamil: சிவகங்கையை மீட்க வேண்டுமானால் அவரிடம் போர் வீரர்கள் வேண்டும் என்று எண்ணி மன்னர் ஹைதர் அலியிடம் உதவி கேட்டார்.
  • சிவகங்கை மண்ணை மீட்க தன் தலைமையில் ஒரு போர் குழுவையும், நள்ளியம்பலம் தலைமையில் ஒரு போர் குழுவையும், மருது சகோதரர்கள் தலைமையில் ஒரு போர் குழுவையும் அமைத்து சிவகங்கையை மீட்பதற்கு போர் தொடுக்க தயாராகினார்.
  • நவாப்பிற்கு உதவியாக இருந்தது ஆங்கிலேய அரசு என்பதை உணர்ந்து முதலில் ஆங்கிலேயரை விரட்டி அடிக்க வேண்டும் என்று எண்ணினார்.

வெள்ளையனை விரட்டிய வேலுநாச்சியார்:

  • வேலுநாச்சியார் கட்டுரை: வேலுநாச்சியார் தன் நாட்டை மீட்பதற்காக தனது படைகளை திரட்டி கொண்டு சிவகங்கைக்கு செல்ல தொடங்கினார். வழியில் செல்லும் போது ஆங்கிலேய படைகள் செய்து வைத்திருந்த தடையை தகர்த்து சென்றது வீரமங்கை வேலுநாச்சியாரின் படைகள். குயிலி, என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள்.
  • வேலுநாச்சியார் மேற்கொண்ட அந்த போரில் ஆங்கிலயேர்கள் புறமுதுகிட்டு ஓடினர். இறுதியாக வேலுநாச்சியார் அவர்கள் சிவகங்கையை மீட்டு சிவகங்கையின் அரசவையில் அரசியாக இருந்து ஆட்சி புரிந்தார். சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது.

முடிவுரை:

  • வேலுநாச்சியார் கட்டுரை: நல்ல தலைவனுக்கு அழகு கடினமான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுப்பது. அதை மிகவும் சரியாக செய்தவர் வேலுநாச்சியார் அவர்கள். வேலுநாச்சியாரின் விவேகத்துடன் கூடிய வீரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. இது போல இன்றைய பெண்களும் தைரியத்துடனும், துணிச்சலுடனும் செயல்பட வேண்டும்.
  • பெரும் போராட்டங்களை நடத்தி ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி என்ற பட்டத்தை பெற்ற வேலுநாச்சியார் 25-ம் தேதி டிசம்பர் மாதம் 1796-ம் ஆண்டு இறந்தார்.
வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement