விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு கட்டுரை | Bharathiyar Viduthalai Vetkai Katturai

Advertisement

மகாகவி பாரதியின் சுதந்திர வேட்கை கட்டுரை | Viduthalai Poril Bharathiyar Pangu Katturai

பாரதத்தில் சிறந்த நாடாக விளங்கும் நம் இந்தியா பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்தது. நம்முடைய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள் பலர் உள்ளனர், அதில் மக்களின் அறியாமையை நீக்கி தேச உணர்வை ஊட்டிய பாட்டுக்கொரு புலவர் பாரதி மிகவும் முக்கியமானவர். பாரதியாரின் விடுதலை உணர்வை கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பாரதியும் சுதந்திரமும் கட்டுரை:

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
பிறப்பு
தேசியக்கவி
பாரதியின் விடுதலை உணர்வு
ஒற்றுமை
நாட்டுப்பற்று
முடிவுரை

முன்னுரை:

  • இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர். இருளில் கிடந்த மக்களை வெளிச்சத்திற்கு தனது பேச்சின் மூலம் கொண்டு வந்த ஒரு மாமனிதன் மகாகவி பாரதியார் அவர்கள். சுதந்திர போராட்ட களத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.

பிறப்பு:

  • இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் டிசம்பர் மாதம் 11-ம் தேதி, 1882-ம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தவர். இவருடைய இயற்பெயர் சுப்ரமணியன். இளம் வயதிலேயே தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்.

தேசியக்கவி:

  • இவர் தேசியக்கவி என்று பாராட்டப்படுகிறார், ஏனெனில் போராட்ட காலத்தில் தேசிய உணர்வுகளை ஊட்டும் பல்வேறு கவிதைகளை மக்களுக்கு படைத்து ஒருங்கிணைத்த காரணத்தால் தேசிய கவி என போற்றப்பட்டார்.

மண்ணும் இமயமலை எங்கள் மலையே …!
மாநிலமீதிது போல் பிறிதிலையே …! இன்னறு 
நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே …! இங்கிதன் 
மாண்பிற்கெதிர் எது வேறே  என்று பாடியவர்.

பாரதியின் விடுதலை உணர்வு:

  • மக்கள் அடிமைப்பட்டு இருந்த போது பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியாருக்கு தமிழ்நாட்டில் இருந்த ஆதரவை கண்டு பத்திரிக்கை நடத்த தடை விதித்து அவரை சிறையில் தள்ளினார்கள். அதனை கண்டெல்லாம் பாரதியாரின் விடுதலை உணர்வு கொஞ்சம் கூட குறையவில்லை.
  • இவர் சுதேசமித்திரன் எனும் இதழ்களை நடத்தி வந்தார். இதழ்களை நடத்துவது சாதாரணமான விஷயமாக இருக்கலாம். ஆனால் அதில் அசாதாரமான நிகழ்வை நடத்தி காட்டியவர் பாரதியார். இவர் நாட்டின் சுதந்திரத்திற்காக மட்டுமல்ல மொழி, இனம், சமுதாயம், பொருளாதாரம், பெண் விடுதலை என அனைத்திற்கும் பாடுபட்ட ஒரு உன்னத கவிஞர் மகாகவி அவர்கள்.

மக்களிடம் மொழிப்பற்றை ஊட்டுவதற்காக

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்று பாடினார். பெண்களின் விடுதலைக்காக

’பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்திய பெண்கள்’ என்று புதுமை பெண்ணை படைத்து காட்டினார்.

ஒற்றுமை:

  • நாம் அடிமைப்பட்டு உள்ளோம் என்பதை மறந்து சாதி, இனம், மொழி போன்றவற்றால் மக்கள் பிரிந்து இருந்தனர் அதனை கண்டு

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே”

  • என்று மக்களிடம் ஒற்றுமை உணர்வை வளர்க்க பாடுபட்டார். வேறு நாட்டவரின் பிடியில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் நம்மிடம் ஒற்றுமை இருக்க வேண்டும் ஒற்றுமையே பலம் என்பதை அறிந்து விடுதலை போருக்கு மக்களை முதலில் தயார்படுத்தினார்.

நாட்டுப்பற்று:

  • பிறந்த நாட்டின் மீது நாம் கொள்ளும் தேசப்பற்று நம் தாயின் மீது இருக்கும் பற்றுக்கு சமமாக இருக்கும். நாட்டின் மீது பற்று இருந்தால் தான் தேசத்தை நல்வழிப்படுத்த முடியும் என்பதை மக்களின் மனதில் விதையாக விதைத்தார்.

நாமிருக்கும் நாடு நமதென்று அறிவோம் 
நமக்கே உரிமையாம் என்பதறிவோம் 

  • என்பது எமது பாரதியின் உரிமைக் குரலாக இருந்தது.
  • சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தீர்ப்பதற்காக

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று பாடியவர்.

முடிவுரை:

  • பாமர மக்களுக்கும் தனது கவிதைகளும், கருத்துக்களும் சென்றடைய வேண்டும் என்று மிக எளிய நடையில் தனது கட்டுரைகளை எழுதினார். தமிழ் மொழியின் மீது இவருக்கு இருந்த பற்று காரணமாக

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்

  • என்று போற்றி பாடியுள்ளார். இப்படி நாட்டிற்க்கு நலப்பணிகளை செய்வதையே உயிர்மூச்சாக கொண்டு செயல்பட்ட பாரதியார் அவர்கள் 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி இவ்வுலகை விட்டு விண்ணுலகை அடைந்தார்.

கவிஞன் அழிந்தாலும்..! கவிதை அழிவதில்லை..!

காமராஜர் பற்றி கட்டுரை

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement