வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விவசாயம் பற்றிய கட்டுரை | Vivasayam Patriya Katturai

Updated On: March 25, 2025 6:00 PM
Follow Us:
Vivasayam Katturai in Tamil
---Advertisement---
Advertisement

Vivasayam Katturai in Tamil 

விவசாயம் இல்லையென்றால் இவ்வுலகில் மனிதர்கள் வாழ முடியாது. தொழில்களில் மிகவும் உன்னதமான தொழில் விவசாய தொழில். அனைவருக்கும் உயிர்காக்கும் மருந்து விவசாயம். இவ்வுலகில் எவ்வளவு தொழில்கள் வந்தாலும் என்றும் அழிவில்லாத தொழில் விவசாயம். விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும்.

மனிதனாக பிறந்த அனைவருமே பணத்தை சம்பாதிக்க எத்தனை தொழில்களை தேடினாலும். உயிர்வாழ உணவை தேட விவசாயம் மட்டுமே இருக்கிறது. விவசாயம் தான் ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு. அந்த வகையில் இந்த பதிவில் உலகில் மேன்மையான தொழிலான விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை தொகுப்பை பற்றி இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.

குறிப்புசட்டகம்:

  1. முன்னுரை
  2. விவசாயத்தின் முக்கியத்துவம்
  3. இயற்கைமுறை விவசாயம்
  4. இன்றைய விவசாய முறை
  5. இன்றைய விவசாய முறைகளும் தீமைகளும்
  6. முடிவுரை

முன்னுரை:

“சுழன்றும் ஏர் பின்னது உலகு ஆதலால்
உழன்றும் உழவே தலை”

என்கிறார் வள்ளுவர். அதாவது இந்த உலகம் உழவுத்தொழிலாலேயே செயல்பட்டு கொண்டிருக்கிறது. உலவு தொழில் இல்லாமல் போனால் பசி பட்டினி பஞ்சம் என்பன அதிகரித்து மக்கள் உணவில்லாமல் திண்டாடும் நிலை உருவாகும். பழங்காலங்களில் ஆதி மனிதன் வேட்டையாடி உணவருந்தினர். பின்பு ஆற்றங்கரையோரங்களை அண்டி சில பயிர்களை உருவாக்கி அவற்றின் மூலம் தனது உணவினை பெற்று கொண்டன. இவ்வாறு பயிர்ச் செய்கையுடன் கால்நடை வளர்ப்பும் சேர்ந்த அம்சமே விவசாயம் என்றழைக்கப்படுகிறது.

இந்த உலகத்தில் எத்தனை தொழில்கள் இருந்தாலும் எல்லோர்க்கும் உணவளிக்கும் மேன்மையான தொழிலாக விவசாயம் கருதப்படுகிறது. இது இன்றைக்கு பல பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறது. சரி இந்த கட்டுரையில் விவசாயத்தின் முக்கியத்துவம், பண்டைய இயற்கை விவசாயம், இன்றைய விவசாய முறை மற்றும் இன்றைய விவசாய முறைகளும் தீமைகளும் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

விவசாயத்தின் முக்கியத்துவம்:

மனிதனாக பிறந்த நமக்கு பசி என்ற உணர்வு இருக்கின்ற வரையில் விவசாயம் அழியாது. இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் அவர்கள் இறக்கும் வரை உணவு தேவை. ஆகவே விவசாயம் செய்வதனால் தான் நம் ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்கும்.

நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இடம் பெற வேண்டியது அவசியமாகும். இன்றைக்கு உலகமெங்கிலும் உள்ள வறுமையான பகுதிகளில் உள்ள மக்கள் ஒருவேளை உணவுக்கு கூட வழின்றி பசியால் இறக்கிறார்கள் என்பது உங்கள் யாருக்காவது தெரியுமா? ஆகவே அத்தியாவசியமான விவசாயத்தை கைவிடும் பட்சத்தில் எல்லோருக்கும் இதே நிலை தான் ஏற்படும்.

இதனால் தான் உலக நாடுகள் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக பயிர்ச்செய்கை, பால்பண்ணை, கைத்தொழில், மீன்பிடி ஆகிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. விவசாயத்தை விரிவுபடுத்தும் நோக்கில் விவசாயத்தில் அதிக தொழில்நுட்பங்களை புகுத்தி உணவு உற்பத்தியை அதிகரிக்க முனைந்து நிற்கின்றன.

கடுமையான காலநிலை தன்மைகள், பொருளாதார நெருக்கடி மற்றும் யுத்தம் போன்ற நிலமைகளில் உலகம் உணவு மற்றும் விவசாயத்தினுடைய முக்கியத்துவத்தினை உணர்ந்துகொள்ளும்.

இயற்கைமுறை விவசாயம்:

இயற்கைமுறை விவசாயம் எனப்படுவது எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத மண்ணின் விவசாய முறையாகும். பண்டையகாலம் தொடக்கம் நமது முன்னோர்கள் இயற்கை முறை விவசாயத்தையே மேற்கொண்டனர். இது இயற்கையை சிறப்பாக  பாதுகாப்பதோடு உற்பத்திபண்ணும் உணவு பொருட்கள் மனிதனையும் பாதிக்காத தூய உணவு பொருட்களாக இருந்தன.

இங்கு விவசாயம் நிலம் பராமரிப்பதற்காக எருதுகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றினால் பண்படுத்தப்பட்ட நிலத்தில் கால்நடைகளின் கழிவுகள் மற்றும் தாவர கழிவுகள் மண்ணை வளப்படுத்தி பாதுகாத்தன. இந்த இயற்கை பசளைகள் மண்ணை வளப்படுத்தியதோடு மண்ணையும் பாதுகாத்தன. பயிர்ச்செய்கையில் எஞ்சிய கழிவுகள் விலங்குகளுக்கு உணவாகின. இது ஒரு சுழற்சியாக இடம்பெற்றது.

இப்பயிர்ச்செய்கையில் சேதன பசளைகள் பக்கவிளைவுகளற்ற இயற்கைமுறையிலான கிருமிநாசினிகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் விளைந்த விளைச்சல் பக்கவிளைவுகளற்றதாக காணப்பட்டது. அக்கால மக்கள் நோய்நொடிகளில்லாமல் நீண்டகாலம் வாழ்ந்தார்கள். இம்முறை விவசாயம் இன்றைக்கு மாற்றம் அடைந்து வருகிறது. ஒரு சிலர் தான் இன்னும் பாரம்பரியத்தை பின் பற்றி வருகின்றனர். இம்முறை பின்பற்ற படாமையின் விளைவுகளை நாம் இன்றைக்கு அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.

இன்றைய விவசாய முறைகளும் தீமைகளும்:

இன்றைய விவசாய முறைகள் அதிக லாபம் பெரும் வழியை காட்டுகின்றன. தொழில்நுட்பம் மூலமாக அதிகபரப்பளவில் பயிர்செய்ய முடிகிறது. புதிதாக உருவாகும் நோய்கள், களைகள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால் மனிதர்களுக்கு உயிரியல் ரீதியாக கடத்தப்படும் நோய்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இன்றைய உணவுமுறை நஞ்சாகி விட்டது. இன்றைய விவசாயத்தில் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் அசேதன பசளைகள் மனித உடலில் சேர்ந்து ஏராளமான நோய்களுக்கு காரணமாக அமைகிறது. புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் உருவாகின்றன. பாவிக்கப்பட்டு கழிவாக நீர்நிலைகளை நோக்கி செல்லும் வளமாக்கிகளால் நீர்நிலைகளும் நஞ்சாகின்றது. அளவுக்கு மீறிய மண் பண்படுத்தலால் மண்கட்டமைப்பு சிதைந்து மண்ணரிப்பு போன்ற அபாயநிலைகள் இன்றை விவசாய முறையில் காணப்படுகின்றன.

முடிவுரை:

“அடி காட்டிற்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு” என்ற இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்திற்கிணங்க நடைமுறைக்கு சாத்தியமாக இயற்கையான விவசாய முறைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு இன்றைக்கு மனிதகுலம் தள்ளப்பட்டுவிட்டது.

இன்றைக்கு இளம் வயதிலேயே பலர் தமது வாழ்வை இழக்கிறார்கள். எமது விவசாய முறையும் உணவு பழக்கவழக்கமும் மாறிவிட்டதனால் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன. நாம் இனியாவது எமது மூதாதையர்கள் சொன்ன விடயங்களை புரிந்து கொண்டு நஞ்சில்லாத இயற்கை விவசாய முறைகளை மேற்கொண்டு எமது சந்ததிக்கு வழிகாட்ட வேண்டும். இது நம் ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும்.

காடுகளின் பயன்கள் கட்டுரை

 

இது போன்று பயனுள்ள பலவகையான கட்டுரைகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> Tamil Katturai 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now