சர்வதேச மகளிர் தினம் கட்டுரை | Magalir Thinam Speech in Tamil
மார்ச் மாதம் 08-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் இல்லாமல் இந்த உலகமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அன்றைய காலத்தில் தான் பெண்கள் வீட்டிற்குள்ளையே முடங்கி கிடந்தார்கள். ஆனால் அந்த நிலை தற்போது மாறி பெண்கள் அனைத்து துறையிலும் சாதித்து வருகின்றனர். வாங்க வருகின்ற 8-ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு கட்டுரையை இந்த பதிவில் பார்ப்போம்..
மகளிர் தின சிறப்பு:
பெண்கள் இல்லாமல் இந்த உலகம் தனித்து இயங்க முடியாது என்பது 100% உண்மைதான். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் தான் மகளிர் தினம். வீட்டை விட்டே பெண்கள் அன்றைய காலத்தில் வருவதற்கு யோசிப்பார்கள். அந்த நிலை இப்போது முற்றிலும் மாறி வானில் பறக்கும் அளவிற்கு பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளார்கள் என்பது மிகப்பெரிய விஷயம்.
பெண்களின் தாய்மை:
பெண்கள் தான் ஒரு ஆண்களை வயிற்றில் பத்து மாதம் சுமந்து அவர்களை நல்வழியில் செலுத்தி வைத்தாலும் பெண்களின் பெருமையையும், துயரங்களையும் ஆண்கள் என்றுமே நினைத்து பார்ப்பதில்லை.
மகளிர் தின வரலாறு:
பெண் அடிமைத்தனம் எங்கு இருக்கிறன்றதோ அங்கு தான் பெண் சுதந்திரம் மற்றும் பெண்கள் எழுச்சி தேவைப்படுகிறது. பெண்கள் முன்னேற்றம் மற்றும் சம உரிமை மையமாக வைத்து கி.பி. 1909-ல் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியினர் முதல் முதலாக மகளிர் தினத்தை பிப்ரவரி மாதம் 28ம் தேதி கொண்டாடினர். 1917-க்குப்பின் உலக மகளிர் அமைப்புகள் ஒன்று கூடி மகளிர் தினத்தை மார்ச்-8 என்று கட்டமைத்தனர். மகளிர் தினத்தை பெண்கள் மட்டும் கொண்டாடாமல் ஆண்களும் இணைந்து கொண்டாட வேண்டும். அப்போதுதான் அன்றைய நாள் முழுமை பெறும்.
பள்ளி மாணவர்களுக்கான மகளிர் தின பேச்சு போட்டி கட்டுரை
பெண்களின் குடும்ப பங்கு:
ஆண்களை விட பெண்களுக்கு தான் குடும்ப பங்கு ஆற்றுவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். வெளியில் வேலைக்கு செல்வது மட்டுமே ஆண்களின் பணியாக இருக்கிறது. பெண்களுக்கு பணிக்கு செல்லாவிட்டாலும் அனைத்து இன்னல்களையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள். இத்தகைய பெண்களை போற்றிடவே சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
அனைத்து துறையிலும் பெண்களின் பங்கு:
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை அப்போது காலம் காலமாக இருந்து வந்தது. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழிக்கேற்ப இப்போதுள்ள அனைத்து பெண்களும் கல்வி கற்று சாதனை படைத்துள்ளார்கள். ஆண்கள் மட்டுமே அனைத்து துறையிலும் பணிபுரிந்து வந்த நிலை மாறி பெண்களும் இப்போது விமானத்துறை, ஆசிரிய பணி, கப்பல் துறை, அலுவலக பணிகள், காவல்துறை போன்ற அனைத்து துறையிலும் பங்காற்றி வருகிறார்கள்.
இனிய Womens Day நல்வாழ்த்துக்கள்
பெண்மையை போற்றுவோம்:
பெண்மை தினத்தை போற்றும் விதமாக அன்னை தெரேசா, கல்பனா சாவ்லா, மேரி கியூரி, வீரமங்கை வேலுநாச்சியார், கிரண் பேடி போன்ற வீர பெண்மணிகளின் நினைவு சுவடுகளை ஒருமுறை நாம் திரும்பி பார்ப்போம்.. பெண்களின் முன்னேற்றத்திற்கு எத்தனையோ பெண்கள் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியிருந்தாலும் கூட இன்னும் இன்றைய காலகட்டத்தில் பெண்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறி இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. பெண்களே நாட்டினுடைய கண்கள்.. பெண்களை எப்போதும் ஆண்களுக்கு நிகராக பார்த்தோம் என்றால் பெண்களுக்கு கண்டிப்பாக எந்த பாதிப்பும் ஏற்படாது. பெண்மையை ஆண்கள் எப்போதும் தூற்றாமல் போற்றத்தான் வேண்டும்..
மகளிர் தின ஸ்பெஷல் |
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |