யாதும் ஊரே யாவரும் கேளிர் பேச்சு போட்டி | Yaadhum Oore Yaavarum Kelir Essay in Tamil
கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒற்றை வரி உலகத்தில் உள்ள மக்களிடம் புகழ் பெற்ற ஒரு வார்த்தையாகும். இவர் கணிதத்தில் சிறந்து விளங்கியதால் கணியன் என்ற புனை பெயர் வந்தது. சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் ஒவ்வொன்றுமே ஒரு சிறப்பை கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கவிதை மக்களுக்கு என்ன கருத்தை எடுத்துரைக்கிறது என்பதை கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு சட்டகம்:
முன்னுரை |
ஒற்றுமை |
சமத்துவம் |
சகோதரத்துவம் |
முடிவுரை |
முன்னுரை:
- சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மக்களிடம் பரப்ப வேண்டும் என்பதற்காக இப்பாடலை எழுதினார் கணியன் பூங்குன்றனார் அவர்கள். இந்த உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் சாதி, மதம், இனம் என எந்த பிரிவினையும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதை தான் இந்த பாடல் மூலம் உலக மக்களுக்கு வலியுறுத்துகிறார்.
ஒற்றுமை:
- நம்முடைய சிந்தனை தெளிவாக இருந்தால் நமது செயல்கள் சிறப்பாக இருக்கும். தெளிவான சிந்தனை இருக்கும் போது தான் நிறம், இனம், மொழி என்ற வேறுபாடு நீங்கி உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ முடியும்.
- “உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவில்லாதார்” என்ற குறள் மூலம் திருவள்ளுவர் உலகத்தோடு ஒன்றி வாழத்தெரியாத மக்கள் பல நூல்களை கற்றாலும் அவர்கள் அறிவில்லாதவராகவே கருதப்படுவார்கள் என்று எடுத்துரைக்கிறார்.
சமத்துவம்:
- நம் முன்னோர்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வந்தார்கள், ஆனால் இன்று உள்ள மக்கள் மொழி, மதம், சாதி, ஏழை, பணக்காரன் என பல்வேறு விதமான தடைகளால் பிரிக்கப்பட்டு தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமைகள் மாற வேண்டும் மக்களிடம் மனித நேயம் வளர வேண்டும்.
உலகத்தில் சமத்துவம் நிகழ வேண்டும் என்று சேக்கிழார்
உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்
என்று கூறுகிறார். கம்பர் தன்னுடைய பாடல் மூலம்
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் என்று எடுத்துரைக்கிறார்.
சகோதரத்துவம்:
- இப்போது நாடுகளிடத்தில் போர்களும், வன்மமும் தலைவிரித்தாடுகிறது. இவை நீங்க வேண்டுமெனில் மக்களிடத்தில் சமத்துவம், சமாதானம் அதிகரிக்க வேண்டும். சமத்துவம் மட்டும் இருந்தால் போதாது மானிட குலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் புரிந்துணர்வு மேம்பட வேண்டும்.
- நம்முடைய வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமே இல்லை. நீரில் ஓடும் படகு தத்தளிப்பதை போல தான் மனிதனின் வாழ்க்கையும் உள்ளது. அதனால் இருக்கும் வரை மற்ற மனிதர்களை மதித்து நடக்க வேண்டும்.
- உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் சகோதர, சகோதரிகளே அதே போல உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானதே என்பதை தான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கவிதையின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
முடிவுரை:
- தொழில்நுட்பம் எந்த அளவிற்கு இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து இருந்தாலும் மனிதர்களிடத்தில் மனிதநேயம், ஒற்றுமை குறைவாகவே உள்ளது. அனைவரும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு தான் போராடுகிறோம். எனவே இருக்கும் வரையில் எல்லாவற்றையும் சமமாக பார்ப்போம். இதை தான் கணியன் பூங்குன்றனாரும் தனது கவிதையின் மூலம் எடுத்துரைக்கிறார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது பொருள் |
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |