இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு | Birth of Jesus Christ in Tamil
சாதி மதம் இல்லாமல் அனைவரும் கொண்டாடப்படும் விழாவாக இருக்கிறது கிறிஸ்துமஸ். மார்கழி பெற்றெடுத்த மனிதநேயம் பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறித்தவர்கள் தேவாலயம் சென்று இறை வேண்டல் செய்து அந்த நாளினை சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். அப்படிப்பட்ட இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் அவதரித்த நிகழ்வுகளைப் பார்ப்போம் வாங்க.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு |
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு தமிழ்:
நாசரேத்தின் கன்னி மரியாளுக்கும், யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. ஒருநாள் கடவுளின் தூதர் கபிரியேல், மரியாளின் முன்பு தோன்றினார். ‘அருள் நிறைந்த மரியாளே வாழ்க, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே, ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்…’ என்றார்.
திடீரென்று இந்த அறிவிப்பைக் கேட்டு கலங்கி நின்ற மரியாளை பார்த்து, ‘மரியாளே எதற்கும் அஞ்சாதே, ஆண்டவரின் பூரண அன்பையும் அருளையும் நீர் பெற்றுள்ளீர். திருமணத்திற்கு முன்பு ஆண்டவரின் கிருபையால் ஒரு அதிசயக் குழந்தையைப் பெற்றெடுப்பீர். அந்த குழந்தைக்கு இயேசு என்று பெயர் சூட்டுவையாக என்று கூறினார். அவர்தான் ஆண்டவருடைய குழந்தை. இந்த உலகை ஆளப்போகும் இறைமகன் அவர். அவரது ஆட்சிக்கு மட்டும் முடிவே இருக்காது’ என்றார்.
கன்னி மரியாள்:
வானதூதரை நோக்கி மரியாள் இது எப்படி நடக்கும்? நான் கன்னி ஆயிற்றே’ என்றார். கலங்காதே மரியா இது கர்த்தருடைய குழந்தை’ என்றார். பின்பு மரியாள் உம் வாக்குப்படியே எல்லாம் நடக்கட்டும்’ என்றார். உடனே அங்கிருந்து வானதூதர் மறைந்து சென்றார்.
Christmas decorations ..! கிறிஸ்துமஸ் டெக்கரேஷன் செய்வது எப்படி? |
மரியா திருமணத்திற்கு முன்பே கருவுற்றிருப்பது யோசேப்புக்குத் தெரிய வந்தது. யோசேப்பு என்பவர் நேர்மையாளர், நீதிமான். எனவே மரியாவை இகழ்ச்சிபடுத்த விரும்பாமல், அமைதியாய் இந்த ஒப்பந்ததிலிருந்து விலகிட நினைத்தார்.
இதனைப்பற்றி தனிமையாக அவர் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, வானதூதர் கப்ரியேல் யோசேப்பின் கனவில் வந்தார். ‘தாவீதின் மகனே, மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்ச வேண்டாம். அவள் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான், ஏனெனில் அவர் தம் மக்களை பாவங்களில் இருந்து மீட்டெடுக்கவே இப்படிச் செய்திருக்கிறார்’ என்றார். இதையடுத்து யோசேப்பு தூக்கம் கலைந்து எழுந்து மரியாள் குறித்து தூதர் சொன்னதை கேட்டு அவளை தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
இயேசு பிறந்த பெத்லகேம்:
ஒரு நாள் பெத்லகேம் என்ற நகரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது தன்னுடைய பெயரை பதிவு செய்வதற்காக யோசேப்பு பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்கு சென்றார். அப்போது மரியாளுக்கு திடீரென பிரசவ வலி வந்துவிட்டது. அவர்களுக்கு சத்திரத்தில் இடம் கிடைக்காததால், ஒரு மாட்டுத் தொழுவத்தில் அடைக்கலம் புகுந்தனர். அப்போது, இயேசு கிறிஸ்து ஆட்டு தொழுவத்தில் மானிடராய் பிறந்தார்.
பல மாற்றத்தை ஏற்படுத்திய கிறிஸ்து பிறப்பு:
இயேசு கிறிஸ்து மாடு தொழுவத்தில் பிறந்த போது ‘ஏரோது அரசன் கண் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கண் கலங்கியது என்கிறது விவிலியம். இக்குழந்தையைக் கருவில் சுமக்கிற போது ஒரு சாதாரண பாமரத்தாய் புரட்சிப்பாடல் பாடினார். எனவே தான் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. பிறக்கும் போதே சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய குழந்தை என்று அழைக்கிறோம்.
கிறிஸ்துமஸ் பண்டிகை கட்டுரை |
இந்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவர்கள் அனைவரும் வருடந்தோறும் டிசம்பர் 25-ஆம் தேதி கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவினை முன்னிட்டு டிசம்பர் மாதம் தொடக்கத்திலிருந்தே வீடுகளில் ஸ்டார்களை தொங்கவிட்டும், கிறிஸ்துமஸ் மரங்களை வைத்தும், வீடுகளில் குடில்கள் அமைத்தும் கிறிஸ்து பிறந்த நிகழ்வை நினைவுகூர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |