சிறுவர் கதைகள் தமிழில் | Tamil Story for Kids

Advertisement

குழந்தைகளுக்கான சிறுகதைகள் – Stories for Kids in Tamil

siruvar kathaigal:- பொதுவாக சிறிய குழந்தைகளுக்கு கதை கேட்பதற்கு மிகவும் பிடிக்கும். ஆகவே தினமும் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஏதாவது கதை சொல்லுங்கள் என்று அடம்பிடிப்பார்கள். இருப்பினும் சிலருக்கு கதை சொல்ல தெரியும் சிலருக்கு தெரியாது.. அவற்றிலும் சிலர் எப்படியாவது ஏதாவது ஒரு கதையை குழந்தைக்கு  சொல்லிவிடுவார்கள். சிலர் குழந்தைகளுக்கு கதை சொல்லுவதை விட்டுவிட்டு குழந்தையை டிவி, மொபைல் போன்றவற்றை பார்க்க வைப்பார்கள். மேலும் சிலருக்கு குழந்தைகளுடன் விளையாடி மகிழ கூட நேரம் இருப்பதில்லை. நமக்கு என்ன தான் வேலை இருந்தாலும் வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் சிறிது நேரமாவது விளையாட வேண்டும். விளையட நேரம் இல்லை என்றாலும் குழந்தை உறங்க செல்லும் நேரத்திலாவது ஏதாவது சிறிய கதையினை நீங்களும் கூறி அவர்களை உறங்க வைக்கலாம். அந்த வையில் இந்த பதிவில் குழந்தைகளுக்கான சிறுவர் கதைகள் தமிழில் பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து தங்கள் குழந்தை அல்லது தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்.

சிறுவர் கதைகள் தமிழ் சிறுகதைகள் – சிங்க தோல் போர்த்திய கழுதை – குழந்தைகளுக்கான சிறுகதைகள் – Siruvar Kathaigal

ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் பக்கத்துக் கிராமத்தில் இருந்து ஒரு கழுதை வழி மாறி அந்த காட்டிற்குள் வந்தது. அந்த கழுதை வரும் வழியில் பல விலங்குகள் பயத்துடன் ஓடிக்கொண்டிருந்ததாம். அதில் ஒரு மானும் இருந்தது.

அப்பொழுது அந்த கழுதை மானிடம் ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன? என்று கேட்டது. அதற்கு மான் இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதனை கண்டுதான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம் என்று கூறிவிட்டு சென்றது.

இருப்பினும் கழுதை சிங்கத்தின் வீரத்தை தெரிந்து கொண்டே அந்த காட்டிற்குள் சென்றது. சிறிது தூரம் கடந்து சென்றதில் கழுதை கலைப்படைந்துவிட்டது. பின் கழுதை அந்த காட்டிற்குள் ஒரு ஓடையைப் பார்த்தது.

பின் கழுதை தண்ணீர் அருந்த அந்த ஓடைக்கு சென்றது. அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற விலங்குகளின் தோலை அங்கிருந்துப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.

அதனைப் பார்த்த கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துக் தன் உடன்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுதையும் பார்ப்பதற்கு சிங்கம் போலவே இருந்ததினால் மற்ற விலங்குகளும் கழுதையை சிங்கம் என்று நினைத்து பயந்து ஒதுங்கி சென்றன.

மிருகங்கள் அனைத்தும் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழி விட்டு ஒதுக்குவதை பார்த்த கழுதைக்கு கர்வம் தலைக்கு ஏறியது. சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலவி கொண்டிருந்தது, அப்பொழுது அங்கு ஒரு நரியை பார்க்கிறது.

சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜா, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வரமாட்டேன் என்று கழுதையிடம் கூறியது.

கழுதையும் சிங்கத்தை போல் கர்ஜிக்கணும்னு நினைத்து “ங்கெ ங்கெ” ன்னு கத்தியது. ஆகவே அதோட குரல் அது கழுதையினு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவே இல்லை.

அதுவும் இல்லாம “எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு” என்றது கழுதை.

அதற்கு நரியோ கழுதையைப் பார்த்து முடியாது என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது என்று கூறியது.

கழுத்தையும் அவமானத்தில் தலைகுனிந்தது. அதன் பிறகு தனது வேஷத்தை கலைத்துவிட்டு, தனது உண்மையான உருவத்தில்

இந்த கதையின் நீதி:

நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேஷம் போட்டாலோ அல்லது மற்றவர்கள் போல நடந்து கொள்வதாலோ அவமானம் தான் மிஞ்சும். ஆகவே நாம் நாமாகவே இருப்போம் நன்றி வணக்கம்..!

தன்னம்பிக்கை கதைகள்

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement