ஊமை ராணி யார்?? நந்தினி தந்தை சுந்தர சோழனா? வீரபாண்டியனா? குழப்பமா இருக்கா அப்போ இதைபடிங்க!

Advertisement

ஊமை ராணி யார்? நந்தினி தந்தை யார்? ஏன் அருண்மொழிவர்மனை ஊமை ராணி பாதுகாக்கிறார்? | Who is Oomai Rani in Ponniyin Selvan

Oomai Rani in Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பலருக்கு இருக்கும் பெரும் குழப்பம் எது வென்றால் ஊமை ராணி என்பவர் யார்? என்பது தான். அதாவது இந்த படத்தில் வயதான பெண் யானைமீது அமர்ந்து அருண்மொழிவர்மனை காப்பாற்றுவது போன்று காட்சிகளை காட்டுவார்கள் அவர்கள் தான் ஊமை ராணி. அதேபோல் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அருண்மொழிவர்மன் வந்தியத்தேவன் இருவரும் கப்பலில் நடைபெறும் சண்டையில் சிக்கி தண்ணீரில் மூழ்கிவிடுகிறார்கள். அப்பொழுது உண்மை ராணி அவர்களை காப்பாற்றுவது போல காட்சி வந்து இரண்டாம் பாகம் விரைவில் என டைட்டில் கார்டு வரும். உண்மையில் அருண்மொழிவர்மனை பாதுகாக்கும் அந்த ஊமை ராணி யார்? எதற்காக அவரை பாதுகாக்கிறார்? என்று அந்த படத்தை பார்த்த அனைவருக்கும் குழப்பம் இருக்கிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்னும் ஒரு 8 மாதங்களுக்குள் வந்துவிடும் என்றாலும். ஊமை ராணி என்பர் யார் என்று அறிந்துகொள்ள விரும்பும் நபர்கள் இந்த பதிவை முழுமையாக படியுங்கள். உங்கள் குழப்பம் ஓரளவு தெளியும்.

அருண்மொழிவர்மன்:

அருண்மொழிவர்மன் சிறு வயதில் பொன்னிநதி என்று அழைக்கப்படுகிற காவேரி நதியில் விழுந்துவிடுகிறார். அப்பொழுது ஒரு பெண்ணுடைய கரங்களால் அப்பொழுது காப்பாற்றப்படுவார், அந்த நிகழ்வை அனைவரும் பொன்னிநதியே பெண்ணுடைய ரூபத்தில் வந்து அருண்மொழிவர்மனை காப்பாற்றி இருக்கிறது என்று சொல்வாங்க, அதன் காரணமாவே அருண்மொழிவர்மன் பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படுவார். ஆனால் அருண்மொழிவர்மனுக்கு அது பொன்னித்தாய் அல்ல ஊமை ராணி தான் என்று பிற்காலத்தில் தெரியவரும். அவர்கள் தான் அருண்மொழிவர்மனுக்கு ஆபத்து வருபோதேல்லாம் காப்பாற்றுவாங்க. வயதான பெண் யானைமீது அமர்ந்து அருண்மொழிவர்மனை காப்பாற்றுவது போன்று காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் ஊமை ராணி காப்பாற்றுவது போல் வரும். அப்பொழுது தான் அந்த ஊமை ராணியின் முகத்தையே காட்டுவார்கள் அப்பொழுது பார்க்கும்போது பெரிய பழுவேட்டரையர் மனந்திருக்கும் இளையராணியான நந்தினியுடைய வயதான தோற்றம் போல் இருக்கும். ஊமை ராணிக்கு, நந்தினிக்கு ஒரே மாதிரியான தோற்றம் இருக்கும். இவர்கள் ஏன் அருண்மொழிவர்மனை காப்பாற்றுகிறார்கள் என்பதை பற்றி அறிந்திடுவோம்.

அதற்கு முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னெவென்றால் இந்த ஊமை ராணி என்பவர் பொன்னியின் செல்வன் கதையில் பல முடிச்சிகளையும், பல திருப்பங்களையும் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். சரி வாங்க இந்த ஊமை ராணி என்பவர் யார் என்று இப்பொழுது தெரிந்துகொள்வோம்.

மந்தாகினி தேவி | Who is Oomai Rani in Ponniyin Selvan?

ஊமை தனியின் உண்மையான பெயர் மந்தாகினி தேவி ஆகும். இந்த மந்தாகினி தேவி இலங்கையில் ஒரு படகோட்டும் குடும்பத்தை சேர்ந்தவர். அவர்களுடைய மகள் தான் நந்தினி இவர்கள் இருவருக்கும் முக அமைப்பு ஒரேமாதிரி இருக்கும். ஊமை ராணிக்கு காதும் கேக்காது, வாயும் பேச முடியாது. இந்த ஊமை ராணி அருண்மொழிவர்மனை அடிக்கடி காப்பாற்றுவதற்கு முக்கிய காரணம் என்னெவென்றால்.

ஊமை தேவியும், அருண்மொழிவர்மன் தந்தியான சுந்தர சோழனும் அவர்களுடைய சிறு வயதில் காதல் வயப்பட்டிருப்பார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரும் பிரிக்கக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டு பிரிந்துவிடுவார்கள். இந்த பிரிவை இருவராலும் தாங்கிக்கொள்ள முடியாது.

ஒரு கட்டத்தில் சுந்தர சோழனுக்கும் வானவன் மகாதேவி உடன் திருமணம் ஆகிவிடும். அவர்களுக்கும் மூன்று பிள்ளைகள் பிறந்துவிடுகின்றன அதுதான் ஆதித்திய கரிகாலன், அருண்மொழிவர்மன் மற்றும் குந்தவை.

இப்பொழுது ஓரளவு புரியவந்திருக்கும் ஊமை ராணி அருண்மொழிவர்மனை காப்பாற்றுவதற்கு காரணமே சுந்தர சோழனுடைய சாயலும், தன்மையும் அருண்மொழிவர்மன்மீதும் இருக்கும், அதன் காரணமாகவே மந்தாகினி தேவிக்கு அருண்மொழிவர்மன் மீது அதிக அளவு பாசம் இருக்கும்.

ஊமை ராணியின் பிள்ளைகள்:

ஊமை ராணிக்குமே இரண்டு பிள்ளைகள் இருக்கும் ஒன்று நந்தினி மற்றொன்று பொன்னியின் செல்வன் கதை மற்றும் படத்தில் காட்டப்பட்டிருக்கும் மதுராந்தகன் கதாபாத்திரம்.

நந்தினி ஆழ்வார்க்கடியான் என்பவர் வீட்டில் வளர்ப்பு மகளாக வளர்த்திருப்பாள், அதேபோல் பொன்னியின் செல்வன் நாவலிலும் சரி படத்திலும் சரி மதுராந்தகன் சோழ குடும்பத்தை சேர்ந்த கண்டராதித்தர் மற்றும் செம்பியன் மாதேவி ஆகியவற்றுக்கு பிறந்தவர் போல் கட்டிருப்பாங்க. ஆக இதிலிருந்து நாமக்கு எழும் குழப்பம் என்னவென்றால் நந்தினி எப்படி ஊமை ராணியிடம் இருந்து பிரிந்து ஆழ்வார்க்கடியான் என்பவரிடம் சென்றார்கள், அதேபோல் மதுராந்தகன் ஊமை ராணியிடம் இருந்து பிரிந்து கண்டராதித்தர் மற்றும் செம்பியன் மகாதேவியிடம் எப்படி சென்றார் என்ற கேள்விகள் இருக்கும். அதற்கான விடையையும் இப்பொழுது பார்த்துவிடுவோம்.

மந்தாகினி தேவிக்கு ஒரு சகோதரி இருந்துள்ளார் அந்த சகோதரியின் பெயர் தான் வணியம்மாள் அவர்களுக்கும் காது கேக்காது மற்றும் வாயும் பேசமுடியாது. மந்தாகினியின் பிரதவத்தின் போது வணியம்மாள் தான் கூட இருப்பார்கள். பிரசவத்திற்கு பிறகு நந்தினியையும், மதுராந்தகனையும் விட்டுவிட்டு ஊமை ராணி என்று சொல்லப்படும் மந்தாகினி தேவை அந்த இடத்தைவிட்டு சென்றுவிடுகிறார். ஆக அந்த இரண்டு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு வணியம்மாளுக்கு வருகிறது.

இப்படி மந்தாகினி அவர்களது குழந்தைகளை பெற்றெடுக்கும் போது தான் சுந்தர சோழனுடைய பெரியப்பாவான கண்டராதித்தர் மற்றும் செம்பியன் மாதேவி ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கும். ஆனால் செம்பியன் மாதவிக்கு குழந்தை இறந்து பிறந்தது போல் சொல்லப்படும் இதனால் அவர்கள் படும்துன்பத்திற்கு ஆளாக்குவார்கள்.

இந்த தருணத்தில் தான் சோழ அமைச்சகராக இருந்த அநிருத்தப் பிரம்மராயர் வாணியம்மாளிடம் இருந்த ஆண் குழந்தையான மதுராந்தகனை வாங்கி கண்டராதித்தர் மற்றும் செம்பியன் மகாதேவியிடம் கொடுத்துவிடுகின்றன.

அதேபோல் வணியம்மாளிடம் உள்ள நந்தினியை ஆழ்வாருக்குஅடியானின் அப்பாவிடம் கொடுத்து வளர்க்க சொல்கிறார். இப்படித்தான் மந்தாகினியின் பிள்ளைகளான நந்தினி மற்றும் மதுராந்தகனின் இடம் மாறுபடுகிறது.

இவற்றில் இன்னொரு திருப்பம் என்னெவென்றால் வணியம்மாளிடம் கொடுக்கப்பட்ட செம்பியன் தேவியின் இறந்த குழந்தை என்பது உண்மையாக இருந்திருக்காது. அது வாணியம்மாள் வாங்கிய சில நேரங்கள் கழித்து தான் தெரியவரும். ஆக கண்டராதித்தர் மற்றும் செம்பியன் தேவியின் குழந்தையை வாணியம்மாள் தான் வளர்ப்பார்கள். அந்த ஆண் குழந்தையின் பெயர் தான் சேந்தன் அமுதன்.

(பொன்னியின் செல்வன் பாகம் 1-யில் கூட வந்தியத்தேவனாக கார்த்தி பூவுக்கும் ஒரு நபரை சந்திக்கிற கட்சியை காட்டுவார்கள் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் அஷ்வின் நடித்திருப்பார்).

மதுராந்தகன் சோழ வம்சத்தில் பிறக்காத காரணத்தினால் தான் செம்பியன் மகாதேவி மதுராந்தகனை சோழ மன்னனாக ஆகுவதை தடுப்பார்கள். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் அனைவருக்கும் தெரியவர மதுராந்தகனுக்கு பதில் உண்மையான சோழ வாரிசான சேந்தன் அமுதனை சோழ மன்னராக ஆக்குவார்கள்.

(இவற்றில் ஒரு விஷயத்தை குழப்பிக்கொள்ள வேண்டாம் நிஜ சோழ வரலாற்றில் மதுராந்தகன் என்ற உத்தம சோழன் தான் சோழ வாரிசு. சேந்தன் அமுதன் என்பது கல்கி பொன்னியின் செல்வன் நாவலில் கற்பனையாக உருவாக்கிய கதாபாத்திரம் ஆகும். சுவாரஸ்யத்திற்கா இந்த இரண்டு கதாபாத்திரத்தை கல்கி அவர்கள் வடிவமைத்திருக்கலாம்.)

இந்த பதிவை படித்த வரை உங்களுக்கு ஊமை ராணி, நந்தினி மற்றும் மதுராந்தகன் ஆகியவரை பற்றி ஓரளவு புரிந்திருக்கும். இவற்றிலும் ஒரு குழப்பம் இருந்திருக்கலாம் ஊமை ராணியின் கணவர் யார்? நந்தினி மற்றும் மதுராந்தகனின் தந்தை யார்? என்று.

சிலர் சொல்லப்படுவது என்னவென்றால் சுந்தர சோழன் மற்றும் மந்தாகினிக்கும் பிறந்ததுதான் நந்தினி என்று. சரி வாங்க உண்மையாக நந்தினியின் தந்தை யார் என்பது தான். அதையும் தெரிந்துகொள்வோம் வாங்க..

நந்தியின் தந்தை யார்?

சுந்தர சோழரின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத மந்தாகினி சோழநாட்டுக்கு வந்து சுந்தர சோழனை சந்திக்க முயற்சி செய்கிறார். ஆனால், சுந்தரசோழருக்கு வானவன் மகாதேவியுடன் திருமணமாகி குழந்தைகள் இருப்பதை தெரிந்து கொள்கிறாள். சுந்தர சோழரை சந்திக்க பலமுறை முயன்றும் முடியாமல் போனதால் பித்துபிடித்த பெண்போல அலைகிறாள் மந்தாகினி.

இதனால், பொன்னிநதியில் குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார் மந்தாகினி அப்போது வீரபாண்டியன் அவளை காப்பாற்றி மீண்டும் இலங்கைக்கு அழைத்து செல்கிறார். இதையடுத்து, மந்தாகினியும் வீரபாண்டியனும் திருமணம் செய்து கொள்கிறார்கள் இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் நந்தினி மற்றும் மதுராந்தக தேவரும்.

இந்த உண்மை தெரிந்ததால் தான் நந்தினியும் மதுராந்தகரும் இணைந்து சதிகளை செய்து நாட்டை கைப்பற்ற நினைக்கிறார்கள்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement