Ayyan App Details in Tamil
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஒருமண்டலம் விரதம் இருந்து மார்கழி மாதம் சபரிமலைக்கு செல்வது வழக்கம். இக்காலத்தில் கொட்டும் மழை, குளிர் ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் கேரள வனத்துறை AYYAN என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஐயப்ப பக்தர்கள் வழி முதல் கோயில் பூஜைகள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ள முடிகிறது.
ஆகையால், ஐயப்ப பக்தர்கள் இந்த செயலின் மூலம் என்னென்ன தெரிந்துகொள்ளலாம்.? எப்படி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வழி காட்டும் அய்யன் ஆப்:
பயன்படுத்தும் முறை:
ஐயப்ப பக்தர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை டவுன்லோட் செய்து மொபைல் எண் கொண்டு பயன்படுத்தலாம். மேலும், பல்வேறு மொழியினருக்கு பயன்படும் வகையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த செயலியில் உள்ளது. எனவே, உங்கள் மொழியினை தேர்வு செய்து பயன்படுத்தலாம். காட்டு வழிப்பாதையில் உள்ள QR code ஸ்கேன் செய்தும் இந்த ஆப்பை டவுண்லோட் செய்த கொள்ளலாம். முக்கியமாக இந்த செயலியை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையிலும் பயன்படுத்தி கொள்ளலாம். இதுவரை 1.71 லட்சத்திற்கும் அதிகமான ஐயப்ப பக்தர்கள் இந்த அய்யன் ஆப்பை பயன்படுத்தி வருகிறார்கள்.
2023-ல் அதிகமாக Uninstall செய்யப்பட்ட App எதுவென்று தெரியுமா?
அய்யன் ஆப் மூலம் என்னென்ன தெரிந்து கொள்ளலாம்.?
அய்யன் ஆப் மூலம் கோயில் நடை திறந்திருக்கும் நேரம், செல்லும் வழித்தடங்களில் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் நேரம் தெரிந்துகொள்ளலாம். மேலும், அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள், தங்குமிடம், பொதுக் கழிப்பறைகள் போன்ற விவரங்கள், பெருவழி (எருமேலி – பம்பா – சன்னிதானம்), சிறுவழி, புல்மேடு என ஒவ்வொரு வழித்தடத்திலும் இருந்தும் சன்னிதானம் வரையிலான தூரம் மற்றும் இலவச குடிநீர் விநியோகம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், ஐயப்ப பக்தர்கள் வழித்தடங்களில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதைவை போன்ற விவரங்களும் இந்த ஆப்பில் உள்ளது.
👉எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |