Deleted App Back on My Phone in Tamil
மொபைல் என்ற சாதனம் ஒன்றாக இருந்தாலும் கூட அதனை திறந்து பார்க்கும் போது எண்ணற்ற அம்சங்கள் ஒரு கூடைக்குள் பூக்கள் இருப்பது போல இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொருவரும் அவர் அவருக்கு பிடித்த மாதிரியான ஆப்களை பதிவிறக்கம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் போட்டோ எடுக்க, வீடியோ எடிட்டிங், போட்டோ எடிட்டிங், கேம் விளையாட என இத்தகைய முறையில் ஆப்களை பதிவிறக்கம் செய்து கொள்கிறார்கள். இவ்வாறு எது தேவை என்று பார்த்து பார்த்து ஆப்களை பதிவிறக்கம் செய்தாலும் கூட அதனை சில நேரத்தில் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அன்இன்ஸ்டால் செய்து விடுகிறார்கள். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால் மீண்டும் Playstore-க்கு சென்று அதே ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு செய்யும் போது இதற்காக தனி இன்டர்நெட் சேவை தேவைப்படும். ஆனால் இனி நீங்கள் இவ்வாறு கஷ்டப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால் இன்று Delete செய்த ஆப்பை மீண்டும் எப்படி வரச் செய்வது என்பது பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How do i Recover a Deleted App on My Phone in Tamil:
ஸ்டேப்- 1
முதலில் உங்களது மொபைலில் உள்ள Play Store-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
பின்பு அதில் மேலே வலது பக்கத்தில் தோன்றும் உங்களது Profile பிக்கை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
அடுத்து அதில் தோன்றும் Manage apps & device என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
இப்போது நீங்கள் Install மற்றும் Uninstall செய்த ஆப்கள் அனைத்தும் உங்களுக்கு தோன்றும். அதில் உங்களுக்கு எந்த ஆப் தேவைப்படுகிறதோ அதனை Install என்று கொடுக்க வேண்டும்.
ஸ்டேப்- 5
அடுத்தபடியாக Tap Install and Enable என்று வருவதை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆப் மீண்டும் உங்களது மொபைலிற்கு வந்து விடும்.
5 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் ATM கார்டு ஆக்டிவேட் செய்வது எப்படி தெரியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |