கூகுள் குரோம் இனி இந்த போன்களில் எல்லாம் வேலை செய்யாதாம் தெரியுமா..?

google chrome not supported in tamil

Google Chrome Not Supported in Tamil

ஒரு போன் என்று எடுத்துக்கொண்டால் அதனை நாம் வெறும் அழைப்பிற்காக மட்டும் பயன்படுத்துவது இல்லை. ஏனென்றால் கால்ஸ் பேசும் அம்சம் இல்லாமல் இன்னும் பல்வேறு அம்சங்கள் ஆனது இருக்கிறது. அதிலும் குறிப்பாக கூகுள் குரோம், வாட்ஸப், facebook மற்றும் youtube என இதுபோன்ற செயலிகளை தான் அதிகமாக பயன்படுத்துகின்றோம். அப்படி பார்க்கையில் கூகுள் குரோமிற்கு பயனர்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதுநாள் வரையிலும் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை என்பது அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது அனைத்து போன்களிலும் இயங்காது என்றும், பாதி போன் யூசர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அதனை பற்றிய முழு விவரத்தை பார்க்கலாம் வாங்க.!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கூகுள் குரோம் இனி இந்த பயனர்களுக்கு கிடையாது:

கடந்த 2008-ஆம் ஆண்டில் அறிமுகம் ஆன கூகுள் குரோம் ஆனது வெளியாகினாலும் கூட 2012-ல் தான் ஆண்ட்ராயிடு போன்களில் வர ஆரம்பித்தது. அந்த வகையில் பார்த்தால் தற்போது உடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 10 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளது.

google chrome

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது ஒரு புதிய வெளியீட்டை அறிவித்துள்ளது. அதாவது கூகுள் குரோம் ஆண்ட்ராய்டு 7.0 மற்றும் 7.1 version-ஐ பயன்படுத்தும் யூசர்களின் போனில் இந்த அம்சம் செயல்படாது என்று அறிவித்துள்ளது.

இதன் படி பார்க்கையில் சுமார் 2.6% யூசர்கள் மட்டுமே இந்த version-ல் இருக்கும் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால் 7.0 மற்றும் 7.1 ஆண்ட்ராய்டு யூசர்களுகான கூகுள் குரோமின் கடைசிப் பதிப்பாக குரோம் 119 இருக்கும்.

எனவே 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி வெளியிடப்படும் குரோம் 120 அம்சம் 7.0 மற்றும் 7.1 version யூசர்களுக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

மேலும் திரையின் மேல் இருந்து கீழாக முகவரிப் பட்டியலை இடமாற்ற மற்றொரு புதிய அம்சமும் கிடைக்கிறது. அதாவது Address Bar அம்சமே ஆகும். அதேபோல் இதனை நீங்கள் மிகவும் எளிமையான முறையிலும் பயன்படுத்துக்கொள்ளலாம். அதாவது One Hand Mode என்ற அடிப்படையில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை இல்லாமை மேலும் சில இதர அம்சமும் இதில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வாட்ஸப் சேனனில் மற்றொரு புதிய அப்டேட் வந்தாச்சு என்னானு தெரியுமா 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News