கூகுளின் புதிய கண்டுபிடிப்பு.. உங்கள் இதயத்துடிப்பை நீங்களே கேட்கலாம்..!

Google New Tech ANC Earbuds Heart Rate Monitor

Google New Tech ANC Earbuds Heart Rate Monitor

புதிது புதிதாக கண்டுபிடிக்கும் நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும்  துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் மாற்றங்களையும் கொண்டு வருகிறது. நாம் நேற்றுவரை இரத்த அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் சதவீதத்தை தெரிந்துகொள்ள பரிசோதனை செய்யும் மையம் அல்லது ஹாஸ்பிட்டலுக்கு தான் செல்வோம். ஆனால் இப்போதோ அதனுடைய ஸ்டேட்டஸ் மாறிவிட்டது நமது இதயத்துடிப்பை நாமளே கேட்கலாமாம் இது கூகுளின் புதிய கண்டுபிடிப்பு சரி வாங்க அது என்ன பாத்து குறித்த தகவல்களை நாம் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

கூகுள் நிறுவதம் தற்பொழுது இதய துடிப்பை கண்டறியக்கூட வயர்லெஸ் இயர்போன் வசதியை வழங்கும் முயற்சியில் இருக்கிறது. கூகுள் நிறுவனமும் இதற்காக ஏற்கனவே பல ஆய்வுகளை செய்து சோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

இயர்பட்கள் மற்றும் ஹெட்ஃபோன்கள் மூலம் உங்கள் இதயத் துடிப்பை அறிய உதவும் தொழில்நுட்பத்தை கூகுள் உருவாக்கியுள்ளது. அதாவது நீங்கள் இயர்பட்கள் மற்றும் ஹெட்ஃபோன்களில் பாடல்களைக் கேட்பதுமட்டுமின்றி உங்கள் உடல்நிலையையும் தெரிந்துகொள்ளலாம். கூகுள் விஞ்ஞானிகள் ஆடியோபிளெதிஸ்மோகிராபியை (audioplethysmography/AGP) வெற்றிகரமாக சோதித்துள்ளனர். இதில், அல்ட்ராசவுண்ட் உதவியுடன் ஒருவரின் இதயத் துடிப்பு இயர்பட்ஸ் மூலம் அளவிடப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்களுக்கான ஒரு அப்டேட்டுங்க அதுவும் நம்ம வாட்ஸப்ல என்னனு தெரியுமா..?

இந்த கண்டுபிடிப்பின் கூடுதல் நல்ல விஷயம் என்னவென்றால், இதற்கு கூடுதல் சென்சார் தேவையில்லை. இயர்பட்ஸில் உள்ள Active Noise Cancellation (ANC) தொழில்நுட்பம் போதுமானது. மேலும் இது காதில் எந்த மோசமான விளைவையும் ஏற்படுத்தாது.

APG தொழில்நுட்பத்துடன் கூடிய இயர்பட்கள் வழங்கிய தரவு ECG மற்றும் PPG உடன் ஒப்பிடப்பட்டது. ஏபிஜியுடன் கூடிய இயர்பட்கள் மிகவும் துல்லியமான தரவை வழங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தினர். இதய துடிப்பில் 3.21 சதவீத வித்தியாசமும், இதய துடிப்பு மாறுபாட்டில் 2.70 சதவீத வித்தியாசமும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் அதிக பிழை இல்லை என்பது தெளிவாகிறது.

ஏற்கெனவே நம் பயன்படுத்தப்படும் இயர்பட்கள் மற்றும் ஹெட்ஃபோன்களில் சிறிய மென்பொருள் புதுப்பித்தலின் மூலம் இதயத் துடிப்பைக் கணக்கிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். கூகுள் அதன் வலைதள பதிவின்படி, APG ஆனது active noise canceling உள்ள எந்த ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) ஹெட்ஃபோன்களையும் ஒரு எளிய மென்பொருள் மேம்படுத்தலுடன் ஸ்மார்ட் சென்சிங் ஹெட்ஃபோன்களாக மாற்ற முடியும். பயனர்கள் என்ன செய்தாலும் இது சீராக வேலை செய்கிறது என்று கூறியுள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாட்ஸப்பில் அப்டேட் அள்ளுது.! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News