g pay mobile recharge payment
நீங்க பட்டன் போன் பயன்படுத்தினாலும் சரி, ஸ்மார்ட் போன் பயன்படுத்தினாலும் சரி ரீசார்ஜ் செய்வது அவசியமானது. ரீசார்ஜ் செய்தால் தான் போனை நாம் பயன்படுத்த முடியும். அப்படி இருக்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ரீசார்ஜ் செய்வார்கள். ஒரு 3 வருடத்திற்கு முன்பு வரைக்கும் ரீசார்ஜ் கடைக்கு சென்று தான் ரீசார்ஜ் செய்வார்கள். ஆனால் இன்றைய காலத்தில் தமது மொபைலிலே ரீசார்ஜ் செய்கிறார்கள். gpay, Phonepe பயன்பாடு அதிகம் வந்ததும் யாரும் மொபைல் கடைக்கு சென்று ரீசார்ஜ் செய்வதில்லை. இதில் gpay-யில் ரீசார்ஜ் செய்தால் கட்டணம் வசூலிக்கின்றது அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
gpay-யில் ரீசார்ஜ் செய்தால் கட்டணம்:
மற்ற UPI ஆப்களான Phonepe மற்றும் Paytm ஆப்களில் ரீசார்ஜ் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை போலவே Gpay-யும் கட்டணம் வசூலிக்கிறதாம்.
சமீபத்தில் gpay யூசர் ஒருவர் ஆன்லைனில் கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிப்பதாக பதிவு செய்தார். இவர் 749 ரூபாய்க்கு ஜியோ ப்ரீபெய்டு பிளானை ரீசார்ஜ் செய்துள்ளார். இதற்கு 3 ரூபாய் கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலித்ததாக தெரிவித்தார்.
எவ்வளவு கட்டணம்:
அதாவது 100 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்தால் எந்த விதமான கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படாது.
200 ரூபாய் முதல் 300 ரூபாய்க வரை ரீசார்ஜ் செய்தால் 2 ரூபா வசூலிக்கப்படும்.
300 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 3 ரூபாயும் வசூலிக்கப்படும்.
எந்தெந்த பரிவர்த்தனைக்கு கன்வீனியன்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும்? இந்த மாதத்தின் தொடக்கத்தில் கூகுள் பே அதன் யூசர்களுக்கான சேவை சார்ந்த விதிகளை அப்டேட் செய்தது. அதன்படி புதிதாக கன்வீனியன்ஸ் கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டணங்கள் மொபைல் ரீசார்ஜ்களுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விதமான பரிவர்த்தனைக்கும்பொருந்தலாம் என்று விதிகள் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனை நிறைவடைவதற்கு முன்னர் அதற்கான கட்டணம் என்ன என்பதை யூசர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூகுளின் விதிகளில் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற கட்டணம் வசூலிப்பது முதல் முறையாக gpay-அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் Phonepe, Paytm போன்ற ஆப்களில் வசூலிக்கப்படுகிறது. உணவு ஆர்டர் செய்யும் பிளாட்பார்ம்களில் மேலும் சினிமா தியேட்டரில் டிக்கெட் புக் செய்யும் போதும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
Gpay, Phonepe ஆப்பில் இவ்வளவுக்கு மேல பணம் செலுத்த முடியாதா தெரியுமா உங்களுக்கு
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |