UPI ஆப் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய செய்தி
நம் முன்னோர்களின் காலத்தில் வெளியே செல்ல வேண்டும் என்றால் பணம் இல்லாமல் செல்ல முடியாது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் பர்ஸ், பணம் இல்லாவிட்டாலும் வெளியே செல்லலாம். ஸ்மார்ட் போன் இருந்தால் மட்டும் போதும். ஏனென்றால் ஸ்மார்ட் போனில் UPI ஆப் பயன்படுத்துகிறார்கள். இதை பயன்படுத்தி எங்கே வேண்டுமனாலும் பணம் செலுத்தி கொள்ளலாம். பெட்டி கடை முதல் ஹோட்டல் வரை QR CODE வசதி உள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே UPI ஆப் பயன்படுத்துகிறார்கள். இதை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும். அவை என்ன என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
UPI ஆப் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை:
UPI ஆப்பை ஓபன் செய்யும் போது பின் நம்பர் உள்ளிட வேண்டியிருக்கும். இந்த பின் நம்பரை தற்போது பொது வரைக்கும் மாற்றாமல் பயன்படுத்துகிறார்கள். இப்போ தான் ஞாபகம் வருகிறதா.! நீங்கள் இப்படி ஒரே பின் நம்பரை பயன்படுத்துவதை பாதுகாப்பாக இருக்காது.
அதனால் அடிக்கடி நீங்கள் UPI பின் நம்பரை மாற்றியவது அவசியமானது. UPI பின் மாற்றவில்லை என்றால் நீங்கள் தேவையில்லாத பண பிரச்சனை ஏற்படும். UPI பின் மாற்றுவது எப்படி என்று தெரியவில்லை என்றால் அதற்கான வழிமுறையை கீழே பதிவிட்டுள்ளோம்.
பான் கார்டு தொலைஞ்சு போயிட்டா.. அப்போ புதுசு எப்படி வாங்கனும் தெரியுமா.. |
UPI பின் நம்பரை மாற்றுவது எப்படி.?
முதலில் UPI ஆப்பிற்கு செல்ல வேண்டும், உள்ளே சென்றதும் UPI நம்பரை பதிவிட வேண்டியிருக்கும்.
அதில் PROFILE-யை கிளிக் செய்து settings-கு செல்லவும். பிறகு அதில் உங்கள் Account-யை க்ளிக் செய்ய வேண்டும்.
கிளிக் செய்த பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்து Change UPI pin என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் உங்களது upi பின்னை உள்ளிட வேண்டும், அதன் பிறகு நீங்கள் மாற்ற வேண்டிய பின் நம்பரை பதிவிட வேண்டும். இந்த பின்னை கன்பார்ம் மறுபடியும் பின் நம்பரை உள்ளிட வேண்டியிருக்கும். அவ்ளோ தாங்க UPI பின் நம்பர் change ஆகிவிட்டது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |