how to apply pan card online in tamil
ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு பான் கார்டு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பான் கார்டு மிகவும் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். இது குறிப்பாக வங்கி சம்பந்தமான பணிகளுக்கு இந்த பான் கார்டு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் வேலையில் pf தொகையை வாங்க வேண்டுமென்றால் அதற்கும் பான் கார்டு தேவைப்படுகிறது. இதனை வாங்குவதற்கு பெரும்பாலும் காசு கொடுத்து இ சேவை மையத்தில் அப்பளை செய்வீர்கள். இப்படி காசு கொடுத்து வாங்கு பான் கார்டு ஆனது தொலைந்து போனால் மறுபடியும் காசு கொடுத்து வாங்க முடியாது. இதற்காக நீங்கள் இ சேவை மையத்திற்கு செல்ல தேவையில்லை. நமது போனிலே தொலைந்து போன பான் கார்டை வாங்கி கொள்ளலாம். அதை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Apply Pan Card:
தொலைந்து போன பான் கார்டு அல்லது கிழிந்து போன பான் கார்டு வாங்குவதற்கு இந்த பதிவில் கூறியுள்ள டிப்ஸை Follow பண்ணி வாங்கி கொள்ளலாம்.
முதலில் போனில் Google-கு சென்று அதில் Reprint pan card என்று சர்ச் செய்து கொள்ளவும். சர்ச் செய்த பிறகு அதில் முதலிலே வரும் வலைத்தளத்திற்கு செல்லவும். அதாவது onlineservices.nsdl.com என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.
அதில் சென்றதும் முதலில் உங்களுடைய பான் கார்டின் நம்பரை பதிவிடவும்.
அடுத்து கீழே ஆதார் நம்பரை பதிவிடவும்.
அதற்கு கீழே நீங்கள் பிறந்த தேதியை பதிவிட வேண்டும்.
அதன் பிறகு கீழே captcha என்று இருக்கும் அதை பதிவிட்டு submit கொடுத்தவுடன் எந்த முகவரி சரியாக இருக்கிறதா என்று ஒரு தடவை செக் பண்ணிக்கோங்க. முகவரியை செக் பண்ணியதும் 50 ரூபாய் பண்பாம் செலுத்த சொல்லும். upi பயன்படுத்தி 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
அதன் பிறகு 5 முதல் 7 நாட்களில் பான் கார்டு வந்துவிடும்.
15 நாட்களில் டூப்ளிகேட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி.?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |