ரொம்ப ஈசியா ஆதார் கார்டில் உள்ள போன் நம்பரை மாத்தலாம் எப்படி தெரியுமா..?

Advertisement

How to Change Aadhar Mobile No  

ஆதார் கார்டு என்பது குழந்தை முதல் வயதில் மூத்த பெரியவர்கள் வரை என அனைவருக்கும் கண்டிப்பாக இருக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆகையால் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டில் அவரது புகைப்படம் வைத்து பெயர், பிறந்த தேதி, முகவரி, மற்றும் மொபைல் என இவை அனைத்தும் இருக்கிறது. இவை அனைத்தும் மிகவும் முக்கியமான தகவல் என்பதால் எந்த பிழையும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பலருக்கும் ஒரே ஒரு பிரச்சனை தான் அதிகமாக காணப்படுகிறது. அதாவது ஆதார் அட்டை எடுக்கும் போது ஒரு மொபைல் எண் கொடுத்து இருப்பார்கள். அதன் பிறகு அந்த எண் செயலில் இல்லாமல் இருக்கும். அதனால் இன்று ஆதார் கார்டில் போன் நம்பரை எப்படி மாற்றுவது என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி..?

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் https://www.ippbonline.com என்ற இணையத்தளத்தை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு Service Request என்று கொடுக்கப்பட்டிருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்- 3

 how to change mobile number in aadhar at home in tamil

Non-IPPB என்பதை கிளிக் செய்து அதன் பிறகு Doorstep Banking என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

இதற்கு அடுத்தப்படியாக ஆதார்-மொபைல் அப்டேட் என்று கொடுக்கப்பட்டிருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்- 5

aadhar card mobile number update form online tamil

அதன் பின்பு உங்களுக்கான ஒரு பக்கம் தோன்றும், அந்த பக்கத்தில் உங்களது விவரங்கள் மற்றும் மாற்ற வேண்டிய மொபைல் எண்ணை கொடுத்து Submit என்று கொடுக்கப்பட்டிருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்களது வேலை முடித்துவிட்டது. உங்கள் வீட்டிற்கு வந்து ஆதார் பயோமெட்ரிக்ஸ் பதிவு மற்றும் KYC செயல்முறையை நிறைவு செய்வார். அதன் பின்பு உங்களது ஆதார் கார்டில் மொபைல் எண் மாற்றப்படும்.

Gpay-யில் ரீசார்ஜ் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம் எவ்வளவு தெரியுமா. 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement