வாட்சப் சேனல் அப்டேட் வந்ததால் ஸ்டேட்டஸ் நேராக தெரிகின்றதா.!

Advertisement

வாட்சப்பில் சேனல் அப்டேட்டால் ஸ்டேட்டஸ் தெரியமாட்டிங்குதா

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பயன்படுத்த கூடிய சமூக வலைத்தளமாக வாட்சப் இருக்கிறது. இந்த வாட்சப் ஆனது எளிதில் பயன்படுத்தப்படும் வகையில் ஈசியாக இருக்கிறது. இதில் மெசேஜ், வாய்ஸ் கால், வீடியோ கால் போன்றவை பேசும் வசதிகள் இருக்கிறது.

இந்த வாட்சப் ஆனது பயனர்களை மகிழ்விக்கும் வகையில் பல விதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வந்த அப்டேட் தான் சேனல் அப்டேட். இந்த அப்டேட் சிலருக்கு நன்மையும், தீமையும் உள்ளதாக இருக்கிறது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

Whatsapp Web-ன் பயன்கள்!!

How to Change WhatsApp Status to Old Style in New Update:

வாட்சப் சேனல் அப்டேட் மூலம் ஸ்டேட்டஸ் அனைத்தும் நேராக தெரிந்தது. இதனால் பலரும் ஸ்டேட்டஸ் பார்ப்பதற்கு எரிச்சல் அடைந்தார்கள். ஏனென்றால் நமக்கு எல்லாருடைய ஸ்டேட்டஸ் பார்ப்பதற்கு நேரம் இருக்காது. அதனால் முக்கியமானவர்களின் ஸ்டேட்டஸ் மட்டும் சர்ச் பாரில் பெயரை சர்ச் செய்து அவருடைய ஸ்டேட்டஸ் மட்டும் பார்ப்போம். இந்த சேனல் அப்டேட் வந்த பிறகு யாருடைய ஸ்டேட்டஸ் பார்ப்பதில்லை. சொல்லப்போனால் அந்த பக்கத்திற்கே போகவில்லை என்றே சொல்லலாம்.

அதனால் தான் இந்த பதிவில் பழையமாதிரி ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

ஸ்டேப்: 1

முதலில் உங்களுடைய வாட்ஸப்பை ஒபன் செய்து ஸ்டேட்டஸ் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் நீங்கள் யாருடைய சேனல் ஆவது Follow செய்து கொண்டிருப்பீர்கள்.

வாட்சப்பில் சேனல் அப்டேட்டால் ஸ்டேட்டஸ் தெரியமாட்டிங்குதா

 

ஸ்டேப்: 2

நீங்கள் யார் யாருடைய சேனல் எல்லாம் Follow செய்து கொண்டிருக்கிறீர்களோ அவர்களுடைய சேனலிற்கு செல்ல வேண்டும். அதில் மேற்பகுதியில் மூன்று புள்ளிகள் இருக்கும். அதை கிளிக் செய்து Unfollow செய்து விட வேண்டும்.

ஸ்டேப்: 3

அதன் பிறகு வாட்சப் ஸ்டேட்டஸ் பார்த்தால் பழையமாதிரி இருக்கும் ட்ரை பண்ணி பாருங்கள் நண்பர்களே.! உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்.

Realme, OPPO, OnePlus போன் யூஸ் பண்றிங்களா.! இந்த Settings முதல்ல ஆப் பண்ணுங்க

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement