How to Check Aadhar Linked With Phone Number
ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு நபருக்கும் மிகவும் முக்கியமான ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு தனி நபரின் அடையாளத்தை குறிக்கும் விதமாக இந்த கார்டு உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டினை யாரும் முறையாக வைத்து இருப்பது இல்லை. ஏனென்றால் ஆதார் கார்டில் நிறைய பிழைகளும் மற்றும் சந்தேகங்களும் மக்களுக்கு இருந்து வருகிறது. அந்த வகையில் ஆதார் கார்டுடன் மொபைல் நம்பர் இணைப்பது என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் நிறைய நபர்களுக்கு ஆதார் எண்ணுடன் எந்த மொபைல் நம்பர் இணைக்கப்பட்டு இருக்கிறது என்று தெரியாமல் உள்ளது. ஆகவே இதற்கான ஒரு டிப்ஸினை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
குறிப்பு: இதில் சொல்லப்பட்டுள்ள ஆப்பினை உங்களுக்கு விருப்பம் இருந்தாலோ அல்லது தேவைப்பட்டால் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆதார் கார்டில் இணைத்துள்ள போன் நம்பரை கண்டுபிடிப்பது எப்படி..?
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஸ்டேப்- 1
முதலில் நீங்கள் maadhar என்ற ஆப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் உங்களுடைய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.
ஸ்டேப்- 2
இப்போது உங்களுக்கு ஒரு OTP எண் வரும். அதை நீங்கள் கொடுத்து பின்பு Submit என்று கொடுக்க வேண்டும்.
ஸ்டேப்- 3
அடுத்து உங்களுக்கு திரையில் ஒரு பக்கம் தோன்றும். அந்த பக்கத்தில் Verify aadhar என்று குறிப்பிப்பட்டுள்ளதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 4
அதன் பிறகு அதில் உங்களுடைய ஆதார் எண் மற்றும் Captcha-ஐ கொடுத்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது அதில் எந்த மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்கிறதோ அதனுடைய கடைசி 3 எண்கள் தோன்றும்.
ஒருவேளை எந்த எண்ணும் இணைக்கப்படவில்லை என்றால் Null என்று காண்பிக்கும். மேலும் இத்தகைய முறையினை பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய ஆதாரில் எந்த எண் இணைக்கப்பட்டு இருக்கிறது என்றும், மொபைல் நம்பர் இணைக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதையும் கண்டறிய முடியும்.
Gpay யூஸ் பண்றீங்களா அப்போ இந்த ட்ரிக்ஸ் உங்களுக்கு தாங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |