How to Check Dark Web Report on Google in Tamil
பொதுவாக நாம் என்ன தான் வெளியில் பயம் இல்லாத மாதிரி அனைவரிடமும் காட்டிக்கொண்டாலும் கூட உள்ளுக்குள் நமக்கான பாதுகாப்பு பற்றி நினைக்கும் போது சற்று பயமாக தான் இருக்கும். அதிலும் குறிப்பாக இந்த பயம் மொபைல் யூஸ் பண்ணனும் போது தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால் மொபைல் நம்முடைய தேவைக்கு முக்கியமானதாக இருந்தாலும் கூட நமக்கு தெரியாமலே அதில் தகவல்கள் திருடப்படுகிறது. இவ்வாறு நம்முடைய தகவல்கள் திருடப்படும் போது நம்முடைய தகவல்கள் முதல் மற்ற அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு பார்க்கும் பட்சத்தில் நம்முடைய தகவல்கள் பகிரப்பட்டதா என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் Dark Web-ல் உங்களது Email id மற்றும் மொபைல் எண் என இவை அனைத்தும் பகிரப்பட்டுள்ளதா என்று எப்படி தெரிந்துக்கொள்வது என்று தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
டார்க் வெபில் உங்களது இமெயில் ஐடி மற்றும் போன் நபர் உள்ளதா என்று தெரிந்துகொள்வது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் உங்களது கூகுள் குரோமை ஓபன் செய்து கொள்ளுங்கள். பிறகு அதில் எந்த Mail id-யை நீங்கள் செக் செய்ய போகிறீர்களோ அதனை போட்டு கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு Google Account என்பதை Search செய்து கொண்டு அதில் Security என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது தோன்றும் பக்கத்தினை ஸ்க்ரோல் செய்து கொண்டே வந்தால் Run a scan with Google One என்று கொடுக்கப்பட்டு இருப்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
இதனை தொடர்ந்து மீண்டும் உங்களுக்கு Run Scan என்று வரும். ஆகவே இதையும் நீங்கள் கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களது E-mail id மற்றும் போன் நம்பர் என அனைத்தும் லீக் ஆகி உள்ளதா என்று செக் செய்யும்.
ஸ்டேப்- 5
இத்தகைய செக்கிங்கிற்கு பிறகு உங்களுடைய விவரம் எது எல்லாம் லீக் ஆகி உள்ளது என்றும் வரும். ஒருவேளை அப்படி எதுவும் லீக் ஆகி இருந்தால் பாஸ் வேர்டை மாற்றி விடுங்கள். மேலும் Two step verification-னும் செய்து கொள்ளுங்கள்.
5 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் ATM கார்டு ஆக்டிவேட் செய்வது எப்படி தெரியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |