10 நிமிடத்தில் ஆன்லைன் மூலமாக இ-பான் கார்டு பெறுவது எப்படி..?

Advertisement

How to Download E Pan Card Online  

இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அனைவருக்கும் ரேஷன் கார்டு என்பது இருக்கும். அதேபோல் ஒரு வீட்டில் எத்தனை நபர்கள் இருந்தாலும் அவர்களுக்கு என்று தனித்துவமான 12 இலக்கு எண்களை கொண்ட ஆதார் கார்டு ஆனது கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் பான் கார்டு என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நம்முடைய சரியான ஆவணங்களை கொடுத்து ஆன்லைன் மூலமாக பான் கார்டு அப்ளை செய்து வாங்க வேண்டும். ஏனென்றால் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு பான் கார்டு மட்டுமே முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு சிலருக்கு உடனடி தேவைக்காக பான் கார்டு பெற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆகையால் இன்று ஆன்லைன் மூலமாக இ-பான் கார்டு எப்படி பெறுவது என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆன்லைன் மூலம் இ- பான் கார்டு பெறுவது எப்படி..?

ஸ்டேப்- 1

முதலில் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற Web Site-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

e pan download online income tax department

அதன் பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள Instant E-PAN என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

e pan

அடுத்து Get New E-PAN என்பதையும் கிளிக் செய்து விடுங்கள். இப்போது அதில் உங்களின் ஆதார் கார்டு எண்ணை பூர்த்தி செய்து Continue என்று கொடுக்கப்பட்டிருப்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்- 4

online e pan

இதனை தொடர்ந்து உங்களது தொலைபேசிக்கு வரும் OTP-ஐ காப்பி செய்து கொண்டு அந்த விண்ணப்பத்தில் OTP எண்ணை பூர்த்தி செய்து Continue என்பதை கொடுக்க வேண்டும்.

ஸ்டேப்- 5

how to download e pan card online

கடைசியாக Validity Aadhar என்பதை தேர்வு செய்து, Continue என்பதை கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு ஆதார் விவரங்களை சரிபார்த்த பிறகு Accept என்பதை கொடுத்தால் போதும் உங்களின் E-PAN ஆனது காண்பிக்கும் அதனை Download செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் மூலமாக EB Bill Receipt எப்படி டவுன்லோடு செய்வது எப்படி தெரியுமா 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement