How to Enable Data Saver in Instagram
காலையில் எழுந்த நேரம் முதல் இரவு தூங்க செல்லும் நேரம் வரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் மொபைல் தான் பயன்படுத்துகின்றோம். அதுவும் மொபைல் என்றால் சாதாரண மொபைல் அல்ல ஆண்ட்ராய்டு மொபைல் தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். அதுவும் ஒரு நாள் சாப்பாடு இல்லை என்றால் கூட இருந்து விடாமல் ஆனால் மொபைல் இல்லாமல் இருக்க முடியாது என்பது தான் பலரது புலம்பலாக இருக்கிறது. அதிலும் மொபைலில் ஒவ்வொருவரும் வாட்சப், இன்ஸ்ட்ராகிராம், டெலிகிராம் மற்றும் Facebook என இதுபோன்ற சமூக வலைத்தளத்தை தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மேலும் இத்தகைய சமூக செயலியை தினமும் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு இன்டர்நெட் வசதி மிகவும் முக்கியம். ஆனால் இதனை நாம் பயன்படுத்தும் போது நம்முடைய இன்டர்நெட் என்பது எப்படி தான் முடிவடைகிறது என்று நினைக்கும் அளவிற்கு உடனே தீர்ந்து விடும். அதனால் இன்று இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் டேட்டாவை மிச்சம் படுத்துவதற்கான ஒரு டிப்ஸினை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Data Saver in Instagram 2023:
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள இன்ஸ்டாகிராமை ஓபன் செய்து அதில் உங்களுடைய Profile-ஐ கிளிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு அதில் உள்ள Setting and Privacy என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
அடுத்து அதில் Data usage and media quality என்று இருப்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
இப்போது அதில் தோன்றும் Data Saver என்பதை On செய்து கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் On செய்வதன் மூலம் இன்ஸ்ட்ராகிராம் யூஸ் செய்யும் போது டேட்டாவை Save செய்து கொள்ளலாம்.
ஸ்டேப்- 5
இதனை தொடர்ந்து அதில் உள்ள Upload at highest quality என்பதை On செய்வதன் மூலம் இன்ஸ்டாகிராமில் நீங்கள் Upload செய்யும் வீடியோவானது தெளிவாகவும் நன்றாக Quality-யாகவும் இருக்கும்.
எந்நேரமும் Instragram-ல இருப்பவரா நீங்களா.. அப்போ இந்த ட்ரிக்ஸ தெரிஞ்சுக்கோங்க..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |