ஆதார் அட்டை தொலைந்து விட்டால் என்ன செய்வது
12 இலக்கு எண்களை கொண்டுள்ள ஆதார் எண் ஆனது ஒவ்வொரு தனிபருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. ஆகவே இப்படிப்பட்ட ஆதார் அட்டையினை நாம் பாதுகாப்பாகவும், சரியான முறையிலும் வைத்து இருக்க வேண்டும் என்று நாம் அனைவருக்கும் தெரியும். இதன் படி பார்க்கையில் பாதுகாப்பாக வைத்து இருப்பது என்னவோ உண்மையாக இருந்தாலும் கூட யாரும் பிழை இல்லாமல் வைத்து இருப்பது இல்லை. ஏனென்றால் பிறந்த தேதி, பெயர் மற்றும் முகவரி என இத்தகைய விவரங்களில் தான் அனைவரும் அதிகமாக பிழையுடன் ஆதார் அட்டையினை வைத்து இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் விட சிலர் ஆதார் அட்டையினை தொலைத்தும் விடுகிறார்கள். இத்தகைய முறையில் தொலைத்த பின்பு ஆதார் நம்பரை எப்படி பெறுவது என்று சிந்திப்பார்கள். ஆனால் ஆதார் கார்டு இல்லை என்றாலும் கூட உங்களது ஆதார் எண்ணை எளிய முறையில் கண்டுபிடித்த விடலாம். அது எப்படி என்று விரிவாக பதிவில் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Find the Aadhar Card Number in Tamil:
ஸ்டேப்- 1
முதலில் இணையத்தில் UIDAI என்ற இணையதளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
பின்பு அதில் Retrieve Lost or Forgotten EID/UID என்று கொடுக்கப்பட்டிருப்பதை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 3
இதற்கு அடுத்தபடியாக உங்களுக்கு Retrieve Aadhaar Number (UID) அல்லது Retrieve Aadhaar Enrolment Number (EID) என்ற விருப்பங்கள் வரும்.
அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 4
அடுத்தபடியாக அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து Captcha-வையும் பூர்த்தி Send OTP என்று கொடுக்கப்பட்டிருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 5
கடைசியாக உங்களுக்கு வரும் OTP-ஐ பூர்த்தி செய்த உடன் உங்களது இமெயில் ஐடி அல்லது தொலைபேசி எண்ணிற்கும் ஆதார் எண் வந்து விடும்.
இத்தகைய ஆதார் எண்ணை வைத்து நீங்கள் வேண்டுமானாலும் புதிய ஆதார் கார்டு வாங்கிக்கொள்ளலாம்.
வாட்ஸப் யூஸரா இருந்துகிட்டு இந்த புது Settings தெரியலனா எப்புடி பாஸ்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |