உங்கள் லேப்டாப்பின் செயல்திறனை அதிகரிக்க ….

Advertisement

லேப்டாப்பில் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்:

How to improve performance of Labtop: நமது அனைத்து பொருட்களையும் நாம் பாதுகாப்பாகவும், புதியதாகவும் வைத்துக்கொள்ள விரும்புவது மனித இயல்பு. அதுவும் அதிக செலவு செய்து வாங்கிய கணினி மற்றும் laptop போன்றவற்றை பாதுகாப்பதில் நாம் அதிகம் கவனம் காட்டுவோம். பாதுகாப்பது என்பது உங்கள் கணினியை தண்ணீர், தூசிகளில் இருந்து பாதுகாப்பது மட்டும் அல்ல. உங்கள் கணினியை வைரஸ்களிடம் இருந்தும், உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத ஆப்களில் இருந்தும் பாதுகாத்து, உங்கள் கணினியின் செயல் திறனை அதிகரிப்பது.

உங்கள் கம்ப்யூட்டர் சிறப்பாக இயங்க, அதன் செயல்திறனை அதிகரிக்க சிறிது நேரம் செலவிடுங்கள். பழைய மடிக்கணினியோ புதிய மடிக்கணினியோ எதை வாங்கினாலும் நீங்கள் உங்கள் கணினியை மேம்படுத்திக்கொள்ளலாம். அப்படி உங்கள் கணினி திறன்பட செயல்பட சில தகவல்கள்….

உங்கள் மொபைலை பாதுகாக்க 5 வழிகள்

Update the Operating System

update OS
நீங்கள் உங்கள் மடிக்கணினியை எப்போது வாங்கினாலும், உடனே OS ( Update ) புதுப்பிக்கலாம். காரணம் நீங்கள் வாங்கிய laptop தொழிற்சாலையை விட்டு வெளியேறிய காலத்திற்கும் நீங்கள் வாங்கிய காலத்திற்கும் இடையே உள்ள இடைவெளி பல மாதங்களாக இருந்து இருக்கலாம். அதனால் நீங்கள் புதிய மடிக்கணினியின் OS-யை புதுப்பிப்பது மூலம் உங்களுக்கு சமீபத்திய Update பெறுவதற்கு உதவும் மற்றும் உங்கள் மடிக்கணினியின் பாதுகாப்பை உறுதி செய்யும். நீங்கள் மாற்றி அமைத்த OS உங்களால் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியதாக கூட இருக்கலாம்.

Remove Bloatware:

remove bloatware apps

Bloatware என்பது உங்கள் புதிய மடிக்கணினியில் இருக்கும் தேவையற்ற  மென்பொருள். இந்த மென்பொருள் பெரும்பாலும் பயனற்றவை, மேலும் இத்தகைய மென்பொருள் நமது மடிக்கணினியில் இருப்பதால் அவை கணினியின் மெமரியில் அதிக இடத்தை வீணாக்குகின்றது.

விண்டோஸ் மடிக்கணினி அதிக அளவில் இது போன்ற மென்பொருள்களை இணைத்துள்ளனர். அதில் நமக்கு பயன் அல்லாத மென்பொருள்களை நீங்கள் நீக்கி விடலாம். அதன் மூலம் நமது மடிக்கணினியின் திறன் பாதுகாக்கப்படும்.

மொபைலை பாதுகாக்க இதை தெரிஞ்சுக்கோங்க..!

Use Antivirus:

Windows 10 மற்றும் Windows 11 OS, நமக்கு Microsoft மூலம் சந்தைக்கு வருகிறது, இதில் இருக்கும் Antivirus மென்பொருள் பெரும்பாலான பயனர்களுக்கு போதுமானது. மேலும் சில கூடுதல் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்ய விரும்பினால், அத்தகைய திறன் கொண்ட antivirus மென்பொருள்களை உங்கள் மடிக்கணினிக்கு ஏற்றவாறு அமைத்து கொள்வது சிறந்தது.

Mac மற்றும் Linux வகை OSகளில் வைரஸ் தடுப்பு software இருப்பது இல்லை. ஆனால், நீங்கள் விரும்பினால் கூடுதல் பாதுகாப்பிற்காக Mac வைரஸ் தடுப்பு மென்பொருள் அல்லது Linux க்கான Antivirus மென்பொருள்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Power Setting:

power setting
மடிக்கணினிகள் அனைத்தும் பெயர்வுத்திறனைப் பற்றியது என்பதால், பேட்டரி ஆயுள் முதன்மையாக இருக்க வேண்டும். நம் மடிக்கணினியின் பேட்டரி ஆயுளை பொறுத்து நமது செயல்திறன் மாறுபடும். அதனால் பேட்டரியை சேமிப்பது நல்லது. திரையை மிகவும் பிரகாசமாக வைத்திருப்பது பேட்டரி காரணிகளில் ஒன்றாகும் என்பதால், காட்சி பிரகாசத்தை குறைப்பதே மிக முக்கியமான மாற்றம். நமது பார்வை திறனுக்கு ஏற்றவாறு காட்சி பிரகாசத்தின் பயன்பாட்டை வைத்துக்கொள்வது நல்லது.

உங்க போன்ல Side பட்டன் ஒர்க் ஆகலையா..! அப்போ இந்த Settings மறக்காம On பண்ணிடுங்க..!

Security Settings:

புதிய மடிக்கணினியை யாராவது திருடுவது மிகவும் மோசமானது, அதில் உள்ள உங்கள் data -களை வேற யாராவது பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. உங்கள் கணினி திருடப்பட்டாலோ அல்லது உங்கள் Data-வை வேறு ஒருவர் பயன்படுத்தினாலோ அதை சரிப்படுத்த சில நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Windows 10 ஆனது Find My Device எனப்படும் உள்ளமைக்கப்பட்ட அம்சத்தைக் கொண்டுள்ளது, இது “Settings > Update & Security > Find My Device” என்பதில் அமைந்துள்ளது.

Windows 11 இல், “Settings > Privacy & Security > Find My Device” என்பதில் நீங்கள் உங்களது கணினி எங்கு உள்ளது என்று உறுதிசெய்து கொள்ளலாம். தேவைப்பட்டால் உங்கள் Microsoft Account மூலம் உங்கள் லேப்டாப்பைக் கண்டறியலாம்.

Mac OS இல் இதே போன்ற அம்சத்திற்கு, Apple Menu > System Preferences > Apple ID ஐப் பார்வையிடலாம்.

மேல் சொன்ன இரண்டு அம்சங்களும் உங்கள் Microsoft அல்லது Apple கணக்கில் உள்நுழைந்திருக்கும் மற்றொரு சாதனத்தினை கண்டறிய உங்களை அனுமதிக்கின்றது.

மேலே சொன்ன 5 தகவல்களையும் பயன்படுத்தி உங்கள் கணினியை பாதுகாத்து கொள்ளுங்கள். மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களுக்கு பெற எங்கள் பொதுநலம்.காம் தளத்தை பாருங்கள்…

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement